Tamil Bayan Points

103) புனித மாதங்கள் எத்தனை?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

Last Updated on October 29, 2023 by

கேள்வி :

வருடத்திற்கு எத்தனை மாதங்கள்? அவற்றில் புனித மாதங்கள் எத்தனை? அது எந்தெந்த மாதம்? புனிதம் என்றால் என்ன? 

பதில் :

  • வருடத்திற்கு பன்னிரண்டு மாதங்கள் .
  • அவற்றில் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப், ஆகிய நன்கு மாதங்கள் புனிதமானவையாகும். 
  • அம்மாதத்தில் போரிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. 

ஆதாரம் : 

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் : 9 – 36