Author: Trichy Farook

மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்?

மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்? 90 நாட்களுக்கு மேல் மனைவியைப் பிரிந்திருக்கக் கூடாது என்றோ, நாள் குறிப்பிட்டோ எந்த ஹதீஸும் இல்லை. ஆனால் மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யும் கடமை கணவனுக்கு உள்ளது. அவனும் வழி தவறி விடாமல் அவளும் வழி தவறி விடாமல் காக்கும் கடமையும் அவனுக்கு உண்டு. ஒரு மனைவியால் ஒரு மாதம் கூட கணவனைப் பிரிந்திருக்க முடியாது என்ற நிலை இருந்தால் அப்போது ஒரு மாதம் பிரிந்திருப்பதே குற்றமாகி விடும்.

3) கஅபாவின் சிறப்பு சட்டங்கள்

நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில: அங்கு கொலை செய்வதோ போர் புரிவதோ கூடாது. அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, “அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை […]

கருக்கலைப்பு செய்வது குற்றமா?

கருக்கலைப்பு செய்வது குற்றமா? 120 நாட்களுக்கு முன் கருவை கலைத்தால் அது குழந்தையை கொன்றதாக ஆகாது திருக்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று தெளிவான கட்டளை உள்ளது. அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (அல்குர்ஆன்: 6:140)➚ வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்” என்று […]

குழந்தை உருவாகாமல் தடுக்க ஆணுறை பயன்படுத்தலாமா

குழந்தை உருவாகாமல் தடுக்க ஆணுறை பயன்படுத்தலாமா? பயன்படுத்தலாம். கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் […]

2) இப்ராஹீம் நபி புனர்நிர்மாணம் செய்தல்

“கஅபா’ ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இபுறாஹீம் (அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள “மஸ்ஜிதுல் அக்ஸா”வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது. அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் “பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல் மஸ்ஜிதுல் […]

குளிப்பு எப்போது கடமையாகும்?

குளிப்பு எப்போது கடமையாகும்? உடலுறவில் ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சந்தித்துவிட்டால் ஆணுக்கு விந்து வெளிப்படாவிட்டாலும் இருவர் மீதும் குளிப்பு கடமையாகிவிடும். “பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் :(முஸ்லிம்: 579) ➚,(திர்மிதீ: 102) ➚

வரதட்சணையின் காரணம் என்ன?

வரதட்சணைக் கொடுமையும் நிரந்தர நரகமும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்கள் ஏற்கனவே இருந்து வந்த மதக் கலாச்சாரங்களிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. விட்ட குறை தொட்ட குறை என்பது போல், தாங்கள் விட்டு வந்த கலாச்சாரங்களை இஸ்லாத்திற்கு வந்த பின்பும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் திருக்குர்ஆனோ இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றச் சொல்கின்றது. நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான். (அல்குர்ஆன்: 2:208)➚ பெரும்பான்மையான […]

கணவர் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா?

கணவர் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா? கர்ப்பிணிப் பெண்கள் அவர்கள் குழந்தையை ஈன்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான். (அல்குர்ஆன்: 65:4)➚ கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க […]

கொடிய வரதட்சணையின் கோர முகம்

கொடிய வரதட்சணையின் கோர முகம் 3009 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ حَاتِمٍ – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ الْمَدَنِىُّ – عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ قَالَ دَخَلْنَا عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ فَسَأَلَ عَنِ الْقَوْمِ حَتَّى انْتَهَى إِلَىَّ فَقُلْتُ أَنَا مُحَمَّدُ بْنُ عَلِىِّ بْنِ حُسَيْنٍ. فَأَهْوَى […]

எவை எல்லாம் வரதட்சணையாகக் கருதப்படும்?

எவை எல்லாம் வரதட்சணையாகக் கருதப்படும்? வரதட்சணை என்று நேரடியாகச் சொல்லித் தந்தால் தான் வரதட்சணை என்று பலரும் நினைக்கின்றனர். சீர்வரிசைகளைக் கேட்காவிட்டாலும் அதைக் கொடுக்காவிட்டால் நம் மகளைச் சரியாக நடத்த மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே கொடுக்கப்படுகின்றன. திருமணம் நடப்பதற்கு முன் அல்லது திருமணத்தின் போது கேட்காமல் கொடுத்தாலும் அதுவும் கேட்டது போல் தான். பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்! அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத்களை […]

வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுப்பது எப்படி?

வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுப்பது எப்படி? பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டு வருவதால் வாங்கிய அதே தொகையைக் கொடுப்பதா? இன்றைய மதிப்பின் அடிப்படையில் கொடுப்பதா? எந்த ஒரு கொடுக்கல் வாங்களும் எந்த அர்த்தத்தில் நடைமுறையில் உள்ளதோ அதற்கேற்பத் தான் பொருள் கொள்ள வேண்டும். ஒருவரிடம் கடன் வாங்கி விட்டு ஆண்டுகள் பல கடந்த பின் திருப்பிக் கொடுத்தால் பணத்தின் மதிப்பை நாம் பார்ப்பதில்லை. வாங்கிய தொகையைத் தான் கொடுக்க வேண்டும். இந்தப் பணத்துக்கு எவ்வளவு தங்கம் வாங்க […]

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா?

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா? திருமணம் முடிவாகும் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைக் கேட்டுப் பெறுகின்றனர். திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து தொகையாகவோ, நகையாகவோ ,பொருளாகவோ எதைப் பெற்றாலும் அது வரதட்சனையாகும். மாப்பிள்ளை வீட்டார் மணமகளுக்கு இவ்வளவு நகை போட வேண்டும் என பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துகின்றனர். இந்த அடிப்படையில் தந்தை தன் மகளுக்கு நகைகளை வாங்கிக் கொடுத்தால் இது அன்பளிப்பாகாது. மாறாக அன்பளிப்பு என்ற பெயரில் […]

மனைவியின் கடமைகள்

மனைவியின் கடமைகள் குடும்ப வாழ்வில், ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை மட்டும் இஸ்லாம் கற்றுத் தரவில்லை. பெண்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குகின்றது. அவர்களும் தக்க முறையோடு நடந்திட வேண்டும் என்பதையும் மார்க்கம் கூறவே செய்கிறது. கட்டுப்பட்டு நடத்தல் தம்பதியர் கடமைகளில் மிகவும் முக்கியமானது, மார்க்கத்திற்கு முரணில்லாத முறையில் கணவனுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமையாகும் இறைவன் இயற்கையிலேயே ஆண்களை வலிமை மிக்கவர்களாகப் படைத்துள்ளான். மேலும் ஆண்கள், பெண்களுக்கும் குடும்பத்திற்கும் செலவு செய்கிறார்கள் என்ற நிலையில் […]

பெண்கள் விஷயத்தில் இறைவனை அஞ்சிவோம்!

நமது நாட்டில் ஒரு பெண் ஒருவனைத் திருமணம் செய்து, புகுந்த வீட்டிற்கு வருகிறாளென்றால் அந்தப் பெண் மட்டும் அவனுக்கு அடிமையல்ல! அந்தப் பெண்ணின் வீட்டார்கள் அத்தனை பேர்களும் கணவனுக்கும் அவனது வீட்டாருக்கும் அடிமையாய் இருக்கிறார்கள். அவனுடைய வீட்டிலுள்ளவர்கள் எல்லோருக்குமே அடிமை சாஸனம் எழுதிக் கொடுத்தவர்கள் போல் செயல் படவேண்டும் என்ற நிலை உள்ளது. ஒரு பெண் ஒருவனைத் திருமணம் செய்வதென்பது, ஒரு முள் மரத்தில் அழகான சேலையைப் போடுவதைப் போலத் தான். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு, பெண் […]

வெளியே செல்லும் பெண்களுக்கு வேதம் சொல்லும் விதிகள்

வெளியே செல்லும் பெண்களுக்கு வேதம் சொல்லும் விதிகள் وَقَرْنَ فِىْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَـرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلٰى وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِيْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ۚ‏ உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு […]

அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்

அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள் “என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?” என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது. அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார். சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிருந்து […]

கொஞ்சிப் பேசும் குடும்பப் பெண்கள்

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா? “பொம்பள சிரிச்சாப் போச்சு” என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். இது எதைக் குறிக்கின்றது? ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை. ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து […]

திருமண சபைகளில் நம் பெண்களின் நிலை

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் ஆஹா! இதோ பார்! சூப்பர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி […]

கூட்டுக்குடும்பமா? கவனம் தேவை!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! கணவனும் மனைவியும் அவர்களது பிள்ளைகளும் மட்டுமே வாழும் குடும்பத்தில் அந்நிய ஆடவர்களுக்கு பெரும்பாலும் வேலையிருக்காது. ஆனால் நம் நாட்டில் அதிகமான மக்கள் பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். அது போன்ற குடும்பங்களில் பெண்களும், ஆண்களும் பேண வேண்டிய ஒழுங்குகளை நிறைய உள்ளன. குறிப்பாக அண்ணன் தம்பி திருமணம் ஆன பிறகும் இணைந்து வாழும் குடும்பங்களில் உள்ள நிலையை நாம் கண்டிப்பாக இஸ்லாமிய பார்வையில் சிந்தித்து நம்மிடையே உள்ள தவறுகளை களையவேண்டும். ஏனெனில், அண்ணன் […]

குழந்தைகளைக் கொஞ்சுவோம்

குழந்தைகளைக் கொஞ்சுவோம் இஸ்லாம் என்பது ஒரு அமைதி, அன்பு மார்க்கம். மனிதர்கள் அனைவரிடத்திலும் அன்பு காட்டச்சொல்லும் அற்புத மார்க்கம். தாய், தந்தை, உறவினர் என அனைவரிடத்திலும் தோழமை பாராட்டச்சொல்லும் இந்த மார்க்கத்தில் பெற்ற குழந்தைகளிடத்தில் அன்பு காட்டுவதையும் அதிகம் அதிகம் வழியுறுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் அருள் வேதம் அருளப்படுவதற்கு முன் அரபியர்கள் தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளைப் புதை குழிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டு, அன்பின் அர்த்தம் அவர்களுக்குப் புரிய வைக்கப்பட்டது. […]

விருந்தில் சீரழியும் இஸ்லாமிய சமுதாயம்

விருந்தில் சீரழியும் சமுதாயம் நமது சமுதாயத்தில் பல்வேறு விருந்துகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. பெயர் சூட்டு விழா விருந்து, கத்னா விருந்து, சடங்கு விருந்து, கல்யாண விருந்து, புதுமனைப் புகுவிழா விருந்து, பிள்ளைப் பேறு விருந்து, இறந்தவர் வீட்டில் அவர் அடக்கம் செய்யப்பட்டதும் விருந்து, மூன்றாம் நாள் பாத்திஹா விருந்து, ஏழாம் நாள் பாத்திஹா விருந்து, நாற்பதாம் நாள் பாத்திஹா விருந்து, ஹஜ்ஜுக்குச் செல்லும் விருந்து என விருந்து மழைகள் பொழிந்து கொண்டிருக்கின்றன. மக்கள் அம்மழையில் […]

தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். தர்மம் வழங்காதவர்கள் அடையும் தண்டனைகளைப் பற்றி குர்ஆனும் ஹதீஸும் கடுமையான முறையில் சொல்லிக் காட்டுகின்றன. வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம் مَثَلُ الْبَخِيلِ وَالْمُنْفِقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ مِنْ ثُدِيِّهِمَا إِلَى تَرَاقِيهِمَا فَأَمَّا الْمُنْفِقُ فَلاَ يُنْفِقُ إِلاَّ سَبَغَتْ […]

ஜமாஅத் தொழுகை

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். கடமையான ஐவேளைத் தொழுகையை ஆண்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தான் தொழ வேண்டும். அது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட காரியமாக உள்ளது. எனவே அதன் நன்மைகளையும் அதில் அலட்சியமாக இருப்பவர்களின் நிலையைப் பற்றியும் இந்த உரையில் காண்போம். நயவஞ்சகரின் அடையாளம் عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه […]

ரகசியம் ஓர் அமானிதமே!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். “நண்பா! ஒரு முக்கியமான செய்தியை உன்னிடம் சொல்ல விரும்புகின்றேன். தயவு செய்து அந்தச் செய்தியை உன்னுடன் ரகசியமாக வைத்துக் கொள். அதை நீ யாரிடமும் சொல்லி விடக் கூடாது” என்ற வேண்டுகோளுடன், நிபந்தனையுடன் ஒருவர் தன் நண்பரிடம் ஒரு செய்தியைத் தெரிவிப்பார். அவரும் இதை ஒப்புக்கொண்டு […]

மனத் தூய்மையும் மகத்தான கூலியும்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதன் இறைவனை வணங்கும் போது அந்த வணக்கத்தை அவனுக்காகவே தவிர வேறு யாருக்காகவும் ஆக்கி விடக்கூடாது என்ற நிபந்தனையை முக்கியமான நிபந்தனையாக இறைவன் விதித்திருக்கிறான். ஒரு வணக்கத்தைச் செய்யும் போது அவனை இன்னொரு மனிதன் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், புகழவேண்டும் என்பதற்காகவும், அல்லது உலகப் பலனை […]

இறைப் பொருத்தத்தை அடைவோம்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உலகில் பிற மனிதர்களின் நெருக்கம், அவர்களின் பொருத்தம் கிடைக்க வேண்டுமென்று நாம் பெரிதும் ஆசைப்படுகிறோம். ஒவ்வொரு செயலிலும் தமது விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, பிறர் இதைப் பொருந்திக் கொள்வார்களா என்ற எண்ணமே அதிகமான மனிதர்களிடம் மேலாங்கி உள்ளது. ஆடை, வாட்ச் போன்ற சாதாரண பொருட்களைக் கூட […]

அன்பளிப்பு செய்வோம்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அன்பளிப்பின் சிறப்பு: மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் மற்றொருவரோடு தொடர்பு கொண்டு தான் இவ்வுலகில் வாழ முடியும். பிறரோடு தொடர்பே இல்லாமல் எவராலும் வாழ இயலாது. தான் தொழில் செய்யும் போது, அல்லது கடையில் பொருள்கள் வாங்கும் போது, கடன் கொடுக்கும் போது, வாங்கும் […]

தொழுகையை பேணுவோம்!

தொழுகையை பேணுவோம்! இஸ்லாம் என்றாலே தொழுகைதான் பல்வேறு கடவுள் நம்பிக்கைகள் கொண்ட சமுதாயங்கள் உலகில் உள்ளன. அதில் இறைவன் ஒருவன் தான். என்று அவனை மட்டுமே வணங்கி, இணைவைக்காமல் வாழ்ந்து சொர்க்கத்தை பெற வேண்டும் என்ற ஆசையில் வாழும் சமுதாயம், இந்த முஸ்லிம் சமுதாயம். வந்தே மாதரம் என்று கூறினால் மண்ணை வணங்குவதாக ஆகிவிடும். என் உயிரே போனாலும் அப்படி கூற மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கும் சமுதாயம், இந்த முஸ்லிம் சமுதாயம். கடவுடள் கொள்கையில் எந்தவித […]

ஸஜ்தா வசனம் ஓதி சஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் கூற வேண்டுமா?

ஸஜ்தா வசனம் ஓதி சஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டுமா? குர்ஆன் வசனங்களை ஓதி ஸஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை பலவீனமான ஹதீஸ்களாக உள்ளன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர். அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் செய்வோம் என்று இப்னு உமர் […]

நபி முஆதிடம் இஜ்திஹாத் செய்ய சொன்னார்களா?

நபி முஆதிடம் கூறியது நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி)யை யமனுக்கு அனுப்பும் போது, நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வுடைய வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று முஆத் (ரலி) பதிலளித்தார். அல்லாஹ்வுடைய வேதத்தில் இல்லையென்றால்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதரின் சுன்னத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று முஆத் (ரலி) கூறினார். அல்லாஹ்வின் தூதருடைய சுன்னத்திலும் இல்லையென்றால்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, என்னுடைய சிந்தனையைக் கொண்டு […]

பாதத்தை மறைப்பது

பாதத்தை மறைப்பது உம்மு ஸல்மா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் கீழங்கி இல்லாத போது நீளமான சட்டையுடனும் ஒரு முக்காடு உடனும் தொழலாமா என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீளமான சட்டை (பெண்ணுடைய) பாதங்களை மறைக்கக் கூடிய அளவிற்கு இருந்தால் தொழுது கொள்ளலாம் என்று பதிலளித்தார்கள். நூல் : அபூதாவூத் இதில் அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் (தீனார்) என்பவர் இடம்பெருகிறார். இவர் பலவீனமானவர். இவரை பற்றி இப்னு மயீன் […]

ஒரு ஆண்டு நிறைவடைந்தால் தான் ஜகாத் கடமை

ஒரு ஆண்டு நிறைவடையும் வரை ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஒரு ஆண்டு நிறைவடையும் வரை அதற்கு ஜகாத் இல்லை என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்களையும் மாற்றுக் கருத்துடையோர் ஆதாரமாகக் காட்டி வந்தனர். இந்த ஹதீஸ்களில் எந்த ஒன்றும் சரியானதல்ல ஆண்டுக்கான ஜகாத்தை முன் கூட்டியே வாங்கிய ஹதீஸ் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இரண்டு வருடங்களுக்கான ஜகாத்தை நபிகள் நாயகம் அவர்கள் முன் கூட்டியே வாங்கினார்கள் இந்தக் கருத்தில் உள்ள அறிவிப்புக்கள் ஒன்றுகூட சரியானவை அல்ல அனாதைகளின் […]

இப்றாஹீம் நபியின் தந்தை சம்பவம்

இப்றாஹீம் நபி சம்பவம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸரை, மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், ”நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை ”இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் ”இறைவா! மக்களுக்கு […]

அபூபக்கர் தர்மம் – ஈமான் – குகை

அபூபக்கர் தர்மம் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்நேரத்தில் என்னிடத்தில் இதற்குத் தோதுவாக செல்வம் இருந்தது. ஒரு நாளும் அபூபக்ரை (நன்மையில்) நான் முந்தியதில்லை. எனவே நான் இன்று அபூபக்ரை (தர்மம் செய்வதில்) முந்தி விடுவேன் என்று (மனதில்) கூறிக் கொண்டேன். எனது செல்வத்தில் பாதியை (நபி (ஸல்) அவர்களிடத்தில்) நான் கொண்டு வந்தேன். உமது குடும்பத்தாருக்காக நீங்கள் என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று […]

குர்ஆனில் 15 ஸஜ்தாக்கள்

ஸஜ்தா வசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் 15 ஸஜ்தாக்களை என்னிடம் ஓதிக் காண்பித்தார்கள் என்றும், அவற்றில் (காஃப் அத்தியாயத்திருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம் பெறும் மூன்று ஸஜ்தாக்களும், சூரத்துல் ஹஜ்ஜில் இடம் பெறும் இரண்டு ஸஜ்தாக்களும் அடங்கும்” என்று அம்ர் பின் அல்ஆஸ் (ர) அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் 1193வது ஹதீஸாகவும் இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் மேற்கண்ட 15 இடங்களிலும் ஸஜ்தா செய்யப்படுகின்றது. ஆனால் இந்த ஹதீஸ் […]

தஸ்பீஹ் ஹதீஸ்

தஸ்பீஹ் ஹதீஸ் ”உங்கள் விரல்களால் (தஸ்பீஹ் செய்து) எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்பட்டு அவைகள் பேச வைக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: யுஸைரா (ர), நூல்கள்:(அஹ்மத்: 25841) ➚,(திர்மிதீ: 3507) ➚ இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றி சில அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். இரண்டாவது அறிவிப்பாளர் ஹுமைளா பின்த் யாஸிர் என்பவரும் மூன்றாவது அறிவிப்பாளர் ஹானீ பின் உஸ்மான் என்பவரும் யாரென அறியப்படாதவர்கள். இவ்விருவரையும் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு […]

உடலுறவுக்குப் பின்னர் தான் வலீமா கொடுக்க வேண்டுமா?

உடலுறவுக்குப் பின்னர் தான் வலீமா கொடுக்க வேண்டுமா? இல்லை. திருமணம் முடித்த பின் மணமகன் வலீமா விருந்து கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் வலீமா விருந்தளிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் நபி (ஸல்) அவர்கள் விதிக்கவில்லை. முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னையும் ஸஅது பின் ரபீஃ அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி), “நான் அன்சாரிகளில் அதிக […]

திருமணத்திற்கும் வலிமாவிற்கும் அவசியமானது என்ன? 

திருமணத்திற்கும் வலிமாவிற்கும் அவசியமானது என்ன? திருமணம் செய்வதற்கு பெண்ணின் மீது எந்த பொருளாதாரச் சுமையையும் இஸ்லாம் சுமத்தவில்லை. பெண்ணுக்கு மஹர் வழங்குவது, வலீமா என்ற விருந்தை வழங்குவது போன்ற கடமைகள் ஆண் மீதே சுமத்தப்பட்டுள்ளது. திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக் கொடை) எனப்படும். ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக […]

நபியின் மாமனார் திருமண விருந்து கொடுத்தார்களா?

நபியின் மாமனார் திருமண விருந்து கொடுத்தார்களா? வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் மார்க்கத்திற்கு முரணாண காரியமாகும். ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண்ணிடமிருந்து எதையும் வாங்கக் கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது. இதே போன்று திருமணத்துக்கென்று வலீமா என்ற விருந்தை ஆண் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண் வீட்டு விருந்து கூடாது என்ற தடை இந்த உத்தரவில் […]

திருமண அன்றே விருந்து வைக்கலாமா?

திருமண அன்றே விருந்து வைக்கலாமா? மணம் முடித்துக் கொண்ட அன்றோ, அல்லது அடுத்தடுத்த நாட்களிலோ எப்போது வேண்டுமானாலும் விருந்தளிக்கலாம். திருமணம் முடித்த மணமகனை வலீமா விருந்து கொடுக்குமாறு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். அவர்கள் திருமணம் முடித்த போதும் வலீமா விருந்தளித்துள்ளார்கள். எனவே ஒருவர் திருமணம் முடித்தால் அவர் விருந்தளிப்பது நபிவழியாகும். அதே சமயம், திருமணம் நடந்த அன்றே வைக்க வேண்டும் என்றோ, அல்லது ஓரிரு நாட்கள் கழித்து வைக்க வேண்டும் என்றோ நபிகள் நாயகம் […]

ஏழைகளுக்கு தனியாக விருந்து வைக்கலாமா?

ஏழைகளுக்கு தனியாக விருந்து வைக்கலாமா? கூடாது. ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படும் விருந்துகள் தான் மிக கெட்ட விருந்து என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் ஏழைகளுக்குத் தனியாக விருந்து வைக்கலாமா? நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பயன்படுத்திய வாசகம் என்ன கருத்தைக் கூறுகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும். ஏழைகள் விடப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படுவதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடுத்தது ஏழைகளுக்கு உணவு கிடைக்க வேண்டும் […]

நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தை குறையுடன் பிறக்குமா?

நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தை குறையுடன் பிறக்குமா? இல்லை. நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் குறைபாடுள்ள குழைந்தகளாகப் பிறக்கும் என்று மூடத்தனமான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு சில மருத்துவர்கள் கூறுவதாகவும் அவர்கள் வாதங்களை வைக்கின்றனர். ஆனால் பலகாரணங்களால் இது தவறாகும். நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுள்ள குழைந்தைகளாகப் பிறக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. மாறாக குறைபாடுடன் பிறக்கும் சில குழந்தையின் பெற்றோர்கள் தங்களுக்கு மத்தியில் நெருங்கிய […]

பெண்ணின் திருமண வயது என்ன?

பெண்ணின் திருமண வயது என்ன? பருவவயது அடைந்து விட்டால் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று இஸ்லாம் அனுமதித்துள்ளது. பதினெட்டு வயதில் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பல நாடுகளில் சட்டம் போடப்பட்டாலும் அதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது. சிறு வயதுப் பெண்ணுக்கு குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா? என்று கேட்டுள்ளீர்கள். குடும்ப நிர்வாகத்துக்காகத் தான் திருமணம் என்பது அடிப்படையில் தவறாகும். உடல் தேவைக்காகத் தான் திருமணம். எத்தனை வயதில் திருமணம் நடந்தாலும் அடுத்த நாளே […]

மணப்பெண் ஆண் வயது வித்தியாசம் எவ்வளவு?

பெண்ணின் திருமண வயது என்ன? திருமணத்தில் வயது வித்தியாசம் இஸ்லாத்தில் ஒரு பிரச்சனையே இல்லை. மனம் விரும்பினால் ஒருவர் தன்னை விட வயது குறைந்தவரையோ வயது அதிகமானவரையோ மணந்து கொள்ளலாம்.

சித்தி மகளை மணமுடிக்கலாமா?

சித்தி மகளை மணமுடிக்கலாமா? திருமணம் முடிக்கலாம். தாயின் சகோதரியுடைய மகளைத் திருமணம் செய்துகொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது. திருமணம் செய்துகொள்ள தடை செய்யப்பட்டவர்களை திருக்குர்ஆனில் இறைவன் பட்டியலிடுகின்றான். இறைவன் குறிப்பிட்டுக் காட்டிய நபர்களைத் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்பட்டவர்கள் என்று இறைவன் தெளிவுபடுத்துகிறான். حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمْ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنْ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمْ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمْ اللَّاتِي […]

தாலி கருகமணி அணியலாமா?

தாலி கருகமணி அணியலாமா? கூடாது. திருமணத்தின் போது தாலி அணிவதும், கருகமணி கட்டுவதும் முழுக்க முழுக்க பிற மதக் கலாச்சாரமாகும். حدثنا عثمان بن أبي شيبة حدثنا أبو النضر حدثنا عبد الرحمن بن ثابت حدثنا حسان بن عطية عن أبي منيب الجرشي عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

ஏகத்துவ கொள்கையுடைய மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் இணை கற்பிப்பவரை மணமுடிக்கலாமா?

ஏகத்துவ கொள்கையுடைய மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் இணை கற்பிப்பவரை மணமுடிக்கலாமா? கூடாது. இணை கற்பிக்கும் பெண்கள், ஆண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் என்று குர்ஆன் (2:221➚) கூறுகின்றது. இணை வைப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் தெளிவாகக் கூறி விட்டான். எனவே எந்தக் காரணம் கூறியும் அதை நியாயப்படுத்த முடியாது. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் […]

பிற மத பெண்ணை விரும்பலாமா?

பிற மத பெண்ணை விரும்பலாமா? முஸ்லிமல்லாத ஆணோ, பெண்ணோ அவர் இஸ்லாத்தை எற்றுக் கொள்ள முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க தக்க காரணம் இல்லாமல் மறுக்கலாகாது. கணவனை இழந்திருந்த அனஸ் ரலி அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் அவர்களை அபூதல்ஹா விரும்பினார். ஆனால் அவர் அப்போது முஸ்லிமாக இருக்கவில்லை. ஆனால் உம்மு ஸுலைம் அவர்கள் இஸ்லாத்தை நீர் ஏற்றுக் கொண்டால் அதையே மஹராகக் கருதி உம்மைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உம்மு ஸுலைம் […]

காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா? காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பித் தான் திருமணமே செய்ய வேண்டும். அதைத் தாண்டி காதல் என்ற பெயரில் தற்போது நடக்கும் செயல்களுக்கு அனுமதியில்லை. இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. வலிமையான ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம். காத்திருக்கும் […]

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் போனில் பேசலாமா?

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் போனில் பேசலாமா? கூடாது. ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ مَا […]

Next Page » « Previous Page