தேனடை ஏன் அறுங்கோண வடிவில் உள்ளது?
தேனீக்கள் மெழுகை வைத்து கூட்டை உருவாக்கும்போது, முதலில் வட்டம் அல்லது உருளை வடிவிலேயே அறைகளை உருவாக்குகின்றன.
பல்லாயிரக்கணக்கான தேனீக்கள் ஒன்றுசேர்ந்து, தங்கள் உடலில் இருந்து வெப்பத்தை வெளியேற்றுகின்றன. இந்த வெப்பத்தால் மெழுகு கொஞ்சம் உருகுகிறது.
கூட்டில் உள்ள பல உருளை வடிவ அறைகள் வெப்பத்தால் உருகி, ஒன்றை மற்றொன்று நெருக்கமாக அழுத்துகின்றன. அப்போது, மேற்பரப்பு இழுவிசையாலும், அழுத்தத்தின் சமநிலையாலும் அந்த வட்டங்கள் இயற்கையாகவே அறுங்கோண வடிவமாக மாறுகின்றன.
இந்த அறுங்கோண வடிவம் தேனை அதிக அளவில் சேமிக்க உதவுகிறது. மேலும், கூட்டுக்கு உறுதியையும் தருகிறது.
இறைவன் படைத்த தேனீக்களின் இந்த அமைப்பு, அவற்றின் கூட்டை வலிமையாகவும், அதிக தேனைச் சேமிக்கும் வகையிலும் உருவாக்குகிறது. இது இயற்கையின் வியக்கத்தக்க வடிவமைப்பைக் காட்டுகிறது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை