Category: இஸ்லாத்தின் அடிப்படைகள்

u314d

18) வஸீலா ஓர் விளக்கம்

பாடம் 17 வஸீலா ஓர் விளக்கம் வஸீலா என்றால் என்ன? ”எதன் மூலம் மற்றொன்றின் பக்கம் நெருக்கமாக்கிக் கொள்ளப்படுமோ அதற்கு அரபியில் வஸீலா என்று கூறப்படும்”. அதாவது தமிழில் ”துணைசாதனம்” என்று கூறலாம். கட­ல் பயணம் செய்வதற்கு கப்பல் வஸீலாவாக அதாவது துணைசாதனமாக உள்ளது என்று கூறுவர். அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் அனைத்து முஃமின்களும் வஸீலா தேடவேண்டும் என்று கட்டளைபிறப்பித்துள்ளான். يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ […]

17) ஷஃபாஅத் – பரிந்துரை

பாடம் 16 ஷஃபாஅத் லி பரிந்துரை மறுமையில் ”ஷஃபாஅத்” (பரிந்துரை) என்பது உண்டா? அதனை எவ்வாறு நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்? மறுமையில் ”ஷஃபாஅத்” (பரிந்துரை) என்பது உண்டு. மலக்குமார்களும், நபிமார்களும், நல்லடியார்களும் நரகவாசிகளுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள். ஷஃபாஅத்திற்கு முழு அதிகாரம் படைத்தவன் அல்லாஹ் ஒருவன்தான். قُلْ لِلَّهِ الشَّفَاعَةُ جَمِيعًا  الزمر/44 பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 39:44) ➚ யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் […]

16) இஸ்லாத்தின் அடிப்படைகள்

பாடம் 15 இஸ்லாத்தின் அடிப்படைகள் நாம் எதைப் பின்பற்ற வேண்டும்? நாம் அல்லாஹ்விடமிருந்து வந்த இறைச் செய்திகளை மட்டும்தான் பின்பற்ற வேண்டும். 7:3 اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ‌ ؕ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ‏ உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன்: 7:3) ➚ திருமறைக்குர்ஆனும், மார்க்கமாக நபியவர்கள் வழிகாட்டியவைகளும் இறைச் செய்திகள் ஆகும். […]

15) இணை கற்பிக்கும் காரியங்கள்

பாடம்: 14 இணை கற்பிக்கும் காரியங்கள். இறந்தவர்கள் செவியேற்பார்களா? இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் وَمَا يَسْتَوِي الْأَحْيَاءُ وَلَا الْأَمْوَاتُ إِنَّ اللَّهَ يُسْمِعُ مَنْ يَشَاءُ وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன்: 35:22) إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! (அல்குர்ஆன்: 27:80) […]

14) பலவீனங்களை விட்டும் அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்துதல்.

பாடம் 13 பலவீனங்களை விட்டும் அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்துதல். அல்லாஹ்விற்கு தேவைகள் உண்டா? அல்லாஹ் பசி, தாகம், உணவு, உறக்கம், மலம், ஜலம் கழித்தல் போன்ற அனைத்து தேவைகளை விட்டும் பரிசுத்தமானவன் ஆவான்.   قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ  الإخلاص அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக!   அல்லாஹ் தேவைகளற்றவன் (அல்குர்ஆன்: 102:1) ➚,2)   يَا أَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ  فاطر மனிதர்களே! […]

13) அல்லாஹ்வின் பண்புகள்

பாடம் 12 அல்லாஹ்வின் பண்புகள் ரப்புல் ஆலமீன் என்பதின் விளக்கம் என்ன? ”ரப்பு’ என்ற சொல்லுக்கு எஜமான், பரிபாலனம் செய்பவன்’ என்று பொருள். ஆலமீன் என்றால் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் குறிக்கும். பகுத்தறிவுள்ள, பகுத்தறிவற்ற, உயிருள்ள, உயிரற்ற, சரீரம் உள்ள, சரீரம் அற்ற எல்லவாற்றையும் உள்ளடக்கிக் கொள்ளும் வார்த்தையே ஆலமீன்’ என்ற சொல். அகில உலகையும் படைத்து, பாதுகாத்து, பரிபாலனம் செய்பவன் என்பது ரப்புல் ஆலமீன்’ என்பதன் பொருள். படைப்பினங்களுக்கும், இறைவனுக்குமிடையே உள்ள உறவை வல்ல அல்லாஹ் […]

12) வணக்கங்களும் அதன் வகைகளும்

  பாடம் 11 வணக்கங்களும் அதன் வகைகளும் அல்லாஹ் நம்மை எதற்காகப் படைத்தான்? நாம் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் என்பதற்காக மட்டுமே அல்லாஹ் நம்மைப் படைத்தான். அல்லாஹ் கூறுகிறான்   وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ الذاريات ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51 56)   وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ الإسراء ”என்னைத் தவிர வேறு யாரையும் […]

11) தவ்ஹீதும் , ஷிர்க்கும்

பாடம் 10 தவ்ஹீதும் , ஷிர்க்கும் தவ்ஹீத் என்ற வார்த்தையின் பொருள் என்ன? தவ்ஹீத் என்ற வார்த்தையின் பொருள் ”ஒருமைப்படுத்துதல்”  அல்லது ”ஏகத்துவப் படுத்துதல்” என்பதாகும். தவ்ஹீத் (ஓரிறைக் கொள்கை)  என்றால் என்ன? அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ்வுக்கு நிகராக எவரும், எதுவும் இல்லை. அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்கு தகுதியானவன். அல்லாஹ்வுடைய பண்புகள், ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் வேறுயாருக்கும் இல்லை என்றும் உறுதியாக நம்புவதே தவ்ஹீத் எனும் […]

10) விதியை நம்புதல்

பாடம் 9 விதியை நம்புதல் விதி என்றால் என்ன? இந்த உலகத்தில் நடக்கின்ற அனைத்துக் காரியங்களும் இறைவனின் நாட்டத்தாலே நடக்கின்றது. இறைவன் நாடாமல் உலகத்தில் அனு கூட அசைவதில்லை. நம் வாழ்க்கையில் இன்பம் ஏற்பட்டாலும் துன்பம் ஏற்பட்டாலும் அவை அனைத்து இறைவன் நாடியதாலே ஏற்படுகின்றது. இந்த நம்பிக்கையே விதி எனப்படும். நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்று நம்புவதும் இறைநம்பிக்கையின் ஒரு அம்சம் என நபியவர்கள் கூறியுள்ளார்கள் . (நூல்:முஸ்­ம் (1) விதியை நம்பிக்கை கொள்ள […]

09) மண்ணறை வாழ்க்கை

பாடம் 8 மண்ணறை வாழ்க்கை மண்ணறை வாழ்க்கை என்றால் என்ன? மனிதர்கள் மரணித்ததி­ருந்து, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதற்கு மத்தியில் உள்ள காலகட்டமே மண்ணறை வாழ்க்கையாகும். இதற்கு ”ஃபர்ஸக்” திரை மறைவு வாழ்க்கை என்று கூறப்படும்.. கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் என்ன? ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் மலக்குமார்கள் அவனிடம் மூன்று கேள்விகளைக் கேட்பார்கள். அவை 1. உன்னுடைய இறைவன்  யார்? 2. உன்னுடைய மார்க்கம் எது? 3. உங்களுக்கு அனுப்பட்ட இறைத்தூதரான முஹம்மது நபியைப் பற்றி […]

08) கியாமத் நாளை நம்புதல்

பாடம் 7 கியாமத் நாளை நம்புதல்   கியாமத் நாள் என்றால் என்ன? வானம், பூமி, சூரியன், விண் கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான். பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படுவர். நல்லவர்களுக்கு சுவர்க்கம் என்ற  பேரின்பம் கிடைக்கும்; கெட்டவர்களுக்குத் நரகத்தில் துன்புறுத்தும் பலவிதமான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாழ்விற்கு அழிவே இராது.  […]

07) இறைத்தூதர்களை நம்புதல்

பாடம் 6 இறைத்தூதர்களை நம்புதல்   இறைத்தூதர்கள் என்றால் யார்? இறைவனிடமிருந்து பெற்ற செய்தியை மக்களுக்கு அறிவித்து அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக மனித சமுதாயத்தி­ருந்தே தேர்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்கள் ஆவார்கள். இறைத்தூதர்களை நபிமார்கள் என்றும் ரசூல்மார்கள் என்றும் குறிப்பிடுவர்.   எல்லா  சமுதாயத்திற்கும் இறைத்தூதர்கள்  அனுப்பப்பட்டுள்ளனரா? ஆம்! எல்லா சமுதாயத்திற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாகும்.   وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنْ اُعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ […]

06) வேதங்களை நம்புதல்

பாடம் 5 வேதங்களை நம்புதல்     வேதங்கள் என்றால் என்ன?   மனித  சமுதாயம் இவ்வுலகில் நேரான வழியில் நடப்பதற்காகவும் மறுமையில் வெற்றி பெறுவதற்காகவும் இறைவனால் இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டதே வேதங்களாகும்.   எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டுள்ளதா?   நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும் அவரவரின் மொழியில் வேதங்கள் அருளப்பட்டன. فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ وَأَنْزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ […]

05) மலக்குமார்களை நம்புதல்

பாடம் 4 மலக்குமார்களை நம்புதல் மலக்குமார்கள் என்றால் யார் ? மலக்குமார்கள் இறைவனின் கண்ணியமிக்க அடியார்கள் ஆவார்கள். அவர்கள் இறைவனை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபடக் கூடியவர்கள். وَلَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ(19)يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ(20) سورة الأنبياء  வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அவனிடத்தில் இருப்போர் அவனது வணக்கத்தை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள். அவர்கள் சோர்வடையவும் மாட்டார்கள். […]

04) அல்லாஹ்வின் தோற்றம்

பாடம் 3 அல்லாஹ்வின் தோற்றம் அல்லாஹ் உருவமற்றவனா? இறைவன் உருவமற்றவன் என்று கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும். அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது, அவனுடைய தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள்.   وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ(22)إِلَى رَبِّهَا نَاظِرَةٌ(23) سورة القيامة அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன்: 75:22) ➚,23) மறுமையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அவனைப் பற்றி எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாது வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக […]

03) அல்லாஹ்வை நம்புதல்

பாடம் 2 அல்லாஹ்வை நம்புதல் அல்லாஹ் எங்கே இருக்கிறான்? அல்லாஹ் வானத்தின் மீதுள்ள அர்ஷில் வீற்றிருக்கிறான். அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதற்கு அதிகமான திருக்குர்ஆன் வசனங்கள் சான்றாக உள்ளன. பின்வரும் வசனத்தி­ருந்தும்  ஹதீஸி­ருந்தும் அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் உள்ளான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும் அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன்: 20:5) ➚. நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள் , நான் வானத்திலுள்ள (அல்லாஹ்)வின்  நம்பிக்கைக்குரியவனாயிருக்கின்றேன். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி­)  (புகாரி: […]

02) ஈமான், இஸ்லாம் , இஹ்ஸான்

பாடம் 1 ஈமான், இஸ்லாம் , இஹ்ஸான் ஈமான் என்றால் என்ன?  ‘ஈமான்’ என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் ‘இறைநம்பிக்கை’ என்று பொருள். அதாவது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எவற்றையெல்லாம் நம்ப வேண்டும் என்று கூறினார்களோ அவற்றில் எதையும் அதிகமாக்காமலும் எதையும் விட்டுவிடாமலும் உள்ளதை உள்ளபடி உண்மையென உள்ளத்தால் உறுதிகொள்வதே ‘ஈமான்’ என்பதாகும் ஈமானின் கடமைகள்  எத்தனை? ஈமானின் கடமைகள் ஆறு ஆகும் . பின்வரும் ஹதீஸி­ருந்து அவற்றை நாம் அறிந்து […]

01) முன்னுரை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கொள்கை விளக்கம் – இஸ்லாத்தின் அடிப்படைகள் முன்னுரை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்! ஒரு கட்டிடத்தின் உறுதி அதன் அடிப்படையைப் பொறுத்துத்தான் அமைகிறது. அடிப்படை உறுதியானதாக இருந்தால்தான் கட்டிடமும் உறுதியானதாக இருக்கும். அடிப்படை சரியில்லையென்றால் அக்கட்டிடம் தரைமட்டமாகிவிடும். இஸ்லாத்தின் அடிப்படை அதன் ஓரிறைக் கொள்கையாகும். இந்தக் கொள்கையில் சரியாக இருந்தால்தான் இஸ்லாத்தின் மற்றக் காரியங்களும் வணக்கவழிபாடுகளும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமையும். அடிப்படைக் கொள்கை சரியில்லையென்றால் மற்ற அனைத்துக் […]