02) அறிமுகம்

நூல்கள்: உம்மு சுலைம் (ரலி) வரலாறு

02) அறிமுகம்

இயற்பெயர்:

ஃகுமைஸா பின்த் மில்ஹான்(முஸ்லிம்: 4851) ➚

ரூமைஸா (புகாரி: 3679) ➚ என்றும்

உம்மு சுலைம் என்றும் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெற்றோர்கள்:

தந்தை பெயர்: மில்ஹான்

தாயார் பெயர்: முலைக்கா (ரலி) (புகாரி: 380) ➚, 860

உடன்பிறந்தவர்கள்

ஹராம் இப்னு மில்ஹான் (புகாரி: 4091) ➚சலீம் இப்னு மில்ஹான் ஆகிய இரு சகோதரர்களும், உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (முஸ்லிம்: 4888) ➚என்ற ஒரு சகோதரியும், உடன்பிறந்தார்கள.

திருமண வாழ்கை

மாலிக் இப்னு நள்ர் என்பவரை முதலில் திருமணம் செய்தார்கள். அவரின் மூலம் அவர்களுக்கு

அனஸ் பின் மாலிக் (புகாரி: 6289) ➚, ஃபரா இப்னு மாலிக் ஆகிய இரண்டு மகன்கள் பிறந்தார்கள். அவரின் மரணத்திற்கு பிறகு…

அபூதல்ஹா ஸைத் இப்னு ஸஹல் (ரலி) (புகாரி: 5611) ➚, 3679, அவர்களை இரண்டாவதாக மணமுடித்துக் கொள்கிறார்கள். அவரின் மூலம் அவர்களுக்கு

அபூஉமைர் (முஸ்லிம்: 4348) ➚

அப்துல்லாஹ் (புகாரி: 2611) ➚,1502

என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.