Tamil Bayan Points

13) அல்லாஹ்வின் பண்புகள்

நூல்கள்: இஸ்லாத்தின் அடிப்படைகள்

Last Updated on April 23, 2023 by

பாடம் 12

அல்லாஹ்வின் பண்புகள்

ரப்புல் ஆலமீன் என்பதின் விளக்கம் என்ன?

”ரப்பு’ என்ற சொல்லுக்கு எஜமான், பரிபாலனம் செய்பவன்’ என்று பொருள். ஆலமீன் என்றால் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் குறிக்கும். பகுத்தறிவுள்ள, பகுத்தறிவற்ற, உயிருள்ள, உயிரற்ற, சரீரம் உள்ள, சரீரம் அற்ற எல்லவாற்றையும் உள்ளடக்கிக் கொள்ளும் வார்த்தையே ஆலமீன்’ என்ற சொல்.

அகில உலகையும் படைத்து, பாதுகாத்து, பரிபாலனம் செய்பவன் என்பது ரப்புல் ஆலமீன்’ என்பதன் பொருள்.

படைப்பினங்களுக்கும், இறைவனுக்குமிடையே உள்ள உறவை வல்ல அல்லாஹ் இங்கே நமக்குக் கற்றுத் தருகிறான். அகில உலகுக்கும் அவன் எஜமானனாக இருப்பதால், அவனால் படைக்கப்பட்ட அனைவரும் அவனது அடிமைகளே. அடிமை லி எஜமான்’ என்ற உறவைத் தவிர வேறு எந்த உறவும் மனிதனுக்கும் இறைவனுக்குமிடையே கிடையாது.

 

அல்லாஹ் அனைத்தையும் செவியேற்கிறான் என்பதின் விளக்கம் என்ன?

அல்லாஹூத் தஆலா ”அல் அலீம்” யாவற்றையும் அறிந்தவனும், ”அஸ்ஸமீவு” யாவற்றையும் செவியேற்பவனும் ஆவான்.

நாம் இரகசியமாகப் பேசினாலும், பரம ரகசியமாகப் பேசினாலும், மனதிற்குள் நினைத்தாலும், சப்தமாகப் பேசினாலும், எங்கிருந்து அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் , எத்தனை பேர் அழைத்தாலும், தனித்தனியாக அழைத்தாலும், கூட்டாக அழைத்தாலும் அதனை செவியேற்று பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானதாகும். நடந்தவை, நடப்பவை, எதிர்காலத்தில் நடக்க இருப்பவை, வெளிப்படையானவை, மறைவானவை  அனைத்தையும் அல்லாஹ் அறிந்திருக்கிறான். மரத்தி­ருந்து ஒரு இலை விழுந்தாலும் அவன் அறியாமல் விழுவதில்லை.

அல்லாஹ் செவியேற்பதைப் போன்றும், அறிவதைப் போன்றும் இறைவனல்லாதவர்கள் செவியேற்க  முடியும், அறிய முடியும் என்று ஒருவன் நம்பினால் அவன் இணைகற்பித்தவனும், இறைமறுப்பாளனும் ஆவான்.

அல்லாஹ் கூறுகிறான் :

 

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ(11) سورة الشورى

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.  (அல்குர்ஆன் 42:11)

 

 

رَبِّي يَعْلَمُ الْقَوْلَ فِي السَّمَاءِ وَالْأَرْضِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ  الأنبياء

”என் இறைவன் வானத்திலும், பூமியிலும் உள்ள சொல்லை அறிகிறான். அவன் செவியுறுபவன்; அறிபவன் ”

(அல்குர்ஆன் 21:4)

 

அல்லாஹ் பார்க்கிறான் என்பதின் விளக்கம் என்ன?

அல்லாஹ் ”அல்பஸீர்” யாவற்றையும் பார்ப்பவன் ஆவான். இருட்டில் இருந்தாலும், வெளிச்சத்தில் இருந்தாலும், பூமிக்குள் இருந்தாலும், வானத்தில் இருந்தாலும் அனைத்தையும் அல்லாஹ் பார்க்கிறான். கண் சாடைகளையும் கூட அல்லாஹ் பார்க்கிறான். படைப்பினங்களின் எந்தச் செயல்களும் அல்லாஹ்விற்கு தெரியமால் நடைபெறுவதில்லை. அல்லாஹ்வைப் போன்று அவனுடைய படைப்பினங்களில் யாரும் இல்லை. இறைவனல்லாதவர்கள் அல்லாஹ்வைப் போன்று பார்க்கிறார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் இணைகற்பித்தவனும் இறை மறுப்பாளனும் ஆவான்.

 

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ(11) سورة الشورى

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 42:11)

 

பாவங்களை மன்னிப்பவன் யார் ?

பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் நமது பாவங்களை மன்னிக்க இயலாது.

 

مَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ آل عمران

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3 135)

وَاعْتَرَفْتُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ ذُنُوبِيْ جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  (யா அல்லாஹ்)  நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டேன். எனவே என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடு! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிப்பவன் யாருமில்லை. (நூல்:முஸ்­ம் 1290)

மேற்கண்ட ஆதாரங்களி­ருந்து அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறுயாருமில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

நபிமார்களோ, நல்லடியார்களோ, சமாதிகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களோ நம்முடைய பாவங்களை மன்னிக்க முடியும் என்று ஒருவன் நம்பினால் அவன் இறைவனை மறுத்தவன் ஆவான்.

 

ஒரு மனிதன் பிறமனிதர்கள் செய்யும் பாவங்களை மன்னிக்க முடியுமா?

ஒருவன் தனக்கு மற்றவர்கள் செய்த பாவங்களை மன்னிக்கலாம். அதாவது நம்மை ஒருவர் அடித்தால், அல்லது வேறு ஏதேனும் அநியாயம் செய்தால்  அவர் நமக்குச் செய்த பாவத்தை நாம் மன்னிக்கலாம். அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் முஃமின்கள் மற்றவர்கள் அவர்களுக்குச் செய்யும் பாவங்களை மன்னிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளான். அதே நேரத்தில் ஒருவன் மற்றவர்களுக்கு செய்யும் பாவங்களையோ,  அல்லது இறைவனுக் எதிராகச் செய்யும் பாவங்களையோ அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மன்னிக்க இயலாது.

 

நபியவர்கள் பாவங்களை மன்னிக்க முடியாது என்பதற்கு ஆதாரம் என்ன?

பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் நபியவர்களுக்கு கிடையாது. ஏனெனில் நபியவர்கள் தம்முடைய தாயாருக்கும், தந்தையின் சகோதரர் அபூதா­பிற்கும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிய போதும் கூட அல்லாஹ் மன்னிக்கவில்லை. மேலும் முனாஃபிக்கீன்களுக்காக நபியவர்கள் எழுபது தடவை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று திருமறைக் குர்ஆனில் (9 80) அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

இதி­ருந்து பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் நபியவர்களுக்கு கிடையாது என்பதையும் நபியவர்கள் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் நாடினால்தான் பாவங்களை மன்னிப்பான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

 

பாவங்களை மன்னிக்கின்ற அதிகாரம் நபிமார்களுக்கு உண்டா?

ஆதம் (அலை) அவர்கள் தாம் செய்த பாவத்திற்கு அல்லாஹ்விடம்தான் பாவமன்னிப்புக் கோரினார்கள். இபுறாஹிம் (அலை) தமது தந்தை ஆஸரை நரகத்தி­ருந்து காப்பாற்ற முடியவில்லை. மேலும் நூஹ் (அலை), லூத் (அலை) ஆகியோர் தம்முடைய மனைவிமார்களை நரகத்தி­ருந்து காப்பாற்ற முடியவில்லை. இதி­ருந்து பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் நபிமார்களுக்கு கிடையாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளமுடியும்.

 

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு மறைவான ஞானம் உண்டா?

அல்லாஹ் ஒருவன் மட்டுமே மறைவானவற்றை அறிபவன் ஆவான். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவான விசயங்களை அறிய முடியாது.

 

قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ  النمل

வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 27:65)

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டா?

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது.

 

قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ الأنعام

”அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்று நான் உங்களிடம் கூற மாட்டேன்.  ;  நான் மறைவானவற்றையும் அறியமாட்டேன் என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:50)

 

مَا يَعْلَمُ مَا فِي غَدٍ إِلَّا اللَّهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நாளை நடப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள்.

நூல்:இப்னு மாஜா (1887)

 

நபியவர்கள் செய்த முன்னறிவிப்புகளை நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும்?

நபியவர்கள் மறைவான விசயங்களை அறியமாட்டார்கள் என்று நாம் நம்பிக்கை கொள்வதுடன், நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்த விசயங்கள் அல்லாஹ்வின் புறத்தி­ருந்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவையாகும் என்றும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ் எதனை நபியவர்களுக்கு முன்னறிவிப்புச் செய்தானோ அவற்றைத் தவிர வேறு எதையும் நபியவர்கள் அறியமுடியாது,

 

وَمَا أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلَا بِكُمْ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ الأحقاف

எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. என்று நபியே நீர் கூறுவீராக.

(அல்குர்ஆன் 46  9)

நேர் வழிகாட்டும் அதிகாரம் அல்லாஹ்வை தவிர மற்றவர்களுக்கு உண்டா?

நேர்வழிகாட்டக்காட்டக்கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்.  அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் நேர் வழிகாட்ட முடியாது.

 

ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ  الزمر

இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை. (அல்குர்ஆன் 39 23)

 

إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ  القصص

முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 28  56)

 

நபியவர்கள் நேர்வழிகாட்டுவார்கள் என்பதின் பொருள் என்ன?

நபியவர்கள் நேர்வழிகாட்டுவார்கள் என்பதின் பொருள் இறைவனிடமிருந்து பெற்ற சத்தியமார்க்கத்தை மக்களுக்கு கூறுவார்கள் என்பதாகும்.

 

وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ الشورى

நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர் (அல்குர்ஆன் 42:52)

ஒருவருடைய உள்ளத்தை நேர்வழியின் பக்கம் செலுத்தும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

 

அனைத்து துன்பங்களி­ருந்து நம்மை பாதுகாப்பவன் யார்?

அனைத்து துன்பங்களி­ருந்தும் நம்மை பாதுகாப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்.

 

قُلِ اللَّهُ يُنَجِّيكُمْ مِنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ الأنعام

ஒவ்வொரு துன்பத்தி­ருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். ” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)

 

وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ يونس

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10 107)

 

மனிதத் தன்மைக்கு உட்பட்டு ஒருவர் துன்பத்தை நீக்கினார் என்று கூறுவது இணைகற்பித்தல் ஆகாது.

 

அனைத்து நோய்களி­ருந்தும் நிவாரணமளிப்பவன் யார்?

அனைத்து நோய்களி­ருந்து நிவாரணமளிப்பவன் அல்லாஹ் ஒருவன்தான்.

 

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ الشعراء

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.(அல்குர்ஆன் 26:80)

 

وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (இறைவா !) நீயே நிவாரணம் அளிப்பவன். உன்னுடைய நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் கிடையாது. (நூல் புகாரி 5351)

எவ்வித மருந்துகளும், சிகிச்சையும் இல்லாமல், நாம் அறியாத விதத்தில் நோய்களை நீக்குபவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான். நாம் நோய்காக மருத்துவம் செய்தாலும் அல்லாஹ் நாடினால்தான் நிவாரணம் தருவான். இது போன்ற ஆற்றல் இறைவன் அல்லாதவர்களுக்கு இருப்பதாகக் கருதுபவன் இணைகற்பித்தவனும் இறைமறுப்பாளனும் ஆவான்.

ஓதிப்பார்ப்தற்குரிய சட்டங்கள் என்ன?

இணைவைத்தல் கலந்து விடாமல் ஓதிப்பார்ப்பதற்கு அனுமதி உள்ளது.

நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்து வந்தோம். எனவே (நபியவர்களிடம்), ”அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), ”நீங்கள் ஓதிப் பார்ப்பதை என்னிடம் சொல்­க் காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப் பார்த்த­ல் எந்தக் குற்றமும் இல்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மா­க் (ர­),  நூல் :முஸ்­ம் (4427)

திருமறைக்குர்ஆன் மற்றும் நபியவர்கள் கற்றுத் தந்த வாசகங்களைக் கொண்டு நாம் ஓதிப்பார்க்கலாம்.

குறிப்பிட்ட சிலரிடம் சென்று ஓதிப் பார்த்தால் தான் நிவாரணம் கிடைக்கும் என்று நம்பக் கூடாது. ஏனென்றால் குர்ஆனில் தான் நிவாரணம் உள்ளதே தவிர ஓதிப் பார்க்கும் நபருக்கு நிவாரணம் அளிக்க எந்த ஆற்றலும் இல்லை.

இந்த நபரிடம் சென்று ஓதிப் பார்த்தால் குணமடையும் என்று நம்பினால் அந்த நபருக்கு நோய் நிவாரணம் அளிக்கும் ஆற்றல் இருக்கிறது என்றாகி விடும்; இது இறைவனுக்கு இணை கற்பிப்பதாகும்.

 

குழந்தை பாக்கியத்தை தருபவன் யார்?

குழந்தை பாக்கியத்தை தருபவன் அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ் கூறுகிறான்

 

لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ (49) أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ الشورى

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42 ் 49, 50)

 

மழை பொழியச் செய்பவன் யார்?

வானத்தி­ருந்து மழைபொழியச் செய்து  நமக்கு நீர் புகட்டுபவனும், பயிர் பச்சைகளை முளைபிக்கச் செய்பவனும் அல்லாஹ் ஒருவன்தான். இந்த ஆற்றல் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறுயாருக்கும் கிடையாது.

 

هُوَ الَّذِي أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً لَكُمْ مِنْهُ شَرَابٌ وَمِنْهُ شَجَرٌ فِيهِ تُسِيمُونَ النحل

அவனே வானத்தி­ருந்து உங்களுக்காகத் தண்ணீரை இறக்கினான். அதில் குடிநீரும் உண்டு. நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்களும் அதனால் கிடைக்கின்றன. (அல்குர்ஆன் 16:10)

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வே பயனுள்ள மழையை பொழியச் செய்வாயாக என்று பிரார்த்தித்தார்கள். (புகாரி 985)

 

இறைவனல்லாதவர்கள் மழை பொழியச் செய்வார்கள் என்று நம்புபவனின் நிலை என்ன?

இறைவனல்லாதவர்கள் மழை பொழியச் செய்வார்கள் என்று நம்பிக்கை கொள்பவன் இறைகற்பிப்பவனும், இறைமறுப்பாளனும் ஆவான்.

அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்’ என இறைவன் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் புகாரி 846

 

ஆட்சியைத் தருபவன் யார்?

ஆட்சியைத் தருபவன் அல்லாஹ் ஒருவன்தான்.

 

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ آل عمران

”அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3:26)

 

அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவனும், செல்வத்தை தருபவனும் யார்?

அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவனும், செல்வத்தையும், வறுமையையும் தருபவனும் அல்லாஹ் ஒருவன்தான்.

 

 

انَّ الَّذِينَ تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ لَا يَمْلِكُونَ لَكُمْ رِزْقًا فَابْتَغُوا عِنْدَ اللَّهِ الرِّزْقَ وَاعْبُدُوهُ وَاشْكُرُوا لَهُ إِلَيْهِ تُرْجَعُونَ العنكبوت

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 29:17)