இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா? மரணிக்கும் தருவாயில் இருப்பவருக்கு அருகில் யாஸீன் ஓதும் நடைமுறை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் காணப்படுகிறது. இதற்கு ஆதாரமாகப் பின் வரும் ஹதீஸ்களைச் சில அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: மஃகில் பின் யஸார் (ரலி) (அபூதாவூத்: 2814) ➚,(இப்னு மாஜா: 1438) ➚ யாஸீன் (அத்தியாயம்) குர்ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி […]