Tamil Bayan Points

17) ஷஃபாஅத் – பரிந்துரை

நூல்கள்: இஸ்லாத்தின் அடிப்படைகள்

Last Updated on April 23, 2023 by

பாடம் 16

ஷஃபாஅத் லி பரிந்துரை

மறுமையில் ”ஷஃபாஅத்” (பரிந்துரை) என்பது உண்டா? அதனை எவ்வாறு நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்?

மறுமையில் ”ஷஃபாஅத்” (பரிந்துரை) என்பது உண்டு. மலக்குமார்களும், நபிமார்களும், நல்லடியார்களும் நரகவாசிகளுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள்.

ஷஃபாஅத்திற்கு முழு அதிகாரம் படைத்தவன் அல்லாஹ் ஒருவன்தான்.

 

 

قُلْ لِلَّهِ الشَّفَاعَةُ جَمِيعًا  ளالزمر/44

பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 39:44)

 

யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிப்பான்.

 

 

مَا مِنْ شَفِيعٍ إِلَّا مِنْ بَعْدِ إِذْنِهِ  ளيونس/3

அவன் அனுமதி பெறாமல் எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை  (அல்குர்ஆன் 10:3)

 

 

وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى  ளالأنبياء/28

அவன் பொருந்திக் கொண்டவர்களுக்கே தவிர அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள்

(அல்குர்ஆன் 21:28)

யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிப்பான் என்பதால் பரிந்துரையை யாரிடமும் வேண்டக் கூடாது.

 

நபிகள் நாயகத்தின் பரிந்துரையை அல்லாஹ்விடம் கேட்கலாமா?

நபிகள் நாயகத்தின் பரிந்துரை நரகவாதிகளுக்கு உரியதாகும். எவரது பரிந்துரையும் இன்றி சொர்க்கம் செல்லத்தான் ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். அதைத் தான் இறைவனிடம் கேட்க வேண்டும்.

 

 

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَفَاعَتِي لِأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்னுடைய பரிந்துரை என்னுடைய சமுதாயத்தில் பெரும்பாவங்கள் செய்வதர்களுக்கு உரியதாகும்.

அறிவிப்பவர்:அனஸ் (ர­) நூல்:திர்மதி (2359)

‘இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையைத் தா!’ என்று கேட்பது தவறாகும்.

என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும் கூறினார்கள்.

நபிகள் நாயகத்தின் பரிந்துரை யாருக்கு கிடைக்கும்?

நபிகள் நாயகத்தின் பரிந்துரை அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காதவர்களுக்கே கிடைக்கும்.

 

 

أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ خَالِصًا مِنْ قَلْبِهِ أَوْ نَفْسِهِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதிபெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை’ (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர்தாம் என்றார்கள்.

அறிவிப்பவர்:அபூ ஹூரைரா (ர­) நூல்:புகாரி (99)

 

மகான்களின் பரிந்துரையை அல்லாஹ்விடம் கேட்கலாமா?

மறுமையில் அல்லாஹ் யாருக்கு அனுமதியளிப்பான் என்பது யாருக்கும் தெரியாது. எனவே ”மகானே! எனக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள்” என்று இங்கே வாழும் போது கேட்கக் கூடாது. அது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.

மக்காவில் வாழ்ந்தவர்கள் இவ்வாறு பரிந்துரை வேண்டிய காரணத்தினால் தான் இணை வைப்போர் ஆனார்கள்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ”அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். ”வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்­க் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!      (அல்குர்ஆன் 10:18)

யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிப்பான் என்பதால் பரிந்துரையை யாரிடமும் வேண்டக் கூடாது.