நிலவில் ஏன் ஈர்ப்புவிசை குறைவு?
பூமிக்கு மட்டுமல்லாமல், நிறை (mass) கொண்ட எல்லாப் பொருள்களுக்கும் ஈர்ப்புவிசை உண்டு என்று நியூட்டன் கண்டுபிடித்தார். இந்த விசையின் அளவு அந்தப் பொருளின் நிறையைப் பொறுத்து அமையும்.
பூமியின் ஈர்ப்புவிசை அதன் நிறையைப் பொறுத்தது. நிலவின் ஈர்ப்புவிசை அதன் நிறைக்கேற்ப அமையும். நிலவின் நிறை பூமியின் நிறையைவிட 81 மடங்கு குறைவு.
இதனால், பூமியின் மேற்பரப்பில் ஈர்ப்புவிசையின் முடுக்கம் ஒரு விநாடிக்கு சுமார் 9.8 மீட்டர் என்றால், நிலவின் மேற்பரப்பில் அது ஒரு விநாடிக்கு சுமார் 1.62 மீட்டர் மட்டுமே.
இதனால்தான் பூமியைவிட நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக உள்ளது. அதாவது, நிலவில் ஒரு பொருள் பூமியில் இருப்பதைவிட ஆறு மடங்கு குறைவான ஈர்ப்புவிசையை உணரும்.
இறைவன் இந்த அண்டத்தை ஒரு குறிப்பிட்ட ஒழுங்குடன் படைத்துள்ளார். ஒவ்வொரு கோளுக்கும் அதன் நிறைக்கேற்ப ஈர்ப்புவிசையை அமைத்து, உலகை சமநிலையுடன் இயங்கச் செய்துள்ளான். இது இறைவனின் அளவற்ற ஞானத்தையும் ஆற்றலையும் காட்டுகிறது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை