Tamil Bayan Points

மனைவியின் விந்தைக் சுவைப்பது கூடுமா?

கேள்வி-பதில்: இல்லறம்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

மனைவியின் விந்தைக் சுவைப்பது கூடுமா?

கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

மனைவியின் பின் துவாறத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதை மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். ”அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்!

அல்குர்ஆன் (2 : 222)

எனவே தடை செய்யப்பட்ட இந்த இரண்டைத் தவிர்த்து மற்ற அனைத்து காரியங்களும் அனுமதிக்கப்பட்டவையே. பின்வரும் வசனம் இந்த அனுமதியைத் தருகின்றது.

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!

அல்குர்ஆன் (2 : 223)

அதே நேரத்தில் இவ்வாறு செய்வதால் உடல் நலத்திற்கு கேடு என மருத்துவம் கூறினால் இதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உடலுக்குத் தீங்கிழைக்கும் காரியங்களை செய்யக்கூடாது என குர்ஆன் கூறுகின்றது.

கணவன் மனைவிக்கிடையே நடக்கும் அந்தரங்கமான விஷயங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு விவரிப்பது நாகரீகமான செயல் அல்ல. எனவே தான் அல்லாஹ் மனைவியர் விளை நிலங்கள் என்ற அழகான உவமையோடு நிறுத்திக்கொண்டான். இதற்காகத் தான் இல்லறம் பற்றி நீங்கள் கேட்ட கேள்வியை மூடலாக விட்டுள்ளோம்.