பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொல்லலாமா? சொல்லலாம். திருக்குர்ஆனைத் துவக்குவ்தற்கு அல்லாஹ் கற்றுத்தந்த படி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறினாலும் அதுவும் சரிதான். பிஸ்மில்லாஹ் என்று மட்டும் கூறினாலும் சரிதான். முதல் சொற்றொடரில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதுடன் அவனது இரண்டு பண்புகளையும் சேர்த்துக் கூறி புகழ்வதும் அடங்கியுள்ளது. இரண்டாவது சொற்றொடரில் அல்லாஹ்வின் பெயரைக் கூறி துவங்குதல் மட்டும் உள்ளது. 5376 حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ أَخْبَرَنَا سُفْيَانُ قَالَ الْوَلِيدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنِي […]
Author: Trichy Farook
காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா?
காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா? இல்லை. காலையிலும் மாலையிலும் நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொன்னால் நபியவர்களின்பரிந்துரை கிடைக்கும் என்ற கருத்தில் எந்தச் செய்தியும் இல்லை. ஒவ்வொரு பாங்கிற்குப் பிறகும் நபியவர்களின் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும். இதற்குப்பிறகு நபியவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால்நபியவர்களின் பரிந்துரை கிடைக்கும் என்று பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்தெரிவிக்கின்றது. 577حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ حَيْوَةَ وَسَعِيدِ […]
ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா?
ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா? இல்லை நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதின் சிறப்பை விவரித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. ஆனால் ஸலவாத்துச் சொன்னால் மறந்த விஷயம் நினைவுக்கு வந்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸையும் நாம் பார்க்கவில்லை. யார் உங்களிடம் இதைக் கூறினார்களோ அவர்களிடம் இதற்கு ஆதாரத்தைக் கேளுங்கள்.
இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை?
இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை? அல்முல்கு மற்றும் அஸ்ஸஜ்தா அத்தியாயங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தையும் அஸ்ஸஜ்தா என்ற 32 வது அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹாகிம் அஸ்ஸுனனுல் குப்ரா மற்றும் ஷுஃபுல் ஈமான் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலிஃப் […]
இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையா?
இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையா? இல்லை. ஆணுறுப்பை கழுவிட்டு உளூ செய்ய வேண்டும். ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ – இச்சை நீர் எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர இந்திரியம் அல்ல இது வெளியேறுவதால் குளிப்புக் கடமையாகாது. இச்சை நீர் வெளிப்பட்டால் ஆணுறுப்பை கழுவிட்டு உளூ செய்துகொள்ள வேண்டும். 132 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ عَنْ الْأَعْمَشِ عَنْ مُنْذِرٍ […]
உளு நீங்குவது போல உணர்ந்தால்?
உளு நீங்குவது போல உணர்ந்தால்? காற்றுப்பிரிந்த சப்தம் கேட்டால் அல்லது துர்நாற்றத்தை நுகர்ந்தால் மட்டும் உளு முறிந்துவிட்டது. உளூ முறியாமலேயே உளூ முறிந்துவிட்டது போன்று ஊசலாட்டம் பலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த ஊசலாட்டம் ஷைத்தானால் ஏற்படுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். உளூ முறிந்துவிட்டது என நமக்கு உறுதியாகத் தெரிந்தாலே மீண்டும் நாம் உளூ செய்ய வேண்டும். காற்றுப்பிரிந்த சப்தத்தை நாம் கேட்டால் அல்லது துர்நாற்றத்தை நுகர்ந்தால் உளூ முறிந்துவிட்டது என்று முடிவு செய்யலாம். இதுபோன்ற சான்றுகள் ஏதும் […]
கூட்டு துஆ கூடுமா? கூடாதா?
கூட்டு துஆ கூடாதா? கூட்டு துஆ கூடாது. ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (55) உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான் (அல்குர்ஆன்: 7:55) ➚ وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ (205) உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த […]
கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா?
கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா? செய்யலாம். கண்களை மூடிக்கொண்டு துஆச் செய்யும் போது உள்ளச்சம் ஏற்படுகிறது. ஆனால் மாற்று மதத்தினரின் வழக்கமாக இது உள்ளதால் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (55) உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 7:55) ➚ இந்த […]
ஸலவாத் எப்படி கூறுவது?
ஸலவாத் எப்படி கூறுவது? தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் ஓதும் போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தான் ஓத வேண்டும். மற்ற நேரங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்றோ கூறிக் கொள்ளலாம். பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது (17072) 17200- حَدَّثَنَا يَعْقُوبُ ، حَدَّثَنَا أَبِي ، عَنِ ابْنِ إِسْحَاقَ ، قَالَ : وَحَدَّثَنِي – فِي الصَّلاَةِ عَلَى رَسُولِ […]
இரண்டு வயது குழந்தைக்கு இப்போது அகீகா கொடுக்கலாமா?
இரண்டு வயது குழந்தைக்கு இப்போது அகீகா கொடுக்கலாமா? கூடாது ஏழாம் நாள் தான் கொடுக்க வேண்டும். அது கடந்து விட்டால் கொடுக்க முடியாது. 4149 – أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَا حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ عَنْ سَعِيدٍ أَنْبَأَنَا قَتَادَةُ عَنْ الْحَسَنِ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ غُلَامٍ رَهِينٌ بِعَقِيقَتِهِ […]
கூட்டு குர்பானியில் சமமாக பணம் போட வேண்டுமா?
கூட்டு குர்பானியில் சமமாக பணம் போட வேண்டுமா? இல்லை ஏழு பேர் கூட்டாக ஒரு மாட்டைக் குர்பனி கொடுக்கும் போது சமமாக முதல் இட வேண்டும் என்றோ அவரவர் வசதிக்கேற்ப பங்கெடுக்க வேண்டும் என்றோ நேரடியாக ஹதீஸில் கூறப்படவில்லை. நேரடியாக அவ்வாறு கூறப்படாவிட்டாலும் அதன் பொருள் அனைவரும் சமமாக பங்கெடுக்க வேண்டும் என்பது தான். ஏழாயிரம் மதிப்புடைய மாட்டில் ஒருவர் 500 ரூபாய் மட்டும் கொடுத்தால் அவர் ஏழில் ஒரு பங்கு கொடுத்தவராக மாட்டார். பதினான்கில் ஒரு […]
மன்ஸில் கிதாபில் உள்ள துஆக்களை ஓதலாமா?
எவ்வாறு துஆ கேட்பது? அதாவது நபிகள் நாயகம் காட்டித் தந்த வழி என்ன? அல்லாஹ் எவ்வாறு துஆ கேட்கும்படி சொல்லியிருக்கிறான். பூரணமான விளக்கம் தரவும். காரணம் நான் மன்ஸில் கிதாபைப் பார்த்தேன். குறிப்பிட்ட சூராவை இத்தனை தடவை ஓதினால் உங்கள் துஆவில் பலன் கிடைக்கும் என்று. துஆ என்பது மிகவும் முக்கியம். ஆகவே தெளிவாக விளக்கவும். பதில் : நீங்கள் குறிப்பிட்ட மன்ஸில் என்ற கிதாப் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தொகுக்கப்பட்ட புத்தகம் அல்ல. எந்த ஆதாரமும் […]
தூங்கும் முன் 67வது சூரா ஓதலாமா?
தூங்கும் முன் 67வது சூரா ஓதலாமா? நபியவர்கள் ஓதியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் இரவில் தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தை ஓதாமல் உறங்கமாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹாகிம் அஸ்ஸுனனுல் குப்ரா மற்றும் ஷுஃபுல் ஈமான் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது السنن الكبرى للنسائي – كتاب عمل اليوم والليلة ذكر ما يستحب للإنسان أن يقرأ كل ليلة قبل أن ينام – حديث […]
இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்?
இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன்வழங்குவதாக வாக்களித்த பின் அவனிடம் அதையே வேண்டுவது தேவையற்றது என்று மேலோட்டமாகப் பார்க்கும் போது தோன்றலாம். ஆனால் பிரார்த்தனை செய்வதில் தேவைகளை கோருவது மட்டுமே நோக்கம் இல்லை. வேறு பல நோக்கங்களும் அதனுள் அடங்கியுள்ளன. இறைவன் வாக்களித்ததையே நாம் கேட்டாலும் இறைவன் வாக்கு மாற மாட்டான் என்று புகழ்பாடுதல் அதனுள் அடங்கியுள்ளது. அவன் வாக்களித்ததை நிறைவேற்ற மறுத்து விட்டாலும் அவனை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. […]
தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாமா?
தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாமா? ஓதலாம் 198 حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ قَالَ دَخَلْتُ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا وَرَجُلَانِ رَجُلٌ مِنَّا وَرَجُلٌ مِنْ بَنِي أَسَدٍ أَحْسَبُ فَبَعَثَهُمَا عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجْهًا وَقَالَ إِنَّكُمَا عِلْجَانِ فَعَالِجَا عَنْ دِينِكُمَا ثُمَّ قَامَ فَدَخَلَ الْمَخْرَجَ ثُمَّ خَرَجَ […]
நபியின் கப்ருக்கு சென்றால் என்ன ஓதவேண்டும்?
நபியின் கப்ருக்கு சென்றால் என்ன ஓதவேண்டும்? நாம் பொது மையவாடிக்குச் சென்றால் கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையைத் தான் நபியின் கப்ருக்குச் சென்றால் கூறிக் கொள்ள வேண்டும். இதற்கு என பிரத்யேகமாக எதையும் கூற வேண்டியதில்லை. “அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அஸ்ஸலாமு அலா அஹ்லிலித் […]
கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா?
கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா? சரியில்லை குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமை என்று மார்க்கம் கூறவில்லை. இது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட வணக்கமாகும். இவ்வணக்கத்தை நிறைவேற்றியவருக்கு நன்மை உண்டு. இதைச் செய்யாவிட்டால் குற்றம் ஏதுமில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை உள்ளது. கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். […]
எனக்காக துஆ செய்யுங்கள் என கேட்கலாமா?
எனக்காக துஆ செய்யுங்கள் என கேட்கலாமா? கேட்டகலாம் இறைவனுடைய இடத்தில் பிறரை வைப்பதே இணைவைப்பாகும். நமக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு பிறரிடம் கூறும் போது இறைவனுடைய எந்தத் தகுதியையும் அவருக்கு நாம் வழங்கவில்லை. மாறாக நாம் யாரிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறுகிறோமோ அவரும் அல்லாஹ்வின் அடிமை தான் என்ற கருத்து இந்தக் கோரிக்கையில் அடங்கியுள்ளது. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யுமாறு பிறரிடம் கூறுவது தவறல்ல. பிறருக்காக பிரார்த்தனை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. […]
யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன?
யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன? தனிச்சிறப்பு எதுவும் கூறப்படவில்லை திருக்குர் ஆனில் உள்ள 114 அத்தியாயங்களில் யாஸீன் என்பதும் ஒரு அத்தியாயம் என்பதால் திருக்குர்ஆனுக்கு உள்ள எல்லா சிறப்புகளும் இந்த அத்தியாயத்துக்கும் உண்டு. சில அத்தியாயங்களின் கூடுதல் சிறப்பு குறித்து நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளனர். அது போல் யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு பற்றியும் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானது அல்ல. யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு பற்றி பரவலாக […]
குர்ஆனின் சஜ்தா செய்ய வேண்டிய சஜ்தாவுக்குப் பின் சலாம் உண்டா?
குர்ஆனின் சஜ்தா செய்ய வேண்டிய சஜ்தாவுக்குப் பின் சலாம் உண்டா? இல்லை தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம். இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தா செய்ய வேண்டும்? என்று நாம் பார்த்தால் தற்போது 14 வசனங்கள் ஸஜ்தா வசனங்களாக நடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம். ஆனால் இதற்குச் சான்றாக வைக்கப்படும் […]
சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா?
சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா? இறைவனிடம் பாவமன்னிப்பை வேண்டும் போது நாம் செய்த பாவங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு மன்னிப்பைக் கேட்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. நாம் எத்தனையோ பாவங்களைச் செய்துவிட்டு மறந்து விடுகின்றோம். சில பாவங்களை அவை பாவம் என்று உணராமலேயே செய்கின்றோம். ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டுக் கேட்டால் தான் பாவமன்னிப்புக் கிடைக்கும் என்றால் இத்தகைய பாவங்களுக்கு மன்னிப்பே இல்லை என்று கூறவேண்டி வரும். எனவே தான் இஸ்லாம் பாவமன்னிப்புக்கு […]
பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா?
பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா? நபி(ஸல்) கழிப்பிடத்திற்குள் நுழைந்தவுடன் துஆ ஓதுவார்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுபவர் கழிப்பிடத்திற்கு வெளியே தான் துஆக்களை கூற வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கழிவறைக்குள் எக்காரியங்களைச் செய்யக்கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு விவரித்துள்ளார்கள். கழிப்பிடத்திற்குள் துஆக்களைக் கூறக் கூடாது என்றால் இதையும் நபியவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் இது கூடாது என்று கூறியதாக எந்தச் செய்தியும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) […]
பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?
பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா? பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். சுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விடுவார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா (ரலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட ஸைனப் (ரலி) மற்றொரு […]
பாரகல்லாஹு என்று கூறுவது சரியா?
ஜஸாகல்லா என்று கூறினால் அதற்கு என்ன மறுமொழி சொல்ல வேண்டும்? பாரகல்லாஹு லக என்று கூறுகிறார்களே இதுசரியா? இல்லை பதில் ஒருவர் நமக்கு உதவி செய்தால் அதற்காக அவருக்கு நாம் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறலாம். இதற்கு நபிமொழியில் ஆதாரம் உள்ளது. ஆனால் இதன் பிறகு உதவி செய்தவர் பாரகல்லாஹு கூற வேண்டும் என்ற கருத்து தவறானது. ஏனென்றால் இவ்வாறு கூற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் […]
குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓதவேண்டுமா?
குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓதவேண்டுமா? திருத்தமாக ஓதுமாறு அல்லாஹ் கூறுகிறான் ஒவ்வொரு மொழியிலும் அம்மொழி எழுத்துக்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என விதி இருக்கும். இந்த விதியைக் கடைபிடித்தால் தான் அம்மொழியைப்பிழையின்றி கையாள முடியும். குர்ஆன் அரபு மொழியில் அமைந்துள்ளது. அரபு வார்த்தைகளை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கு அம்மொழியில் விதி வகுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விதிமுறையைப் பேணி குர்ஆனை ஓதுவது அவசியம். இல்லையென்றால் நாம் பிழையாக ஓத நேரிடும். குர்ஆனை பிழையின்றி திருத்தமாக ஓத […]
நேர்ச்சையின் பரிகாரம் என்ன
நேர்ச்சையின் பரிகாரம் என்ன நாம் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாவிட்டால் மார்க்கம் அதற்குரிய பரிகாரத்தை கற்றுத் தந்துள்ளது. நேர்ச்சையை நிறைவேற்றாதவர்கள் இதைத் தான் கடைபிடிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வதாக இறைவனிடம் வாக்களித்து விட்டு வேறு காரியத்தை செய்தால் நமது வாக்குறுதியை நிறைவேற்றியவர்களாக மாட்டோம். இதுவும் நேர்ச்சையை முறிக்கும் செயலாகும். எனவே இதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். சத்தியத்தை முறித்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதே பரிகாரத்தை நேர்ச்சையை முறித்தாலும் செய்ய வேண்டும். لَا […]
சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா?
சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா? நாம் செய்த சத்தியத்தை முறித்தால் மார்க்கம் அதற்குரிய பரிகாரத்தைக் கற்றுத் தந்துள்ளது. சத்தியத்தை முறித்தவர்கள் இதைச் செய்வது அவர்களின் கடமை. لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُمُ الْأَيْمَانَ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ذَلِكَ كَفَّارَةُ […]
சமாதிக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா
சமாதிக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா கப்றில் குர்ஆன் ஓதக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 1300حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنْ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ رواه مسلم […]
துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன?
துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன? கைகளை உயர்த்துவதாக இருந்தால், தோல்களுக்கு நேராக உயர்த்துவது, உள்ளங் கைகளை வானத்தை நோக்கி வைப்பது அதன் முறையாகும். கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பலநேரங்களில் இவ்வாறு நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். 932 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ وَعَنْ يُونُسَ عَنْ ثَابِتٍ عَنْ […]
தொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா?
தொழுகையில் தமிழில் துஆ செய்யலாமா? செய்யலாம் தொழுகை என்பது இறைவனுக்கும், அடியானுக்கும் இடையிலான உரையாடலாகும். இறைவன் எல்லா மொழிகளையும் அறிந்தவன். அவனிடம் எந்த மொழியில் வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம். தொழுகையில் நாம் விரும்பிய பிரார்த்தனைகளைச் செய்யலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி… கூறுங்கள். (பின்னர்) நீங்கள் விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை […]
இறைத்தூதர்களின் சொத்துக்கு யார் வாரிசு?
இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.6 6725 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்) ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தைக் கேட்டனர். அப்போது அவர்களிருவரும் ஃபதக்’ பகுதியிலிருந்த தமது நிலத்தையும் கைபரில் தமக்குக் கிடைத்த பங்கையுமே அவ்வாறு […]
பாதிப்பு ஏற்படாத வகையில் என்றால் என்ன?
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு இரண்டில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் இவ்வாறு பங்கிட்டுக் கொடுத்து விட முடியும் என்றாலும் சில நேரங்களில் இவ்வாறு பங்கீடு செய்ய முடியாத நிலை ஏற்படும். சொத்தை விட பங்கின் அளவு அதிகமாக இருந்தால் அப்போது ஒவ்வொருவருக்கும் கிடைக்க […]
ஆண் பெண் பிள்ளைகளின் பங்கு
“இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு” என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அல்குர்ஆன் (4 : 11)
12) அபூ அப்தில்லாஹ் அல் ஹாகிம்
அபூ அப்தில்லாஹ் அல் ஹாகிம் இயற்பெயர் : முஹம்மத் பின் அப்தில்லாஹ் குறிப்புப்பெயர் : அபூ அப்தில்லாஹ் பட்டப்பெயர் : இவர் குறிப்பிட்ட காலம் நீதிபதியாக இருந்ததால் ஹாகிம் (நீதிபதி) என்றழைக்கப்பட்டார். தந்தைபெயர் : அப்துல்லாஹ் குலம் : அள்ளப்பீ குலத்தைச் சார்ந்தவர் பிறப்பு : நைசாபூர் என்ற ஊரில் ஹிஜ்ரீ 321 வது வருடம் பிறந்தார். கல்வி 9 வது வயதிலே கற்க ஆரம்பித்தார். 20 வது வயதை அடைந்திருக்கும் போது ஈராக் குராஸான் இன்னும் […]
11) இப்னு ஹிப்பான்
இப்னு ஹிப்பான் இயற்பெயர் : முஹம்மத் பின் ஹிப்பான் குறிப்புப்பெயர் : அபூஹாதிம் தந்தையின் பெயர் : ஹிப்பான் குலம் : பனூ தமீம் குலத்தைச் சார்ந்தவர் பிறப்பு : ஆப்கானிஸ்தானில் உள்ள புஸ்த் என்ற ஊரில் ஏறத்தாழ ஹிஜ்ரீ 280 ல் பிறந்தார். கல்வி : ஹிஜ்ரீ 300 ல் கல்வி கற்க ஆரம்பித்தார். சஜஸ்தான் நைசாபூர், ஷாம், மிஸ்ர், ஹிஜாஸ், போன்ற ஊர்களுக்குக் கல்வியைத் தேடி பயணம் செய்தார். இந்தப் பிரயாணத்தின் மூலம் 2000 […]
10) இப்னு ஹுசைமா
இப்னு ஹுசைமா இயற்பெயர் முஹம்மத் பின் இஸ்ஹாக் குறிப்புப் பெயர் அபூபக்கர் தந்தை பெயர் இஸ்ஹாக் பின் ஹுசைமா குலம் சுலமி கோத்திரத்தைச் சார்ந்தவர். பிறப்பு ஹிஜ்ரீ இருநூற்று இருபத்து மூன்றாம் ஆண்டு நைசாபூர் என்ற ஊரில் பிறந்தார். ஆசிரியர்கள் இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், முஹம்மத் பின் முஸன்னா, முஹம்மத் பின் பஷ்ஷார் மற்றும் பலர். படைப்புகள் :கிதாபுத் தவ்ஹீத் (ஏகத்துவத்தைப் பற்றிய புத்தகம்) ஷஃனுத் துஆ வ தப்சீரு மற்றும் சஹீஹு இப்னி ஹஸைமா […]
09) இமாம் தாரமீ
இமாம் தாரமீ இயற்பெயர் : அப்துல்லாஹ் குறிப்புப்பெயர் : அபூமுஹம்மத் குலம் : இவர் தமீமீ அல்லது தாரமீ என்ற கூட்டத்தைச் சார்ந்தவர். இவர் சமர்கன்த் என்ற ஊரில் தங்கிய காரணத்தினால் சமர்கன்தீ என்றும் இவர் கூறப்படுகிறார். தந்தைப் பெயர் : அப்துர் ரஹ்மான் பிறப்பு : இவர் ஹிஜ்ரீ 181 ஆம் ஆண்டு சமர்கன்த் என்ற ஊரில் பிறந்தார். கல்வி : இமாம் தாரமீ அவர்கள் நன்கு புத்திக் கூர்மையுள்ளவராக இருந்தார். பல ஆசிரியர்களைச் சந்தித்து […]
08) இமாம் மாலிக்
இமாம் மாலிக் இயற்பெயர் : மாலிக். குறிப்புப் பெயர் : அபூஅப்தில்லாஹ் தந்தை பெயர் : அனஸ் பின் மாலிக் குலம் : இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது. பிறப்பு : ஹிஜ்ரீ 93 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார். வளர்ப்பு: சவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார். கல்வி : பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் […]
07) இமாம் அஹ்மத்
இமாம் அஹ்மத் இயற்பெயர் : அஹ்மத் குறிப்புப்பெயர் : அபூ அப்தில்லாஹ் குலம் : இவரது தாயும் தந்தையும் அரபு குலத்தைச் சார்ந்தவர்கள். பிறப்பு : இமாம் அஹ்மத் அவர்கள் பக்தாதில் ஹிஜ்ரீ 164 வது வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள். கல்வி : இவர் ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் கல்வி கற்க ஆரம்பித்தார். அப்போது இவருக்கு பதினான்கு வயதாக இருந்தது. குர்ஆனை மனனம் செய்து எழுதப்படிக்க கற்றுக் கொண்ட பின் இமாம் அஹ்மத் […]
05) இமாம் இப்னுமாஜா
இமாம் இப்னுமாஜா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைத் தொகுத்து இம்மார்க்கத்திற்கு தொண்டாற்றிய இமாம்களில் இமாம் இப்னுமாஜா ஒருவராவார். இயற்பெயர் : முஹம்மத் பின் யஸீத் குறிப்புப் பெயர் : அபூ அப்தில்லாஹ் தந்தை பெயர் : யஸீத். இவரது பிரபலமான பெயர் : இப்னு மாஜா கோத்திரம் : ரபயீ கோத்திரத்தைச் சார்ந்தவர். பிறப்பு : ஹிஜ்ரீ 209 ஆம் ஆண்டு. வளர்ந்த இடம் : கஸ்வீன் என்ற ஊர் கல்வி : இப்னு மாஜா […]
04) இமாம் நஸாயீ
இமாம் நஸாயீ இயற்பெயர் : அஹ்மத் குறிப்புப் பெயர் : அபூ அப்திர் ரஹ்மான் தந்தை பெயர் : ஷுஐப் பிறப்பு : ஹிஜ்ரீ 215 ஆம் ஆண்டில் நஸா என்ற ஊரில் பிறந்தார்கள். இவர் பிறந்த ஊரான நஸா என்பதுடன் இணைத்து நஸாயீ என்று இவர் மக்களால் அழைக்கப்படுகிறார். கல்வி : ஹிஜ்ரி 230ஆம் ஆண்டு பதினைந்தாவது வயதை அடைந்த போதே குதைபா பின் சயீத் அவர்களிடம் பயிலுவதற்காக பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். அவரிடம் 14 […]
06) இமாம் அபூதாவூத்
இமாம் அபூதாவூத் ஹதீஸ்களைத் தொகுத்து மார்க்கத்திற்குப் பெரும் தொண்டாற்றிய அறிஞர்களில் இமாம் அபூதாவூதும் ஒருவர். இயற்பெயர் : சுலைமான் குறிப்புப் பெயர் : அபூதாவூத் தந்தை பெயர் : அஷ்அஸ் பிறப்பு : சஜஸ்தான் என்ற ஊரிலே ஹிஜ்ரீ 202வது வருடத்தில் பிறந்தார். ஆகயால் தான் மக்கள் மத்தியில் அபூதாவூத் சஜஸ்தானீ என்று பிரபலமாகியுள்ளார். கல்வி : இமாம் அபூதாவூத் வாழ்ந்த காலம் அறிஞர்கள் நிறைந்த காலம். இத்துடன் அவர்கள் சிறுவயதிலேயே பத்திசாலியாகவும் திகழ்ந்தார்கள். இக்காலச் சூழ்நிலை […]
03) இமாம் திர்மிதி
இமாம் திர்மிதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களில் இமாம் திர்மிதியும் ஓருவராவார். இயற்பெயர் : முஹம்மத் குறிப்புப் பெயர் : அபூ ஈஸா தந்தைபெயர் : ஈஸா கோத்திரம் : சுலமி கூட்டத்தாரைச் சார்ந்தவர் பிறந்த ஊர் : ஈரான் நாட்டின் கிழக்கில் அமைந்துள்ள திர்மித் என்னும் ஊரிலே பிறந்தார். இமாம் புகாரி புகாரா என்ற ஊரில் பிறந்த காரணத்தால் அவர்களை புகாரி என அழைப்பதைப் போன்று இமாம் திர்மிதி, திர்மித் என்ற […]
02) இமாம் முஸ்லிம்
இமாம் முஸ்லிம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆதாரப்பூர்வமாக தொகுத்தவர்களில் இரண்டாம் இடத்தை இமாம் முஸ்லிம் பெற்றுள்ளார். இயற்பெயர் : முஸ்லிம் தந்தை பெயர் : ஹஜ்ஜாஜ் பிறந்த ஊர் : குராஸான் பகுதியில் உள்ள பெரிய பட்டணமான நைஸாபூர் பிறந்தநாள் : ஹிஜ்ரீ 204 அல்லது ஹிஜ்ரீ 206 கற்றமுறை : இமாம் முஸ்லிம் அவர்கள் பிறந்த ஊர் அதிகமான அறிஞர்களைப் பெற்றிருந்தது. முஸ்லிம் அவர்கள் ஹதீஸ்கலையில் வல்லுனராக ஆவதற்கு ஏற்ற சிறந்த சூழ்நிலை […]
01) இமாம் புகாரீ
இமாம் புகாரீ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆதாரப்பூர்வமான செய்திகளுடன் தொகுத்தவர்களில் முதலிடம் பெற்றவர். இயற்பெயர் : முஹம்மத் தந்தை பெயர் : இஸ்மாயீல் பிறந்த ஊர் : ரஷ்யாவில் உள்ள புகாரா, இந்த ஊரில் பிறந்ததால் புகாரீ (புகாரா என்ற ஊரைச் சார்ந்தவர்) என்று அழைக்கப்படுகிறார். பிறந்த நாள் : ஹிஜ்ரி 194, ஷவ்வால் 13, வெள்ளிக்கிழமை கல்விக்காக பயணம் செய்த ஊர்கள் : குராஸான், பஸரா, கூஃபா, பக்தாத், மக்கா, மதீனா, சிரியா, […]
17) பிறருக்காக ஹஜ் – மதீனாவுக்கு செல்வது
பிறருக்காக ஹஜ் செய்தல் ஒவ்வொருவரும் தத்தமது செயலுக்குப் பொறுப்பாளியாவார்; ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க முடியாதுஎன்பது இஸ்லாத்தின் அடிப்படை. என்றாலும் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. ஹஸ்அம்கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத முதிய வயதுடையவராக இருக்கும் போது ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை ஏற்பட்டு விட்டதுஎன்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவருக்காக […]
16) குர்பானி மற்றும் ஸம்ஸம் நீர்
குர்பானி கொடுத்தல் ஹஜஜுப் பெருநாள் தினத்தில் வசதியுள்ளவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் கொடுக்க வேண்டிய குர்பானி பற்றி மட்டும் நாம் விளக்குவோம். கிரான், தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர்கள் பத்தாம் நாளன்று குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் அறிந்துள்ளோம். இத்தகையவர்கள் குர்பானி கொடுக்க வசதியில்லா விட்டால் அதற்குப் பகரமாக வேறு பரிகாரம் செய்து கொள்ளலாம். அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பப் பிராணியை […]
15) உம்ரா என்றால் என்ன?
உம்ரா என்றால் என்ன? நி இஹ்ராம் கட்டி நி கஃபாவில் தவாஃப் செய்து நி இரண்டு ரக்அத்கள் தொழுது நி ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை ஓடுவது ஆகியவையே உம்ராவாகும். அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில் தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. எல்லா நாட்களிலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி […]
14) பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால்
பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் ஹஜ்ஜுக்காகச் சென்றுள்ள பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்? இதனையும் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும். மாதவிலக்கு ஏற்பட்டாலும் ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம். ஆயினும் அவர்கள் தவாஃப் செய்வதும் ஸஃபா, மர்வா இடையே ஓடுவதும் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டைத் தவிர ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம். மக்காவுக்குள் நுழைந்ததற்காக ஆரம்பமாக தவாஃபுல் குதூம்செய்ய வேண்டும் என்பதை முன்னர் அறிந்தோம். இதுவே உம்ராவுக்காகவும், மக்காவில் நுழைந்ததற்குக் காணிக்கையாகவும் […]
13) ஹஜ்ஜுக்காக மூன்று வகையான இஹ்ராம்
ஹஜ்ஜுக்காக மூன்று வகையாக இஹ்ராம் கட்டுதல் 1. தமத்துவ் ஹஜ்ஜுக்காக மூன்று வகையாக இஹ்ராம் கட்டலாம். அதில் முதல் வகை தமத்துவ் எனப்படும். ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் ஹஜ்ஜுடைய மாதங்கள் என்பதை முன்பே நாம் அறிந்தோம். ஹஜ்ஜுடைய இந்த மாதங்களில் இஹ்ராம் கட்டுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளில் முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றி விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். இஹ்ராம் இல்லாமல் அவர் […]