அனஸ் (ரலி) அறிவித்தார். ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்’ என்று கூறலானார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும்(அல்குர்ஆன்: 33:37)➚வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் […]