மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். சட்டத்தின் பிடி கடுமையாக இல்லாத பட்சத்தில் எந்தவொரு தேசத்திலும் குற்றச்செயல்கள் என்பது சர்வசாதாரணமாக நிகழும் நிகழ்வுகளாக ஆகி விடுகின்றன. செய்கின்ற தவறுக்கு எந்த விலையையும் கொடுக்க வேண்டியதில்லை என்கிற நிலை இருக்குமானால் எத்தகைய கொடூர குற்றங்களையும் தயக்கமின்றி செய்து விடக் கூடிய அசாத்திய துணிச்சல் மனிதனுக்கு […]