Tamil Bayan Points

வேறு கிரகங்களில் உயிரினம் உண்டா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

வேறு கிரகங்களில் உயிரினம் உண்டா?

வேறு கிரகங்களில் உயிரினங்கள் உண்டு.

பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதன் வாழ முடியாது என்று திருக்குர்ஆன் கூறுவது 175வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

ஆனால் பூமியைத் தவிர மற்ற கோள்களில் உயிரிணங்கள் வாழ முடியும் என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது முழுமையாக நிரூபிக்கப்படாவிட்டாலும் சில கோள்களில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதே இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன் இந்தச் சாத்தியத்தை மறுக்கவில்லை. மாறாக வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.

இவ்வசனம் 42:29 வானத்திலும் பூமியிலும் உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதாகக் கூறுகிறது. பூமியைத் தவிர மற்ற கோள்களில் அல்லது துணைக் கோள்களில் நிச்சயம் உயிரினம் இருக்கின்றன என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் அடித்துச் சொல்கிறது.

இன்று ஊகமாக விஞ்ஞானிகள் பல் வேறு ஆராய்ச்சிக்குப் பின் கூறுவதை திருக்குர்ஆன் உறுதிபடக் கூறுகிறது. பூமி அல்லாத கோள்களில் உயிரினம் இருப்பது நிரூபணமாகும் போது இது இறைவனின் வார்த்தை என்பது மேலும் உறுதியாகும்.