
பள்ளிவாசலில் உறங்கலாமா? குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும். பள்ளியில் உறங்குவது தவறான காரியமல்ல. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளியில் உறங்கியுள்ளனர். இதை நபியவர்கள் தடை செய்யவில்லை. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மணமாகாத, குடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்த போது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் (தங்கி) நான் உறங்கிக் கொண்டிருந்தேன். (புகாரி: 440) ➚ சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் […]