குடும்ப வாழ்க்கையில் பெண்களை நிர்வாகம் செய்யும் ஆண்கள், அவர்களை சிறை வாழ்க்கையைப் போன்று நடத்தாமல் சில சுதந்திரங்களைக் கொடுத்துத் தான் நிர்வகிக்க வேண்டும். அதே நேரத்தில் பெண்கள் அந்த சுதந்திரத்தை மார்க்கம் அனுமதித்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர மார்க்கத்தின் எல்லையை மீறக் கூடாது. இந்த விஷயத்தில் வரம்பு மீறினால் சுவனத்தின் வாடை கூடக் கிடைக்காது என்பதை நினைத்து, இறைவனைப் பயந்து பெண்கள் நடந்து கொள்ள வேண்டும். நறுமணம் பூசிக் கொண்டு இரவில் செல்லத் தடை […]