அன்றைய அறியாமைக் காலத்தில் இஸ்லாம் வருவதற்கு முன்பே மக்கத்து காஃபிர்கள்கூட மஹர் கொடுத்துத்தான் திருமணம் புரிந்துவந்தனர். இருப்பினும் பெண்களுக்கு மஹர் கொடுக்காமல் இருப்பதற்கு என்னென்ன தந்திரம் செய்ய வேண்டுமோ அதைச் செய்தார்கள். என்றாலும் இன்றைய காலத்தில் பெண்களுக்கு ஆண் சமூகம் செய்யும் கொடுமையளவுக்கு அன்றைய அறியாமைக் காலம் செய்யவில்லை. மாறாக, பெண்ணுக்கு மஹர் தொகையைக் கொடுக்காமல் இருப்பதற்காக, ஒரு ஆணின் சகோதரியை இன்னொரு ஆண் திருமணம் முடித்துக் கொண்டு, திருமணம் முடித்தவரின் சகோதரியை மைத்துனர் கட்டிக் கொள்வார். […]