பூமியில் உள்ள நீரின் அளவு பற்றிய அறிவியல் உண்மைகள்

அறிவியல் உண்மைகள்

பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு நீர் மிக அவசியம். நம் பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த நீரில் பெரும்பாலானவை உப்பு நீராகும்.

இந்த உப்பு நீர் குடிப்பதற்கோ அல்லது விவசாயத்திற்கோ ஏற்றதல்ல. இதனால் எதிர்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற கவலை நிலவுகிறது.

2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, பூமியில் உள்ள பெருங்கடல்களில் சுமார் 1.335 பில்லியன் கன கிலோமீட்டர் நீர் உள்ளது. இது பூமியின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும்.

நிலத்தடி நீர் ஆதாரங்களும் கணிசமான அளவில் உள்ளன. பூமியின் மொத்த நன்னீரில் சுமார் 30% நிலத்தடி நீராகும். இதில் சுமார் 22.6 மில்லியன் கன கிலோமீட்டர் நீர் பூமியின் மேலோட்டத்தில் சேமிக்கப்பட்டுள்ளதாக 2015 ஆம் ஆண்டு நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இந்த நிலத்தடி நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம்: விகடன்