Tamil Bayan Points

05) சீராக அமைந்த வானங்கள்

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

Last Updated on February 24, 2022 by

அத்தியாயம் 4

சீராக அமைந்த வானங்கள்

சென்ற அத்தியாயத்தில் பேரண்டத்தின் சில முக்கிய மான இயற்பியல் குணங்கள் பற்றி தெரிந்து கொண்டோம். அந்த முக்கியமான பண்புகளில் ஒன்று நமது பேரண்டத்தின் சீரான மற்றும் ஒழுங்கான (uniform and regular) அமைப்பும் அதன் வழவழப்பான (smooth) தன்மையுமாகும். மொத்த அறிவியல் உலகையும் பேரண்டத்தின் இப்பண்பு பெரும் வியப்பிற்குள் ஆழ்த்தும் போது அறிவியலாளர்களில் ஒரு பிரிவாராகிய இறை மறுப்பாளர்களை வியப்பிற்கு பதிலாக பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நமது சிற்றினம் (species) இந்த பூமியில் தோன்றிய காலம் முதல் நம்முடன் தோன்றிய அறிவியல் அறிவின் உட்கிடக்கை (நசவையபந)கு ஏற்ற வகையில் எப்படியல்லாம் சிந்தித்த போதும் இப்படிப்பட்ட ஒரு பேரண்டம் தோன்ற வேண்டுமாயின் அது முன் கூட்டித் தீர்மானித்த நோக்கத்தின் அடிப்படையில் நடைபெற்ற செயலாகக் காட்சியளிப்பதால் கடவுளைத் தவிர்க்க இயலாத நிர்பந்தம் ஏற்படுகிறது.

இந்த இக்கட்டான சூழலில் அறிவியலை ஏற்பதற்காகக் கடவுளை ஒப்புக் கொள்வதா அல்லது கடவுளை மறுப்பதற்காக அறிவியலைப் புறக்கணிப்பதா எனத் தீர்மானிக்க வேண்டிய கட்டம் வந்த போது கடவுளை மறுக்க வேண்டும் என்ற எண்ணமே வெற்றி பெற்றதால் அதற்கேற்ற ஓர் அறிவியல் புனைவை (science fiction) கற்பனை செய்து கொண்டார்கள்.

இதன் விளைவாக பேரண்டம் எவ்வித நோக்கமும் இல்லாமல் இயற்கையாகத் தோன்றுகின்றன என்றும் அதனை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆந்த்ரபிக் மந்திக்கு ஏற்பட்ட தவறே நாம் வசிக்கும் இப்பேரண்டம் எனும் அறிவுக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத ஒரு அறிவியல் புனைவை உருவாக்கி அதை அறிவியல் கருத்துரையாக அறிமுகப் படுத்துகின்றனர்.

நாம் வசித்துக் கொண்டிருக்கும் இப்பேரண்டத்தின் சிறப்பான இயற்பியல் பண்புகளும் அதன் முக்கியத்துவமும் சென்ற நூற்றாண்டின் கடைசியில் தாம் தெரிய வந்தது. இது தெரிய வந்த போது அது எவ்வளவு பெரிய வியப்பை அறிவியல் உலகில் தோற்றுவித்ததோ அதை விடப் பெரிய வியப்பிற்குரிய செய்தி யாதெனில் நமது பேரண்டத்தின் இச்சிறப்பியல்புகளும் அதற்காக இறை மறுப்பாளர்கள் கூறும் காரணங்களும் உண்மைக்குப் புறம்பானது என்பதை ஏழாம் நூற்றாண்டிலேயே திருக்குர்ஆன் ஓங்கிய குரலில் பாரறிய பறை சாற்றிக் கொண்டிருக்கிறது என்பதாகும்.

குறையற்ற வானங்கள்

அறிவியலாளர்களை வியக்கச் செய்து கொண்டிருக்கும் இப்பேரண்டத்தின் சிறப்பியல்புகளைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எவ்வித ஏற்றக் குறைச்சலை யும் நீர் காண மாட்டீர்! மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா? பிறகு இரு முறை பார்வையைச் செலுத்துவீர்! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்பி அடையும்.

(அல்குர்ஆன்:67:3-4.)

மேற்கண்ட திருமறை வசனங்கள் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் தலைப்போடு தொடர்பு கொண்டது எனக் கூறப்பட்ட பிறகும் சட்டெனப் புரியாத நிலை பலருக்கும் காணப்படலாம். எனவே இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாம் வசிக்கும் இப்பேரண்டத்தின் ஒழுங்கான மற்றும் சீரான பரவலும் (னளைவசரெவடி) வழவழப்பான தன்மையும் அதன் மிக முக்கியமான இயற்பியல் குணங்களாகும் என முந்தைய அத்தியாயங்களில் கண்டோம். பேரண்டம் இவ்வாறு சீராக ஒழுங்காகப் பரவியுள்ளது எனில் அண்டவெளியில் எவ்வித ஏற்றக் குறைச்சலும் இல்லை என்பதே அதன் பொருளாகும், ஏற்றக் குறைச்சல் இல்லை என்றால் எதனுடைய ஏற்றக் குறைச்சல் எனும் கேள்வி வாசகர்களிடம் இப்போது எழுந்திருக்கும். விளக்குவோம்.

ஆகாயம் என்பது வெறும் சூன்யமான அண்டவெளியே அன்றி அப்படி எதுவும் இல்லை என இப்போதும் பொது மக்களில் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறாகும். ஆகாயம் என்பது உண்மையிலேயே படைக்கப் பட்ட ஒரு பேருருவமாகும். அதில் பெரும் பெரும் நட்சத்திர மண்டலங்கள் (காலக்சிகள்) ஏராளமாக உள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே அதை விடப் பன்மடங்கு பிரமாண்டமான அண்டவெளி இருக்கிறது. இதைப் பற்றி அறிவியலாளர் டேவிட்சன் கூறுவது வருமாறு:

இந்த அண்டவெளியில் பல்வேறு தனிமங்களின் மூலக் கூறுகளும், அணுக்களும் பரவியுள்ளன. இவைகளுடன் அண்டத் துகள்களும் (cosmic dusts) கலந்துள்ளன. இருப்பினும் பூமியில் உருவாக்கக் கூடிய வெற்றிடத்தை விட மிகக் குறைந்த வாயுப் பொருட்களே காலக்சிகளின் இடை வெளியில் இருக்கின்றன. அதே நேரத்தில் காலக்சிகளின் பரப்பளவை விடப் பன்மடங்கு பிரமாண்டமான இடை வெளியை அவை பெற்றுள்ள காரணத்தால் பேரண்டத்தி லுள்ள மொத்த நட்சத்திரங்களின் பொருண்மைக்கு நிகராகவோ அல்லது அதை விட அதிகமாகவோ பொருண்மையை காலக்சிகளின் இடைவெளியிலுள்ள பொருட்கள் பெற்றிருக்கும்.

(பார்க்க பக்கம் 1-2 அட்ரானமி ஃபார் எவரி மேன்)

பேரண்டப் பெருவெளி நம் கற்பளைக் கெட்டாத தூரம் பரவிக் கிடக்கின்ற போதிலும் நம் அறிவியல் கண்களுக்கு எட்டிய தூரமெல்லாம் அண்டவெளியில் பரவியிருக்கும் அண்டத் துகள்களும் ஏனைய மூலக் கூறுகள் மற்றும் அணுக் களும் செவ்வொழுங்காக ஒரே சீராகப் பரவியிருக்கின்றன. எந்த ஓர் இடத்திலும் ஏற்றக் குறைவு இல்லை. அவை எந்த ஓர் இடத்திலும் அடர்த்தி மிகுந்தோ அல்லது அடர்த்தி குறைந்தோ காணப்படவில்லை. அதோடு எந்த ஓர் இடத் திலேனும் அவை அறவே இல்லாமல் எவ்விதமான பிளவு களும் உருவாகவில்லை. இது மட்டுமின்றி பேரண்டம் மொத்தமும் பரவியுள்ள வெப்பமும் (2.2 K ) ஒரே சீராக உள்ளன.

வழுக்கும் வானங்கள்!

அண்டவெளியின் அமைப்பு இதற்கு மாறாக சில இடங்களில் அடர்த்தி மிகுந்து காணப்பட்டால் அந்த இடத்தை நாம் ஒரு கரடுமுரடான அல்லது மேடான இடமாகக் கற்பனை செய்யலாம். அதே நேரத்தில் வேறு ஓர் இடத்தில் அண்டவெளி அடர்த்தி மிகக் குறைவாகக் காணப்பட்டால் அந்த இடத்தை ஒரு பள்ளமான இடமாகக் கற்பனை செய்யலாம். வேறு வார்த்தைகளில் கூறினால் நமது பேரண்டம் மேடு பள்ளங்களோ,பிளவுகளோ, குண்டும் குழியுமாகவோ இல்லாமல் வழவழப்பாக ஒழுங்குற அமைந்த ஆகாயமாகும்.

நமது ஆகாயப் பெருவெளி இவ்வளவு ஒழுங்குற அமைந்திருப்பது அறிவியலாளர்களுக்கு பெரும் புதிராகவே இருக்கிறது. இதன் காரணமாகவே பேரண்டம் ஏன் இவ்வளவு வழுக்கலாக (smooth) இருக்கிறது எனும் வினா ஹாக்கிங் அவர்களின் நூலில் பல இடங்களில் நாம் பார்க்கிறோம்.

பொருள் விளக்கம்

இப்போது அண்டவெளியின் வினியோகத்தைக் குறித்து திருக்குர்ஆன் கூறும் செய்தியை விளக்கமாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். அவ்வசனங்களில் கூறப்பட் டுள்ளபடி ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் எனும் முதலாவது செய்தியை நாம் ஏற்கனவே ஆய்வு செய்து விட்டோம். அவ்வசனங்களில் இரண்டாவதாகக் கூறப்பட்டிருக்கும் “(அவனுடைய) படைப்பில் எவ்வித ஏற்றக் குறைவும் காண மாட்டீர்! என்பதன் பொருளும் வாசகர்கள் இப்போது விளங்கிக் கொண்டிருப்பீர்கள்.

அதாவது அண்டவெளியில் பரவியிருக்கும் அதன் பொருட்களை அவன் வினியோகம் செய்திருப்பதில் எவ்வித ஏற்றக் குறைவும் இல்லை என்பதாகும். ஆனால் “மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா? எனத் திருக்குர்ஆன் கூறுகிறதே இதன் பொருள் என்ன?ஆகாயத்தில் ஏதேனும் பிளவுகள் இருப்பதாக யாரேனும் கூறினார்களா? அப்படி யாரும் கூறவில்லையென்றால் மீண்டும் இரு முறை பார்வையைச் செலுத்துவீர்!எனத் திருமறை ஏன் கூற வேண்டும்? அது மட்டுமின்றி மீண்டும் இரு முறை பார்வையைச் செலுத்தினால் கூட அந்தப் பார்வைகள் “களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும் என்றும் திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது. இதற்கெல்லாம் பொருளென்ன?

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து எவ்விதக் குறைபாடும் இன்றி வழவழப்பாகப் படைக்கப்பட்ட வானவெளியில் பிளவுகளைப் போன்ற சில குறைபாடுகள் உண்டு என சிலர் குறை கூறுகின்றனர் என்றும் அவர்களுக் குரிய அறிவுரையாகவே ஆகாயத்தை மீண்டும் நன்கு பார்வையிடும்படி கூறப்பட்டிருக்கிறது என்றும் நாம் யூகிக்க முடிகிறது. இந்த யூகம் மெய்யென்றால் ஆகாயத்தின் படைப்பில் குறைபாடுகள் உண்டு எனக் கூறியது யார் எனும் கேள்வி இப்போது எழுகிறது.

யார் அந்த விமர்சகர்?

இறைத் தூதர் நபிகள் நாயகம் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும்) அவர்கள் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டில் என்பதும் அவருடைய வாழ்நளில் தாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அவருக்கு வழங்கப் பெற்றது என்பதும் வரலாறு. இறைத் தூதரையும் திருக்குர்ஆனையும் விமர்சனம் செய்து கொண்டிருந்த நிராகரிப்பாளர்கள் இறைத் தூதரும் திருக்குர்ஆனும் போதித்த இலாத்தின் ஏகத்துவ வாதத்தை மட்டுமே நிராகரித்தார்களே அன்றி இறைவனின் உள்ளமையையோ, அவனது எல்லையற்ற படைப்பாற்றலையோ கடுகளவும் மறுத்ததில்லை. ஆகவே அவர்கள் இந்த விமர்சனத்தைச் செய்யவில்லையென்பது சர்ச்சைக்கு இடமில்லாததாகும்.

இந்த நிலையில் அன்று வாழ்ந்திருந்த அறிவியலாளர் களில் யாரேனும் இந்த விமர்சனத்தைச் செய்து இருக்கிறார் களா என்பதைப் பார்த்தால் அன்று நிலவி வந்த அறிவியல் கருத்துக்களில் பெரும் செல்வாக்கு செலுத்திய அரிடாட் டில் (Aristotle 384 Bc – 322 Bc ) கூட இப்படிப்பட்ட விமர்சனத்தை நடத்தவில்லை எனத் தெரிய வருகிறது.

அறிவியல் வளர்ச்சியோ அல்லது வானியலைப் பற்றிய பிழையற்ற அறிவைப் பெறும் பொருட்டு தகுதி வாய்ந்த அறிவியல் கருவிகளோ இல்லாத பண்டைக் காலத்தில் வானியலில் அரிடாட்டிலுக்கு பெரும் பிழைகள் நேர்ந்துள்ளது என்பது உண்மையே. இதைப் பிரதிபலிக்கும் வகையில் நவீன அறிவியல் உலகின் அறிவியலாளர்கள் அதை நையாண்டியாகக் கூறுவதும் உண்டு.

பூமி பேரண்டத்தின் மையத்தில் அசையாதிருக்க சூரியன் அதைச் சுற்றி வருகிறது என்றோ,இலேசான பொருட்களை விட கனமான பொருட்கள் பூமியின் மீது வேகமாக வீழ்கின்றன என்றோ அரிடாட்டில் கூறினால் ஏனைய அறிவியலாளர்களின் தலைவிதி “அரிடாட்டில் அவ்வாறு கூறினால் அது அப்படியே ஆகும் எனக் கூற வேண்டும் என்பதாகும். கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு அறிவியல் உலகில் தன்னிகரில்லா செல்வாக்கு பெற்ற அரிடாட்டில் கூட ஆகாயத்தில் ஓட்டைகளோ, விரிசல்களோ இருக் கின்றன எனும் தவறான கருத்தைத் தெரிவிக்கவில்லை. பிறகு யார் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருக்க முடியும்?

பண்டைகால அறிவியலாளர்களில் யாரும் பேரண்டப் படைப்பில் இப்படிப்பட்ட ஒரு குறைபாட்டைக் கூறவில்லை என்பதில் இருந்து இப்படிப்பட்ட ஒரு விமர்சனம் செய்யப் பட்டிருப்பின் அது நவீன உலகின் அறிவியலாளர்களால் செய்யப்பட்டதாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆனால் நவீன உலகின் அறிவியலாளர்கள் பேரண்டத்தின் படைப்பில் இப்படிப்பட்ட ஒரு குற்றச் சாட்டைக் கூறுவார்கள் என்பது ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குர்ஆனுக்கு எப்படித் தெரியும்?

ஆனால் ஆய்வுக்குரிய திருமறை வசனங்களை ஒன் றல்ல பலமுறை பார்வையை திரும்பத் திரும்பச் செலுத்தினா லும் இறைவனுடைய படைப்பில் குறை கண்டவர்களிடம் அவர்கள் கூறுவது போன்ற குறைபாடுகள் ஏதும் அங்கு இல்லையென்றும் அதை ஒன்றுக்குப் பலமுறை நன்றாகப் பார்த்து தெளிந்து கொள்ளும்படி கூறும் வார்த்தைகளாகவே அவை காட்சியளிக்கிறது. இந்த நிலையில் மெய்யாகவே நவீன உலகின் அறிவியலாளர்கள் யாரேனும் திருக்குர்ஆன் குறிப்பிடும் வகையில் குறை கூறியிருந்தால் திருக்குர்ஆ னுடைய இறைஞானமே அதை தீர்க்க தரிசனமாக முன் கூட்டியே கண்டு அதற்குரிய பதிலையும் முன்கூட்டியே கூறிவிட்டது என்பது தெளிவு.

ஹெர்ஷலுக்கு நேர்ந்த தவறு

நவீன வானியல் என்பது தொலை நோக்கியின் குழந்தை எனக் கூறினால் மிகையாகாது. எனவே தாயில்லாமல் சேயில்லை என்பதைப் போன்று தொலை நோக்கி இல்லை யேல் வானியலும் இல்லை. கலீலியோ 1609ல் தொலை நோக்கியை உருவாக்கி வானத்தை ஆய்வு செய்யத் துவங்கினார். அவர் நிலவின் நிலம் சார்ந்த சில குறிப்பிடும் படியான அடையாளங்களையும், சனிக் கோளின் வளையங் களையும் வியாழனின் (jupiter) நிலாக்களையும் (moons), வெள்ளியின் (Venus) பிறை வடிவங்களையும் (phases) சூரியனின் அச்சில் சுழற்சியின் (axial rotation) விபரங்களையும் கண்டுபிடித்தார்.

இதைத் தவிர அவரது மிகக் குறைந்த பார்வைத் திறம் கொண்ட தொலை நோக்கியால் நமது பால்வழி மண்டலம் வெறும் கண்களுக்குப் புலப்படாத ஏராளமான நட்சத்திரங்கள் நிறைந்த விசாலமான பரப்பளவைக் கொண்ட பெருவெளி எனக் கண்டுபிடிக்க இயன்றதே அன்றி அதற்கு மேல் முன்னேற இயலவில்லை.

வானியல் ஆய்வின் முன்னேற்றம் தொலை நோக்கியின் பார்வைத் திறனைச் சார்ந்ததாகும். ஆனால் அதன் முன் னேற்றமோ மந்தமாகவே போய்க் கொண்டிருந்தது. ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு 1783 ல் வில்லியம் ஹெர்ஷல் (William Herchel) எனும் உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர் தொலை நோக்கியில் குறிப்பிடும்படியான முன்னேற்றங்களைச் செய்து அண்டவெளியை ஆராயத் துவங்கினார். மிகப் பொறுமை யாக தன் ஆய்வை நடத்திக் கொண்டிருந்த ஹெர்ஷலுக்கு ஏற்பட்ட வானியல் வியப்புகளில் ஒன்றைப் பார்ப்போம்.

ஒரு நாள் அவர் ஆகாயத்தின் வட திசை அரைக் கோளத்தில் (Northem hemisphere) தம் ஆய்வை நடத்திக் கொண்டிருந்த போது அவருடைய கழுகுக் கண்கள் எதன் மீதோ நிலைகுத்தி நின்று விட்டது. நம்பினாலும் சரி! இல்லாவிட்டாலும் சரி! எல்லையற்ற ஆச்சரிய மிகுதியால் “அதோ ஆகாயத்தில் ஒரு ஓட்டை! வெளி உலகிற்கு ஒரு ஜன்னல்! எனக் கூக்குரலிட்டார். அடக்க முடியாத ஆச்சரியத்தால் (யுரேக்கா! யுரேக்கா! எனக் கூக்குரலிட்டுக் கொண்டே நிர்வாணமாக வீதியில் ஓடவில்லை யென்றாலும்) தம் சகோதரியை அழைத்து வந்து தாம் கண்ட ஆச்சரியத்தை தம் சகோதரிக்கும் காட்டியதாகவும் கூறப்படு கிறது.

இவர் மட்டும் அன்றி ஆகாயத்தின் தென்பகுதியை ஆராய்ந்து கொண்டிருந்த அவருடைய மகன் ஜான் என்பவரும் இதைப் போன்று ஆகாயத்தில் கருநிறக் கோடுகளை (னுயசம டநேள) கண்டதாகவும் கூறப்படுகிறது.

(பார்க்க பக்கம் 50 நியூ ஹேன்ட் புக் ஆப் ஹெவன்)

பாவம் ஹெர்ஷல் அவர்கள் அண்டவெளியில் ஒரு மாபெரும் அற்புதத்தைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் வாழ்ந்து சென்று விட்டார். ஆனால் அவரும் அவருடைய மகன் ஜான் என்பரும் ஆகாயத்தில் கண்டதாக் கூறிய ஓட்டையும், விரிச லும் (னுயசம டநேள – இருண்ட கோடு) உண்மையே தாமா? நிச்சய மாக இல்லவே இல்லை. நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொலை நோக்கியின் வளர்ச்சியில் முன்னேற்றங்கள் வந்த பின் வானு லகை ஆராய்ந்த அறிவியலாளர்கள் ஹெர்ஷலுக்கும் அவருக்குப் பின்னால் தோன்றிய ஆயிரக் கணக்கான அறிவியலாளர்களுக் கும் நேர்ந்த தவறைக் கண்டுபிடித்து விட்டார்கள். இதைப்பற்றி அதே நூலின் பக்கம் 93-94ல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

அதில் ஒரு வரி இவ்வாறு காணலாம். For many years these great irregular areas in the heavens were thought to be holes in the sky in which there were no stars but we know that the dark regions are silhouettes of unilluminated nebulae that hide the stars behind.

(பல வருடங்களுக்கு ஆகாயத்திலுள்ள இந்த ஒழுங் கற்ற பெரும் பிரதேசங்கள் நட்சத்திரங்களே இல்லாத ஓட்டைகளாகக் கருதப்பட்டன. ஆனால் அந்த இருண்ட பகுதிகள் நட்சத்திரங்களைப் பின் பக்கம் மறைத்துக் கொண்டிருக்கும் ஒருவித நெபுலாக்களின் நிழல் உருவங்களே என்பது நமக்குத் தெரியும்.)

திருக்குர்ஆனின் தீர்க்க தரிசனம்

திருக்குர்ஆனின் தெய்வீக ஞானத்தை நிரூபிக்கும் எவ்வளவு அற்புதமான அறிவியல் ஆதாரங்கள் இவை! 18ம் நூற்றாண்டிலும், 19ம் நூற்றாண்டிலும் தோன்றக் கூடிய New Hand Book of Hesvens – mc Graw Hill Book Company Inc , New York, London

Name of Authors : 1. Herbert J. Benhard, 2. Dorothy A. bennet , 3. Hug S. Rice

ஆயிரக் கணக்கான வானியல் விஞ்ஞானிகளுக்கு ஏற்படக் கூடிய தவறுகளை முன்கூட்டியே கண்டு அவைகளைச் சுட்டிக் காட்டும் பணியை அத்தவறுகள் தோன்றுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் செய்துள்ளது எனில் அதன் தெய்வீக ஞானத்தை யாரால் தாம் புறக்கணிக்க முடியும்? இருப்பினும் இந்த தெய்வீக வெளிப்பாட்டில் யார் அக்கறை காட்டினார்கள்? மனித வாழ்க்கையின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக விளங்கும் இந்த இறை வேதத்தை வெறும் ஆராதனைகளுக்கு மட்டும் உரியதாக எண்ணி ஒதுக்கி வைத்தனர்.

ஹெர்ஷலுக்குப் பிறகு ஆகாயத்தில் எப்பொழுதெல்லாம் ஒரு இருண்ட நெபுலாவை அறிவியலாளர்கள் பார்க்கிறார் களோ அப்பொழுதெல்லாம் அதை ஆகாயத்தின் ஒழுங்கற்ற பகுதியாம் குழியாகவோ, விரிசலாகவோ (திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ள `ஃபுதூர் – எனும் வார்த்தை பிளவு, விரிசல், ஓட்டை, உடைந்து விடுதல், கிழிந்து விடுதல் என்பது போன்ற விரிவான அர்த்தங்களைக் கொடுக்கும் சொல்லாகும் என்பதைக் கவனத்தில் கொள்க.) கருதிக் கொண்டனர்.

சுருங்கக் கூறின் ஆகாயத்தில் ஏராளமான இருண்ட நெபுலாக்கள் இருப்பதால் அவை யாவும் ஆகாயத்தில் உள்ள குழிகளும், விரிசல்களுமாக கற்பளை செய்யப்பட்டு பேரண்டம் என்பதே குண்டும், குழியும் நிறைந்து ஒழுங்கற்ற ஒரு பேருருவமாகக் கிட்டத்தட்ட இரண்டு நூற்றண்டு கால அளவுக்கு அறிவியலாளர்கள் கூறி வந்தனர்.

ஆனால் திருக்குர்ஆன் ஆகாயத்தில் அப்படிப்பட்ட குறைபாடுகள் எதுவும் இல்லை என ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி இருந்தும் உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளுக்குக் கூட திருமறை கூறிய அறிவியல் உண்மைகளைக் கண்டு பிடிக்க மேலும் பதிமூன்று நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. திருக்குர்ஆன் மானிடப் படைப்பு இல்லை. அது தெய்வீக வெளிப்பாடே என்பதற்கு இதைவிட சிறந்த அறிவியல் ஆதாரங்கள் வேறென்ன இருக்கப் போகிறது?

மந்திக் கவிதைக்கும் செக்

இது வரை நாம் விவாதித்த விபரங்களிலிருந்து ஆகாயத்தின் படைப்பில் எவ்விக் குறைபாடுகளும் இல்லை எனத் திருக்குர்ஆன் கூறியது ஒரு மகத்தான அறிவியல் உண்மை என்தை நாம் ஐயமற விளங்கிக் கொண்டோம். இந்த வசனங்களில் திருக்குர்ஆன் பயன்படுத்தி இருக்கும் தனிப்பட்ட பாணி (பார்ப்பீராக! ஏதேனும் பிளவைக் காண் கிறீரா?)யிலிருந்து ஆகாயத்தின் படைப்பில் தவறுதலாகக் குறை கூறக் கூடிய விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் தோன்றுவார்கள் என்றும், அவ்வாறு எதிர்காலத்தில் அவர்கள் கூறப் போகும் குறைபாடுகளுக்குரிய பதிலே அந்தக் குறிப்பிட்ட பாணியில் திருமறை தெரிவித்திருக்கும் விபரங்களாகும் எனவும் நாம் விளங்கிக் கொண்டோம்.

இந்த விளக்கம் கூட பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு வார்த்தைக்கு வார்த்தை நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் விளங்கிக் கொண்டோம். ஆனால் அந்த வசனங்களின் இறுதியில் குறிப்பிடப் பட்டிருக்கும் “களைப்புற்ற இழிந்ததாகவே பார்வை உம்மைத் திரும்ப அடையும் எனும் வரி ஹெர்ஷலுக்கோ,அவரைப் போன்ற தவறுகள் நேர்ந்த இதர விஞ்ஞானிகளுக்கோ கூறப்பட்டுள்ள வார்த்தைகளாக அவை ஒரு போதும் இருக்க முடியாது. அந்த எச்சரிக்கை முன் அத்தியாயத்தில் கண்ட ஆந்த்ரபிக் கோட்பாட்டின் மந்திக் கவிதை வாதத்திற்கு கூறப்பட்ட வார்த்தைகளாக இருப்பதற்கே வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் அந்த வார்த்தைகளில் ஒரு கடுமையான எச்சரிக்கையும் அறைகூவலும் உள்ளன.

பேரண்டத்தை ஆய்வு செய்யும் ஒருவர் இருண்ட நெபுலாவைப் பார்த்து தவறுதலாக அவை ஓட்டை என்பதை முடிவு செய்வதைக் குறித்து சொல்லப்பட்டதாக அது இருக்க இயலாது. ஏனெனில் பேரண்டத்தின் படைப்பில் இறைவனின் பங்கை நிராகரிக்க வேண்டும் எனும் எண்ணம் அவரிடம் சிறிதளவும் இல்லை. அவருடைய ஆய்வில் இயல்பாக நிகழும் ஒரு தவறுதலே அது ஆகும். எனவே இந்த எச்சரிக்கை பேரண்டப் படைப்பில் இறைவனின் பங்கை நிராகரிக்க வேண்டும் எனும் நோக்கத்திற்காக வேண்டுமென்றே குறைபாடுள்ள பேரண் டங்கள் எண்ணற்றவை உண்டு என்று எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் கூறிக் கொண்டிருப்பவர்களுக்கே அந்த எச்சரிக்கை பொருந்தும்.

மேலும் படைப்புப் பணியில் இறைவனை நிராகரித்து விட்டு அவனுடைய இடத்தில் ஒரு குரங்கை கற்பனை செய்து இறைமையை இழிவு செய்பவர் கள் யாரோ அவர்களே இந்த எச்சரிக்கைக்கும் அறைகூவலுக் கும் எல்லா விதத்திலும் பொருத்தமானவர்கள் ஆவார்கள். இந்த விளக்கத்திலிருந்து திருக்குர்ஆனுடைய இந்த எச்சரிக்கை ஆந்த்ரபிக் கோட்பாட்டின் மந்திக் கவிதை வாதத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கையே என்பது தெளிவு.

குறைபாடுடைய (குழம்பிய, சீரற்ற – (chaotic and irregular ) பேரண்டங்கள் எண்ணற்றவை இருக்கின்றன எனக் கூறி இறைவனை நிராகரிக்க முயற்சி செய்து கொண்டி ருப்பவர்கள் எவ்வளவு தாம் முயற்சி செய்து விண்ணைத் திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்த்தாலும் அப்படிப்பட்ட குறைபாடுள்ள ஒரே ஒரு பேரண்டத்தைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் பார்த்துப் பார்த்து கண்கள் சோர்ந்து போய் தங்களுடைய வாதத்தில் தோல்வியுற்று இழிவையும் தாங்கி அவர்களுடைய பார்வை அவர்களிடமே திரும்பி விடும் எனும் விளக்கம் இவ்வசனங்களிலிருந்து நாம் பெறுகிறோம். நன்கறிந்தவன் அல்லாஹ் ஆவான்.

ஃப்ரீடுமன் அனுமானமும் மந்திக் கவிதையும்

மந்திக் கவிதை வாதப்படி பேரண்டங்களின் பரவல் இரண்டு விதங்களில் அமையலாம் என முன்னர் கண்டோம். ஒழுங்கற்று குழம்பிக் கிடக்கும் எண்ணற்ற தனித்தனி பேரண்டங்கள் இருக்க அவற்றில் ஒன்றே ஒன்றாக நாம் வசிக்கும் வழவழப்பான பேரண்டம் இருக்கலாம் என்றோ அல்லது நாம் வசிக்கும் வழவழப்பான ஒரே ஒரு குட்டிப் பேரண்டமும் அதைத் தவிர ஒழுங்கற்று குழம்பிய வேறு எண்ணற்ற குட்டிப் பேரண்டங்கள் ஒன்றாக இணைந்த ஒரு எல்லையற்ற மகா பேரண்டமாக இருக்கலாம் என்பதே அவ்வாதமாகும்.

இது அறிவியல் தத்துவங்களுக்கு முரணான கற்பனை என்பதை நாம் முன்னர் கண்டோம். மேலும் ஒழுங்கற்ற குட்டிக்குட்டிப் பேரண்டங்களைப் பற்றிய வாதம் ஃப்ரீடுமன் அனுமானத்திற்கும் (இதைப் பற்றி முதல் அத்தியாயத்தில் கூறியுள்ளோம்.) முரண்பட்டதாகும். இப்பேரண்டம் எத்திசையிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்பது அவருடைய முதல் அனுமானம். பேரண்டத்தின் எந்த இடத்திற்குச் சென்று தரிசனம் நடத்தினாலும் இதுவே உண்மையாகும் என்பது அவருடைய இரண்டாவது அனுமானமாகும்.

இவை உண்மையாக இருந்தால் மந்திக் கவிதையின் குழம்பிய குட்டிக்குட்டிப் பேரண்டங்களின் வாதம் தவறாகும். ஏனெனில் ஃப்ரீடுமன் அவர்களின் அனுமானம் உண்மையென்றால் நாம் வசிக்கும் பேரண்டத்தின் இப்பகுதி எப்படி இருக்கிறதோ அப்படியேதாம் பேரண்டத்தின் மற்ற எல்லா பகுதிகளும் இருந்தாக வேண்டும். எனவே பேரண்டத்தில் நாம் வசிக்கும் பகுதி செவ்வொழுங்குடன் வழவழப்பாக இருந்தால் பேரண்டத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளும் அவ்வாறே இருந்தாக வேண்டும். எனவே ஒழுங்கற்ற குழம்பிய வேறு குட்டிப் பேரண்டங்கள் நாம் வசிக்கும் இப்பேரண்டத்தில் இருக்க வாய்ப்பில்லை என்பதே ஃப்ரீடுமன் அனுமானத்திலிருந்து பெறப்படும் விளக்கமாகும்.

இப்போது ஃப்ரீடுமன் அனுமானங்களுக்கு நிரூபணங் கள் கிடைக்கத் துவங்கியுள்ளன. 1965ல் இரு அமெரிக்க விஞ்ஞானிகளால் மைக்ரோ வேவ் டிடக்டர் (microwave detector) சோதனை இடப்பட்டுக் கொண்டிருந்த போது தற்செயலாக நிகழ்ந்த ஓர் அறிவியல் கண்டுபிடிப்பைப் பற்றி ஹாக்கிங் அவர்கள் தமது நூலில் விவரிக்கிறார்.

அக் கண்டுபிடிப்பு ஃப்ரீடுமன்னின் முதல் அனுமானத்தை உறுதி செய்ததாக அவர் கூறுகிறார். அதை உறுதி செய்த அர்னோ பென்ஸியா ( Arno Penzias) மற்றும் ராபர்ட் வில்சன் (Robert Wilson) எனும் அறிவியலாளர்களுக்கு அக்கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைக் கருதி, 1978 க்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

(பார்க்க பக்கம் :43-45 எ ப்ரீஃப் ஹிடரி ஆப் டைம்)

அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்த விகிதத்தில் முன்னேறிக் கொண்டிருந்தால் மெய்யான இறைவனின் கலப்பற்ற நூலாம் திருக்குர்ஆனிலிருந்து நாம் இங்கு ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனங்களின் கடைசி வரியின் நிறைவேற்றத்தை இந்த நூற்றாண்டிற்குள்ளாகவோ அல்லது அடுத்து வரும் ஓரிரு நூற்றாண்டுக்குள்ளாகவோ உலகம் காணத்தாம் போகிறது. ஏனென்றால் இது திருக்குர்ஆனின் வார்த்தை.