மரத்தில் பாயும் மின்சாரம் மரக்கட்டையில் ஏன் பாய்வதில்லை?
தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தும். ஆனால், தூய்மையான தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தாது. தண்ணீரில் கலந்துள்ள உப்புகளும் தாதுக்களும்தான் மின்சாரத்தைக் கடத்துகின்றன.
மரங்கள் தண்ணீரை உறிஞ்சும்போது, தண்ணீரில் கலந்துள்ள உப்புகளும் தாதுக்களும் மரத்திற்குள் சென்றுவிடும். அதனால் பச்சை மரங்கள் மின்சாரத்தைக் கடத்துகின்றன.
ஆனால், காய்ந்த மரக்கட்டைகளில் நீர்ச்சத்து இல்லை. அதனால் அவை மின்சாரத்தைக் கடத்துவதில்லை. மின்சாரம் தொடர்பான வேலைகளில் ஈடுபடும்போது, மரக்கட்டை அல்லது மரத்தால் செய்யப்பட்ட முக்காலி மீது நின்றுகொண்டு வேலை செய்யச் சொல்வதற்கு இதுவே காரணம்.
இறைவன் தனது படைப்பில் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தன்மை அளித்துள்ளார். தண்ணீரில் உள்ள தாதுக்களும், மரத்தின் நீர்ச்சத்தும் மின்சாரத்தைக் கடத்தும் தன்மையை உருவாக்குகின்றன. காய்ந்த மரக்கட்டை மின்சாரத்தைக் கடத்தாதவாறு படைக்கப்பட்டிருப்பது, மனிதர்களுக்கு பாதுகாப்பைத் தருகிறது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை