அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு சாராரும் தங்களின் பெற்றோர்களும், தங்களின் முன்னோர்களும் எந்த மதத்தில் தங்களின் வாழ்க்கையைத் தொடர்ந்தார்களோ, அந்த மதத்திலேயே தங்களின் வாழ்க்கை வழிமுறைகளை அமைத்துக் கொள்கின்றார்கள். இதில் விதிவிலக்காக ஒரு சிலர் மட்டும் தங்களின் முன்னோர்களின் மதக் கோட்பாட்டுத் தத்துவங்களை சீர்தூக்கிப் பார்த்து, […]