Tamil Bayan Points

நகப்பாலிஷ் இடலாமா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

நகப்பாலிஷ் இடலாமா?

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நகப் பாலிஷ் இடலாம். தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் நனைய வேண்டியது அவசியமாகும்.

அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் மேனி நனைய வேண்டும். நகப் பாலிஷ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் திரவமாகவே விற்பனை செய்யப்படுகின்றது. நைல் பாலிஷ் இட்டவர்கள், உளூச் செய்யும் போதெல்லாம் அதை நீக்கி விட வேண்டும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் நீக்கிட வேண்டும்.

தண்ணீர் ஊடுருவுவதைத் தடுக்காத முறையில் (மருதாணி சாயம் போல்) நைல் பாலிஷ் கண்டுபிடிக்கப்படுமானால் எல்லா நேரங்களிலும் அதை இடலாம்.

தொழுகையும், குளிப்பும் கடமையாகாத சிறுவர், சிறுமியருக்கு இடுவதையும் தடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனினும் பெரியவர்களான பிறகும் எல்லா நேரங்களிலும் அவர்கள் இதை விரும்பாமல் இருக்கும் வகையில் அறிவுரை கூறுவது அவசியமாகும்.

நைல் பாலிஷ் என்பது பொதுவாகவே தடுக்கப்பட்ட ஒன்று அல்ல. இன்றைய சந்தையில் கிடைக்கும் தன்மையைப் பொருத்தே இந்த நிபந்தனைகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.