பத்ரு யுத்தத்தில் மிகப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்த குரைஷிகள் முஸ்லிம்களை எப்படியாவது பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்று வெறிகொண்டிருந்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய போரை நடத்த வேண்டும் என்று ஆலோசனை செய்து அதற்கான முயற்சியில் இறங்கினர். உஹதுப் போர் தொடர்பாக நபி கண்ட கனவு உஹதுப் போருக்கு முன்பாக நபியவர்கள் ஒரு கனவினைக் கண்டார்கள். அதில் வாள் ஒன்றை அசைக்க அதன் முனை உடைவது போன்றும், மற்றொரு முறை அசைக்கும் போது அது முன்பிருந்தபடியே ஒட்டிக் கொள்வது […]