மறைவிடங்களில் 40 நாட்களுக்கு ஒருமுறை முடிகளை அகற்ற வேண்டுமா?
கேள்வி: மறைவிடங்களில் 40 நாட்களுக்கு ஒருமுறை முடிகளை அகற்ற வேண்டுமா?-முஜீப்
பதில்:
மீசை, நகம், அக்குள் மற்றும் மறைவிடத்தில் வளரும் முடிகள் ஆகியவற்றை நாற்பது நாட்களுக்குள் அகற்றிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இட்டுள்ளார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றை நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாதென எங்களுக்குக் கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.
நூல்: முஸ்லிம்
மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகிய காரியங்களை நாற்பது நாட்களுக்கு மேல் செய்யாமல் இருக்கக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கால வரம்பு விதித்தார்கள்.
நூல்: நஸாயீ
எனவே மீசை, நகம், மற்றும் அந்தரங்கப் பகுதியில் வளரும் முடிகள் ஆகியவற்றை அதிகபட்சமாக நாற்பது நாட்களுக்குள் அகற்றிவிட வேண்டும்.