Tamil Bayan Points

வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுப்பது எப்படி?

கேள்வி-பதில்: திருமணம்

Last Updated on September 28, 2021 by

வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுப்பது எப்படி?

பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டு வருவதால் வாங்கிய அதே தொகையைக் கொடுப்பதா? இன்றைய மதிப்பின் அடிப்படையில் கொடுப்பதா? 

எந்த ஒரு கொடுக்கல் வாங்களும் எந்த அர்த்தத்தில் நடைமுறையில் உள்ளதோ அதற்கேற்பத் தான் பொருள் கொள்ள வேண்டும். ஒருவரிடம் கடன் வாங்கி விட்டு ஆண்டுகள் பல கடந்த பின் திருப்பிக் கொடுத்தால் பணத்தின் மதிப்பை நாம் பார்ப்பதில்லை. வாங்கிய தொகையைத் தான் கொடுக்க வேண்டும்.

இந்தப் பணத்துக்கு எவ்வளவு தங்கம் வாங்க முடியுமோ அந்தத் தொகை தான் திருப்பித் தர வேண்டும் என்று வெளிப்படையாக பேசி இருந்தால் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் ஊர் வழக்கப்படி தான் பொருள் கொள்ள வேண்டும்.

நீங்கள் எவ்வளவு வாங்கினீர்களோ அதைக் கொடுத்தால் போதும். உண்மையில் அந்தப் பணம் உங்கள் மாமனார் குடும்பத்துக்குச் சேர வேண்டியது. அவர் இல்லா விட்டால் மார்க்கச் சட்டப்படி அவரது சொத்து எப்படி பிரிக்கப்படுமோ அது போல் அவரவருக்குரியதைப் பிரித்துக் கொடுக்க வேண்டும். அவரது மகள் என்ற அடிப்படையில் உங்கள் மனைவிக்கு உரிய பங்கு கிடைத்தால் தந்தையின் சொத்து என்ற அடிபடையில் அவர் பெற்றுக் கொள்ளலாம்.