கரடிகள் ஏன் நீண்ட நேரம் உறங்குகின்றன?
பழுப்பு கரடிகள் எட்டு மாதங்கள் வரை தொடர்ந்து உறங்கும். இவ்வளவு நீண்ட நாட்கள் மனிதர்கள் தூங்கினால், எலும்புகள் வலுவிழந்து, தசைகள் சிதைந்து, தோல் வறண்டுவிடும்.
ஆனால் கரடிகள் நீண்ட நாட்கள் தூங்கினாலும், எந்த நோயும் வராமல் ஆரோக்கியமாக இருக்கின்றன. அவற்றின் இதயம் ஒரு நிமிடத்திற்கு பத்து முறை மட்டுமே துடிக்கும். இது ஒரு ஆழமான ஓய்வு நிலை.
கரடிகளின் இரத்தத்தில் HSP47 என்ற புரதம் உள்ளது. இந்த புரதம் இரத்த அணுக்களின் மீது இருந்து இரத்தம் உறைவதற்கு உதவுகிறது. கரடிகள் உறங்கும் போது, இந்த புரதத்தின் அளவு இரத்தத்தில் குறைந்துவிடுகிறது.
இறைவன் தனது படைப்பில் ஒவ்வொரு உயிருக்கும் தனித்துவமான அமைப்பை வழங்கியுள்ளார். கரடிகள் நீண்ட நாட்கள் உறங்கும் இந்த விந்தையான திறனும், அவரது ஞானத்தையும், படைப்பின் ஒழுங்கையும் காட்டுகிறது.
ஆதாரம்: விகடன்