Category: பைபிளில் நபிகள் நாயகம்

u370-5

12) தலைக் கல்லானது எது?

12) தலைக் கல்லானது எது? பைபிளின் புதிய ஏற்பாட்டில் மத்தேயு சுவிஷேசம் உள்ளது. அதில் இயேசு அவர்கள் அறிவித்துச் சென்ற ஒரு முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட முன்னறிவிப்புகள் இயேசுவுக்குப் பொருந்தாவிட்டாலும் அவை இயேசுவைக் குறிப்பதாக கிறித்தவ அறிஞர்கள் சாதிப்பது வழக்கம். ஆனால் இயேசுவே கூறிய முன்னறிவிப்பு குறித்து இத்தகைய சமாதானம் எதையும் அவர்களால் கூற இயலாது. இதோ இயேசு கூறுவதைக் கேளுங்கள். இன்னும் ஒரு உவமையைக் கேளுங்கள். வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவன் திராட்சைத் […]

11) கண்டித்து திருந்துபவர் யார்?

11) கண்டித்து திருந்துபவர் யார்? இயேசு இவ்வுலகை விட்டு விடை பெறும் இறுதிக் கட்டத்தில் தம் சீடர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அந்த அறிவுரைகளுடன் தான் சென்ற பிறகு என்ன நிகழும் என்பதையும் கூறினார். இனி நிகழும் என்று அவர் அறிவித்தவற்றில் நபிகள் நாயகம் வருகையும் அடக்கமாகும். இதோ புதிய ஏற்பாட்டில் உள்ள யோவான் 16:5 முதல் 16:15 முடிய உள்ள வசனங்களில் அந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது. இப்பொழுதே என்னை அனுப்பினவரிடம் போகிறேன். எங்கே போகிறீரென்று […]

10) ஜாதிகளின் மீது அதிகாரம் செலுத்தியவர் யார்?

10) ஜாதிகளின் மீது அதிகாரம் செலுத்தியவர் யார்? புதிய ஏற்பாட்டில் யோவானின் தரிசனம் உள்ளது. அதில் இயேசு கூறிய ஒரு முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது. யோவானின் தரிசனம் 2:24 முதல் 2:29 வரை இடம் பெற்ற அந்த முன்னறிவிப்பைக் காதுள்ளவர் கேட்கட்டும்! தியத்தைராவிலிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு, அதாவது, இந்த உபதேசத்தை அங்கீகரியாமலும் சாத்தானின் ஆழங்களென்று சொல்லப்படுவதை அறியாமலுமிருக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது: உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்த மாட்டேன். நான் வரும் வரைக்கும் உங்களுக்குள்ளதைப் பற்றிக் கொண்டேயிருங்கள். […]

09) தீர்க்கதரிசியானவர் யார்?

09) தீர்க்கதரிசியானவர் யார்? பைபிளின் பழைய ஏற்பாட்டில் மற்றுமின்றி புதிய ஏற்பாட்டிலும் நபிகள் நாயகம் (ஸல்) குறித்து பல முன்னறிவிப்புகள் காணப்படுகின்றன. புதிய ஏற்பாட்டின் யோவான், மத்தேயு ஆகிய சுவிசேஷங்களில் இந்த முன் அறிவிப்பைக் காணலாம். இந்த முன்னறிவிப்பை விரிவாகப் பார்ப்போம். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தம் வேதத்தில் முன்னறிவிக்கப்பட்டவாறு மூன்று நபர்களின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பின்வரும் வசனத்திலிருந்து இதை அறியலாம். எருசலேமிருந்து யூதர்கள் ஆசாரியாரையும், லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி நீர் யார் என்று கேட்ட […]

08) ராஜ்யங்களை அடித்து நொறுக்கும் கல் எது?

08) ராஜ்யங்களை அடித்து நொறுக்கும் கல் எது? பைபிளின் பழைய ஏற்பாட்டில் தானியேல் என்றொரு ஆகமம் உள்ளது. அந்த ஆகமத்தில் ஒரு முன்னறிவிப்பு காணப்படுகிறது. அது நபிகள் நாயகத்தின் வருகையையும் இஸ்லாமிய எழுச்சியையும் முன் கூட்டியே அறிவிக்கும் வகையில் அமைந்துள்ளது அதன் விபரம் வருமாறு: ”நெபு காத்நேச்சர்” என்ற அரசன் இருந்தான். அவன் ஒரு கனவு கண்டான். அதன் விளக்கம் அவனுக்குப் புரியவில்லை. மந்திரவாதிகள், குறி சொல்லுகிறவர், சூனியக்காரரையெல்லாம் அழைத்து கனவுக்கு விளக்கம் கேட்டான். ”விளக்கம்” என்ற […]

07) பாரான் மலையில் தோன்றிய பிரகாசம் எது?

07) பாரான் மலையில் தோன்றிய பிரகாசம் எது? பைபிளின் பழைய ஏற்பாட்டில் உபாகமம் என்ற ஆகமம் உள்ளது. இந்த ஆகமத்தில் நபிகள் நாயகம் (ஸல்) குறித்த மற்றொரு முன்னறிவிப்பு காணப்படுகிறது. மோசேவின் வேதமான உபாகமம் 33:1,2 ஆகிய இரு வசனங்களில் இந்த முன்னறிவிப்பைக் காணலாம். கடவுளின் மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன் இஸ்ரவேலரை ஆசீர்வதித்துக் கூறிய ஆசீர்வாதமாவது, கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார், பாரான் மலையிலிருந்து பரிசுத்தவான்கள் நடுவிலிருந்து பிரசன்னமானார். அவர் வலதுபுறத்தில் அக்கினிமயமான […]

06) ஒட்டகங்களில் ஏறிவரும் தீர்க்கதரிசி யார்?

06) ஒட்டகங்களில் ஏறிவரும் தீர்க்கதரிசி யார்? பைபிளின் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ள ஏசாயா ஆகமத்தில் மேலும் ஒரு முன் அறிவிப்புக் காணப்படுகிறது. இந்த முன் அறிவிப்பு இயேசுவைத் தான் குறிக்கிறது என பைபிள் புதிய ஏற்பாடு சாதிக்கிறது. ஆனால், இந்த முன் அறிவிப்பில் 10க்கும் மேற்பட்ட அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரே ஒரு அம்சம் தான் இயேசுவுக்குப் பொருந்துகிறது. அதில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் பொருந்தக் கூடிய ஒரே தீர்க்கதரிசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் […]

05) கர்த்தரைத் தேடாத சமுதாயம் எது?

05) கர்த்தரைத் தேடாத சமுதாயம் எது? பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள ஏசாயா ஆகமத்தில் மற்றொரு முன் அறிவிப்பு காணப்படுகிறது. இந்த முன் அறிவிப்பும் அதில் கூறப்படுகின்ற விவரங்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களது சமுதாயத்தையும் மட்டுமே குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த முன் அறிவிப்பைக் காண்பதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்தும், அவர்கள் எந்தச் சமுதாயத்தில் தோன்றினார்களோ, அந்தச் சமுதாயம் குறித்தும் சில விவரங்களை நாம் நினைவுபடுத்திக் கொள்வது. இதைப் புரிந்து […]

04) கேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்?

04) கேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்? பைபிளின் பழைய ஏற்பாட்டில் ஏசாயா என்றொரு ஆகமம் இருக்கிறது. இந்த ஆகமம் இயேசுவுக்கு முன் வாழ்ந்த ஏசாயா என்ற தீர்க்கதரிசியின் வேதம் என்று கிறித்தவர்களால் நம்பப்படுகிறது. இந்த ஆகமத்தின் 42ஆம் அதிகாரத்தில் இனி தோன்றக் கூடிய தீர்க்கதரிசி பற்றியும், அவரது அடையாளங்கள் பற்றியும் விளக்கமாகக் கூறப்படுகிறது. அந்த அடையாளங்கள் ஏசாயாவை நோக்கி கர்த்தர் கூறுவதைப் போல் அமைந்திருக்கின்றன. அந்த அடையாளங்கள் ஏசாயாவுக்கு பின் இன்று வரை உலகில் தோன்றிய யாருக்காவது […]

03) மஹா சவுந்தர்யமுள்ளவர் யார்?

03) மஹா சவுந்தர்யமுள்ளவர் யார்? பழைய ஏற்பாட்டில் சங்கீதம் என்ற ஆகமம், இடம் பெற்றுள்ளது. இது தாவீது (தாவூது) ராஜாவின் வேதமாகும். இந்த வேதத்தில் தாவீது ராஜா எதிர்காலத்தில் தோன்றக் கூடிய ஒரு தீர்க்கதரிசியைக் குறித்து முன் அறிவிப்புச் செய்கிறார். அது இயேசுவின் வருகை குறித்து தாவீது செய்த முன்னறிவிப்பு என்று கிறித்தவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த முன்னறிவிப்பில், வரக்கூடிய தீர்க்கதரிசிக்குரிய ஏராளமான பிரத்தியோகமான அடையாளங்களை தாவீது ராஜா கூறுகிறார். இந்த அடையாளங்களில் ஒன்றிரண்டு அடையாளங்கள் மட்டுமே […]

02) மோஸேயைப் போன்றவர் யார்?

பழைய ஏற்பாட்டின் முன்னறிவிப்புகள் 1. மோஸேயைப் போன்றவர் யார்? பைபிளில் பழைய ஏற்பாட்டில் 5வது ஆகாமம், உபாகமம் எனப்படும். மோஸே (மூஸா) எனும் தீர்க்கதரிசிக்கு அருளப்பட்டதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்ற இந்த ஆகமத்தில் இரண்டு முன்னறிவிப்புகள் காணப்படுகின்றன. ஒன்று மோசே, மக்களுக்குச் சொன்ன முன்னறிவிப்பு, மற்றொன்று கர்த்தர் மோசேயிடம் சொன்னது. ஏறக்குறைய ஒரே விதமாக அமைந்த இந்த இரண்டு முன்னறிவிப்புகளும் எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தைக் கூறுகின்றன. இஸ்ரவேல் அனைவரையும் மோசே அழைத்து அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகளையும் […]

01) அறிமுகம்

01) அறிமுகம் உலகில் ஏராளமான மதங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் பல மதங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. ஆயினும், வாழுகின்ற மதங்களில் முக்கியமான இடத்தை, இஸ்லாமும், கிறிஸ்தவமும் பிடித்திருக்கின்றன. இவ்விரு மதங்களும் நுழையாத நாடுகள் இல்லை என்று கூறும் அளவுக்கு முழு உலகையும் இவ்விரு மதங்களும் வசப்படுத்தியுள்ளன. இவ்விரு மதங்களுக்கிடையே முக்கியமான கொள்கை வேறுபாடுகள் இருப்பது போலவே, பல ஒற்றுமைகளும் இவ்விரு மதங்களுக்கிடையே நிலவுகின்றன. இயேசு தந்தையின்றி அதிசயமான முறையில் பிறந்தார் என்று கிறிஸ்தவ மார்க்கம் கூறுவதை […]