மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சிறப்பிற்குரியோர் யார் என்ற தலைப்பில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய நற்போதனைகளை இந்த உரையில் காண்போம்.. இந்த உலகத்திலே மனித சமுதாயம் படைக்கப்பட்ட உன்னதமான நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ ‘ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்க்காகவே தவிர (வேறு எதற்காகவும்) […]