Author: Trichy Farook

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் – 4

முன்னுரை இஸ்லாத்தின் சிறப்புகளைக் கூறும், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தொடர் உரையில், நம்மை பங்கு பெறச் செய்த இறைவனுக்கே புகழனைத்தும் உரியது! வேதத் தூதரின் வேதியியல் விளக்கம் இரு கண்ணாடித் தொட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டிலும் சம அளவில் கலக்கப்பட்ட சுண்ணாம்பு நீரை ஊற்றுங்கள். ஒரு தொட்டியில் சைக்கிள் டயருக்குக் காற்றடிக்கும் பம்பை வைத்து காற்றை ஊதுங்கள். இன்னொரு தொட்டியில் ஸ்ட்ரா மூலம் நீங்கள் காற்றை ஊதுங்கள். என்ன நடக்கின்றது? இரண்டு பாத்திரங்களில் உள்ள […]

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் – 3

முன்னுரை இஸ்லாத்தின் சிறப்புகளைக் கூறும், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தொடர் உரையில், நம்மை பங்கு பெறச் செய்த இறைவனுக்கே புகழனைத்தும் உரியது! மூளைக் காய்ச்சலுக்கு மூல காரணம் 12.09.2000 அன்று பி.பி.சி.யில் வெளியான ஒரு செய்தி: மூளைக் காய்ச்சலுக்கு உத்தர பிரதேசத்தில் 100 பேர் இறந்தனர். 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது அரசாங்கம் அறிவிக்கும் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைத் தாண்டும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நோய் […]

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் – 2

முன்னுரை இஸ்லாத்தின் சிறப்புகளைக் கூறும், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தொடர் உரையில், நம்மை பங்கு பெறச் செய்த இறைவனுக்கே புகழனைத்தும் உரியது! பூமிக்கு உகந்தது புதைப்பதே! وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّ‌ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِؕ قَالَ لَاَقْتُلَـنَّكَ‌ؕ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ‏ ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் […]

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் – 1

முன்னுரை இஸ்லாத்தின் சிறப்புகளைக் கூறும், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தொடர் உரையில், நம்மை பங்கு பெறச் செய்த இறைவனுக்கே புகழனைத்தும் உரியது! ஸலாத்தும், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்று அறிந்திருக்கிறோம்; இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று அறிந்திருக்கிறோம். அது என்ன? இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்? என்று கேட்கலாம். […]

குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள்

முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்றைய உலகில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல வகையான தவறுகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தவறு செய்வதைத் தூண்டக் கூடிய […]

முக்கியத்துவம் வாய்ந்த குர்ஆன் வசனங்கள்.

முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஆதராப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள சில சூராக்களின் சிறப்புகளையும், வசனங்களின் சிறப்புகளையும் குறிப்பிட்டுள்ளோம். ஹதீஸ்களில் உள்ளபடி நாம் அவற்றை ஓதி வரும்போது ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக குர்ஆனில் உள்ள எல்லா வசனங்களையும் ஓதுவதற்கு நன்மை உள்ளது. ஆனால் யாஸீன், தபாரகல்லதீ போன்ற சூராக்களை […]

ஏகத்துவமும் எதிர்ப்புகளும்

முன்னுரை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கையான ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை இறைத்தூதரர்கள் செய்தார்கள். இந்த பணியை செய்த காரணத்தினால் ஏராளமான இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உட்படுத்தப்பட்டனர். நபி மூஸா (அலை) ஏகத்துவக் கொள்கையை மக்களிடம் சொன்ன இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களும் ஒருவர். அவர்கள்தான் இறைத்தூதர் என்பதற்கு பிர்அவ்னிடமும் அக்கால மக்களிடம் இறைவன் கொடுத்த அற்புதத்தை எடுத்துரைத்தார்கள். وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى‏ اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى […]

வானை விஷமாக்கும் வதந்திகள்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். விண்வெளியில் நீந்திச் செல்லும் செயற்கைக் கோள்கள் மனித வரலாற்றில், செய்தித் துறைகளில் பெரும் புரட்சியை வெடிக்கச் செய்திருக்கின்றன. தொலைக்காட்சிகளில் வெளிச்ச மிடும் வண்ணக் காட்சிகள் ஆகட்டும்; செவிகளில் செய்தி சொல்லும் செல்போன்களாகட்டும்; அதில் கண் சிமிட்டி வந்திறங்கும் குறுஞ் செய்திகள் (எஸ்.எம்.எஸ்) ஆகட்டும்; மின் […]

அறிவியல் பார்வையில் இஸ்லாமும் தூய்மையும்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்றைய உலகம் அறிவியல் முன்னேற்றத்திற்கு பஞ்சமில்லாமலும், அதே நேரத்தில் பலவிதமான நோய்களுக்கும் பஞ்சமில்லாமல் மாறிவிட்டது. வருடத்திற்கு ஒரு நோய் பிரபலமாகி கொண்டே வருகிறது. ஒரு வருடத்தில் சார்ஸ் இன்னொரு வருடத்தில் பறவைக் காய்ச்சல் இப்பொழுது பன்றிக் காய்ச்சல் என்று அச்சுறுத்திவருகிறது… அதிலும் குறிப்பாக உலக […]

பெண் சிசுக்கொலை தடுக்க என்ன வழி?

முன்னுரை நவீன உலகத்தில், கருவறையில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? என அறிந்து பெண்ணாயிருப்பின் அதைக் கருவிலேயே சமாதி கட்டும் கொடூரம் நடந்து வருவதை நாமெல்லாம் செய்தித் தாள்கள் வாயிலாக அறிந்து வருகிறோம். சட்டம் இதை வன்மையாகக் கண்டித்தாலும் இக்கொடுஞ்செயலைச் செய்யும் கொடூர மனப்பான்மையுடையவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். இக்கொடூரத்தைத் தடுக்க தொட்டில் குழந்தைத் திட்டம் என்ற திட்டத்தை தமிழக அரசு 1992 ஆம் ஆண்டு தொடங்கியது. பெண் குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள் அக்குழந்தையை வளர்க்க விரும்பவில்லையெனில் அரசுத் […]

இஸ்லாமும் மருத்துவமும்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். செல்வங்களிலே மிகப்பெரும் செல்வமாக மக்களால் கருதப்படுவது நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு. நிழலின் அருமை வெயிலில் அவதியுறுபவனுக்குத்தான் தெரியும் என்பார்கள். அதுபோல் நோயாளிகளிடம் கேட்டால்தான் நோயற்ற வாழ்வின் அருமை பெருமை புரியும். பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருந்தும் தங்களைப் பீடித்துள்ள நோய்களின் காரணத்தால் தாங்கள் விரும்பியதை உண்டு […]

பயிரிடப்பட வேண்டிய காலம்

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனித வாழ்வு, ஏற்றத் தாழ்வுகளை கொண்டது. வாழ்க்கையில் சில நேரங்களில் சிலவற்றை இழப்போம், சிலவற்றை பெறுவோம். ஆனால், ஒரே ஒரு இறைவனின் அருள் மட்டுமே இழந்தால், மீண்டும் பெற முடியாமல் போய் விடுகிறது. அது தான் காலம் என்பதை நாமெல்லாம் மிகவும் நன்றாக அறிந்து […]

இம்மையும் மறுமையும்

முன்னுரை இந்தப் பரந்த உலகில் பல்வேறுபட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் அனைவரும் நிறத்தாலும் குணத்தாலும் மொழியாலும் பல விதமாக அமைந்துள்ளனர். இதில் பெரும்பான்மையான மக்கள், நம்மைப் படைத்த ஒருவன் இருக்கின்றான் என்பதை நம்பி வாழ்கின்றனர். மதங்களும் அதன் நம்பிக்கைகளும் கடவுளை நம்பும் மனிதர்கள் பல மதங்களை பின்பற்றி வாழ்கின்றனர். ஒரு கடவுள் கொள்கை உள்ளவர்கள், முக்கடவுள் கொள்கை உள்ளவர்கள், பல கடவுகள் கொள்கை உள்ளவர்கள் என்று பலவிதமான பல மதங்களை பின்பற்றி நடக்கின்றனர். இவ்வாறு பல […]

விமர்சனங்களும் சோதனைகளே!

விமர்சனங்களும் சோதனைகளே! இறைத்தூதர்கள் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லிய போது சொல்லொணாத் துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாக்கப் பட்டனர். திருக்குர்ஆனில் அந்த இறைத்தூதர்களின் வாழ்க்கையைப் புரட்டும் போது அவர்களைப் பல்வேறு விதமான சோதனைகள் சூழ்ந்து கொண்டிருந்ததை நாம் காண முடிகின்றது. அந்தச் சோதனைகள் நபிமார்களை மட்டுமல்லாது அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்றுக் கொண்ட இறை நம்பிக்கையாளர்களையும் சூழ்ந்து கொண்டிருந்தன. அந்தச் சோதனைகளில் மிக முக்கியமானது எதிரிகள் செய்யும் விமர்சனங்களாகும். விமர்சனங்களைப் பற்றி இங்கே நாம் குறிப்பிடும் போது, விமர்சனங்கள் […]

இணை வைக்கும் இமாம்களை புறக்கணிப்போம்

முன்னுரை அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் எல்லாற்றிற்கும் வழி காட்டுவது போன்று, இணை வைப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வழி காட்டுகின்றது. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا […]

புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும்

மரத்திலிருந்து பழம் தரையில் விழுகின்றது! இது நியூட்டனின் சிந்தனைப் புயலைக் கிளப்புகின்றது! இது எப்படி இவ்வளவு வேகமாக பூமியை நோக்கி விரைகின்றது? என்ற சிந்தனை ஓட்டம் அதன் பின்னே விரைகின்றது. அதனால் விளைந்த அறிவியல் பலன் தான் புவி ஈர்ப்பு சக்தி என்ற கண்டு பிடிப்பு! சுற்றிக் கொண்டிருக்கும் புவியைச் சுற்றி ஒரு போர்வையாக புவி ஈர்ப்பு சக்தி ஒன்று சுற்றிக் கொண்டிருக்கின்றது என்ற பேருண்மை உலகத்திற்குத் தெரிய வருகின்றது. இந்த புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த […]

எறும்புகளின் அறிவாற்றல்

எறு‌ம்புக‌ளி‌ன் தலை‌ப்பகு‌தி‌யி‌ல் ஆ‌‌ன்டெனா எ‌ன்ற உறு‌ப்பு உ‌ள்ளது. இத‌ன் மூல‌ம் ஒ‌லி, சுவை, வாசனை ம‌ற்று‌ம் தொடு உண‌ர்வு ஆ‌கியவ‌ற்றை அ‌றி‌கி‌ன்றன. எறு‌ம்புக‌ள் ஒ‌ன்றை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி ஒ‌ன்றாக செ‌ல்லு‌ம் சுபாவமுடையவை. இவை பு‌ற்றுகளை‌க் க‌ட்டி வ‌சி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் உடையவை. ‌சில வகை எறு‌ம்புக‌ள் 15 அடி உயர பு‌ற்றுகளை‌க் கூட‌க் க‌ட்டு‌ம் ‌திற‌ன் வா‌ய்‌ந்தவை. எறு‌ம்புகளு‌க்கு க‌ண்க‌ள் ‌மிக‌த் து‌ல்‌லியமாக‌த் தெ‌ரியு‌ம். மேலு‌ம் உழை‌ப்ப‌தி‌ல் எறு‌ம்புகளு‌க்கு ஈடு இணை எதுவு‌ம் வராது. சொ‌ல்ல‌ப் போனா‌ல் எறு‌ம்புக‌ள் அத‌ன் […]

குளவிக்கு சொல்லிக் கொடுத்தவன் யார்?

குளவிகளின் இனப் பெருக்கம் இந்த உலகில் எத்தனையோ வித விதமான படைப்புகள் காணப்படுகின்றன. அந்தப் படைப்புகள் பல்வேறு வடிவங்களில் சிறந்த உள்ளுணர்வையும், அறிவுத் திறத்தையும் அல்லது நமக்கே புரியாத ஒரு தகுதியையும் புலப்படுத்துபவையாகத் திகழ்கின்றன. உதாரணமாக குளவிகளுக்கு இனப் பெருக்கக் காலம் வந்ததும் ஆண் குளவி ஒரு வெட்டுக்கிளியைப் பிடித்து, அதில் எந்த இடத்தில் குத்தினால் அது உணர்விழந்து விடும் என்பதைத் தெரிந்து, அந்தப் பொருத்தமான இடத்தில் ஒரு குத்து குத்தி அதை உணர்விழக்கச் செய்கின்றது. உணர்விழந்த […]

விதையில் ஒரு சாப்ட்வேர்

விதையில் ஒரு சாப்ட்வேர் அந்தப் புத்தகத்தின் அடுத்த பாடத்தில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். கருவாலி மரத்தின் கொட்டை ஒன்று நிலத்தில் விழுகின்றது. காற்றடித்து, பூமியின் ஏதோ ஒரு பள்ளத்தில் உருண்டு போய் விழுந்து கிடக்கும் அந்தக் கொட்டையைக் கனமான பழுப்பு நிறத்தையுடைய அதன் ஓடு பாதுகாக்கின்றது. வசந்த காலம் வந்ததும் அந்தக் கொட்டையின் மேல் ஓட்டை உடைத்துக் கொண்டு முளை விட ஆரம்பிக்கின்றது. ஒரு முட்டைக்குள் எப்படி அந்த முட்டையின் மரபு வழிக் காரணிகள் பல அடங்கியிருக்கின்றனவோ அதே […]

தலையை வெட்டினாலும் திரும்ப வளருவேன்!

உறுப்புகளை வளர்க்கும் உயிரினங்கள் கடல் நண்டு போன்ற எத்தனையோ பிராணிகள், அவற்றின் கால்கள் அல்லது கொடுக்குகளில் ஒன்றை இழந்து விட்டால் தனது உடலில் ஓர் உறுப்பு குறைந்து போய் விட்டதைத் தெரிந்து கொண்டு உடலிலுள்ள உயிரணுக்களையும், மரபு வழிக் காரணிகளையும் தூண்டுகின்றன. இழந்த உறுப்புக்குப் பதிலாக வேறொரு காலையோ அல்லது கொடுக்கையோ வளரச் செய்து இழப்பை ஈடு செய்து கொள்கின்றன. எப்போது அந்த உயிரணுக்கள் சேர்ந்து காலாக, கொடுக்காக மாறுகின்றனவோ அப்போது அவை தமது செயல்பாட்டை, அதாவது […]

சேட்டிலைட் இல்லாத செய்திப் பரிமாற்றம்

வண்ணத்துப் பூச்சி பால்கனி வழியாக நம் வீட்டு மாடத்தில் ஒரு பெண் வண்ணத்துப் பூச்சியைக் காற்று கொண்டு வந்து சேர்த்து விட்டால், கண்டு கொள்ள முடியாத ஒரு சமிக்ஞையை அது உடனே அனுப்புகின்றது. அதன் துணையான ஆண் வண்ணத்துப் பூச்சி எங்கோ தொலை தூரத்தில் பறந்து கொண்டிருந்த போதும் அதன் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு உடனடியாக அதற்கு மறுமொழியும் தந்து விடுகின்றது. அந்தக் காதலர் இருவரையும் தடுமாறச் செய்வதற்காக நமது முயற்சியால் புதுப்புது வாசனைகளை உண்டாக்கினாலும் அந்த […]

660V உயர் மின் அழுத்த மின்சார மீன்

எலக்டிரிக் ஈல் மிக உயர்ந்த மின் ஆற்றலை தன்னகத்தே கொண்டு விளங்கும் எலக்டிரிக் ஈல் (Electric Eel) என்று அழைக்கப்பபடும் மின்சார மீன், தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய இந்த வியப்பளிக்கும் மீன், தன் எதிரியின் உடலில் பட்ட மாத்திரத்தில் உயிரிழக்கச் செய்யும் அபரிதமான மின் ஆற்றலின் உற்பத்திக் கேந்திரமாக விளங்கிவருகின்றது. நம் நாட்டிலே மின் கம்பங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் மின் சாதனங்களின் அருகில், அபாயம் 440V மின்சாரம் என்று எழுதப்பட்டு […]

தலை சுற்ற வைக்கும் தேனீக்களின் வாழ்க்கை!

1 லட்சம் கிமீ பயணிக்க வல்ல, தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. வேலை ரீதியாக, தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் […]

பார்வைப் புலனும் பகுத்தறிவும்

சின்னஞ்சிறிய கண்கள் சில நுண்ணிய புழுப் பூச்சியினங்களுக்கு, மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே காணத்தக்க சின்னஞ்சிறிய கண்கள் இருக்கின்றன. அந்தக் கண்களின் ஆற்றலையும் வரம்பையும் நம்மால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியாது. பருந்து, கழுகு போன்ற பறவைகளுக்கு, தொலைநோக்கி (டெலஸ்கோப்) போன்று ஒரு பொருளை அண்மையிலும், உருப் பெருக்கியும் காட்டும் கண்கள் இருக்கின்றன. குதிரையின் திறன் மிக வயதான கிழட்டுக் குதிரையை இருட்டு நேரத்தில் எங்காவது கொண்டு போய் விட்டு விட்டு நாம் மட்டும் திரும்பி வந்து விடுவோமானால், […]

நமது கை, கால்களின் அதிசயம்

கைகள் விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும் போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன. கால்கள் நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன குளிரெடுக்கும்போது நம் உடல் […]

மனித மூளையின் ஆற்றல்

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு இலட்சம் லாரிகள் நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன. கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. […]

நாயின் அதிசய மோப்ப சக்தி

மனிதர்களாகிய நாம் சிறப்பாகச் செயல்படுவதற்கு பகுத்தறிவோடு, நமது ஐம்புலனறிவும் ஒரு முக்கியக் காரணம். ஐம்புலனறிவு எல்லா உயிகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பறவைகளுக்கு பார்வை சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூட பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும். வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வை சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் 22 கோடி வரை உள்ளன. மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் சில இலட்சங்களே உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு வாசனைகளை […]

35 ஆயிரம் கிமீ வழிதவறாத பறவைகள்

ஆர்க்டிக் பிரதேசத்தில் டெர்ன் என்றழைக்கப்படும் நீள மூக்குடைய கடற்பறவை ஒன்று உள்ளது. இந்தப் பறவை, கோடை காலத்தில் ஆர்க்டிக் பிரதேசத்திலும், குளிர் காலத்தில் அண்டார்டிகா பகுதிக்கும் செல்கின்றது. இதற்காக இந்தப் பறவை பறந்து செல்லும் தூரம் 22,000 மைல்கள் (35000 km) ஆகும். (முத்தாரம் 01.07.1984, பக்கம் 7) பறவைகளுக்கு, அவை தமது இருப்பிடங்களை விட்டு எவ்வளவு தூரத்துக்குப் பறந்து சென்றாலும் மீண்டும் அவற்றின் இருப்பிடங்களுக்கே திரும்பி வந்து விடுகின்ற இயல்புணர்ச்சி உண்டு. நம் வீட்டு வாசலில் […]

வெற்றியாளர்கள் யார் – 8

வெற்றியாளர்களின் இன்னும் பல பண்புகளை இந்த வார உரையில் காண்போம். இறைவனை நினைப்பவர்கள் வெற்றியாளர்கள் என்று இறைவன் கூறுவதை பார்த்து வருகிறோம்.. அனைத்து சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூறுவோம் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரையிலும் ஒருவன் வீட்டிலிருந்து வெளியேறியது முதல் கழிவறைக்குள் நுழையும் வரையிலும் அவனுக்கு ஏற்படக்கூடிய இன்ப துன்பங்கள் என்று அனைத்து விஷயத்திலும் இஸ்லாம் அல்லாஹ்வை நினைவு கூற கற்றுக் கொடுக்கின்றது. فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ […]

வெற்றியாளர்கள் யார் – 7

வெற்றியாளர்களின் இன்னும் பல பண்புகளை இந்த வார உரையில் காண்போம். இறைவனை நினைப்பவர்கள் வெற்றியாளர்கள் என்று இறைவன் கூறுவதை பார்த்து வருகிறோம்.. فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ ”தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.” (அல்குர்ஆன்: 62:10)➚ يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِيْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ […]

வெற்றியாளர்கள் யார் – 6

வெற்றியாளர்களின் இன்னும் பல பண்புகளை இந்த வார உரையில் காண்போம். இறைவனை நினைவுகூறுபவர்கள் இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஒருவர் மற்றவரை நினைக்கின்றனர். எதையாவது நினைக்காத உள்ளங்கள் இல்லை எனலாம். தன்னை நேசிப்பவர்களையோ தனக்கு விருப்பத்திற்குரியவர்களையோ குடும்பத்தினரையோ தொழிலில் முன்னேற்றம் அடைவதை பற்றியோ எதிர்காலத்தை பற்றியோ தன்னை விட்டு கடந்து போன தனக்கு வர விருக்கின்ற இன்ப துன்பங்களை பற்றியோ அவர்களுடைய நினைவலைகள் நீண்டு கொண்டே செல்கின்றது. இச் சிந்தனை போக்குகள் அவனுடைய நிம்மதி தூக்கம் உணவு போன்ற […]

வெற்றியாளர்கள் யார் – 5

வெற்றியாளர்களின் இன்னும் பல பண்புகளை இந்த வார உரையில் காண்போம். நல்லறங்கள் செய்வோர் முன்னரே கூறியபடி, நல்லறங்கள் இல்லாமல் மறுமை வெற்றி இல்லை என்பதை திருக்குர்ஆன் உறுதியாக அறிவுறுத்துகிறது. فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ‏ திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர் ஆவர். (அல்குர்ஆன்: 28:67)➚ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَ اعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوْا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ நம்பிக்கை […]

வெற்றியாளர்கள் யார் – 4

வெற்றியாளர்களின் இன்னும் பல பண்புகளை இந்த வார உரையில் காண்போம். நல்லறங்கள் செய்வோர் முன்னரே கூறியபடி, நல்லறங்கள் இல்லாமல் மறுமை வெற்றி இல்லை என்பதை திருக்குர்ஆன் உறுதியாக அறிவுறுத்துகிறது. فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ‏ திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர் ஆவர். (அல்குர்ஆன்: 28:67)➚ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَ اعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوْا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۚ‏ […]

வெற்றியாளர்கள் யார் – 3

வெற்றியாளர்களின் இன்னும் பல பண்புகளை இந்த வார உரையில் காண்போம். நல்லறங்கள் செய்வோர் முன்னரே கூறியபடி, நல்லறங்கள் இல்லாமல் மறுமை வெற்றி இல்லை என்பதை திருக்குர்ஆன் உறுதியாக அறிவுறுத்துகிறது. فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ‏ திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர் ஆவர். (அல்குர்ஆன்: 28:67)➚ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَ اعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوْا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ நம்பிக்கை […]

வெற்றியாளர்கள் யார் – 2

வெற்றியாளர்களின் இன்னும் பல பண்புகளை இந்த வார உரையில் காண்போம். நல்லறங்கள் செய்பவர்கள் இஸ்லாம் மனிதர்களுக்கு நல்லறங்களை செய்யுமாறு கட்டளையிடுகின்றது. ஆனால் இதை பெரும்பாலும் யாரும் கடைபிடிப்பதில்லை. நல்லறங்கள் இல்லாமல் மறுமை வெற்றி இல்லை என்பதை திருக்குர்ஆன் உறுதியாக அறிவுறுத்துகிறது. فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ‏ திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர் ஆவர். (அல்குர்ஆன்: 28:67)➚ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا […]

வெற்றியாளர்கள் யார் – 1

முன்னுரை திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் (மறுமையில்) வெற்றியாளர்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளதை இந்த தொடர் உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! பிறர் நலம் நாடுவோர் நீ மட்டும் சொகுசாக வாழ்கிறாயா? என்று கேள்வி கேட்டுவிட்டு நாங்கள் ஜிகாத் செய்யப் போறோம் என்று வெற்று வீரவசனம் பேசியவர்கள் எங்கும் சென்று ஜிஹாதும் செய்யவில்லை. பிறகு எதற்கு இந்த வெற்று வீராப்பு வசனம் என்றால் ஜிகாதைப் பற்றி உசுப்பேற்றி விட்டால் இளைஞர்களை நம்பக்கம் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இவ்வாறு நடந்து […]

தூய்மையின் பிறப்பிடம் இஸ்லாம்

முன்னுரை இஸ்லாம் மார்க்கம் இறைவனுக்குச் செய்யும் சட்டங்களை மட்டும் சொல்லிக்கொண்டிராமல் மனிதனின் இவ்வுலுக வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்களையும் தெளிவாக கூறியுள்ளது. மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான தூய்மையைப் பற்றி பல இடங்களில் வலியுறுத்தியுள்ளது. ஈமானின் பாதி தூய்மை இஸ்லாத்தை ஏற்றவரிடம் இருக்க வேண்டிய இறைநம்பிக்கையின் ஒரு அம்சமாக தூய்மையை இஸ்லாம் சொல்லியிருப்பது இஸ்லாம் தூய்மைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளது என்பதற்கு சான்றாகும். ஈமானின் பாதி, தூய்மை என்று நபிகளார் கூறியுள்ளது முஸ்லிம்களை தூய்மையின் பிறப்பிடமாக வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளது. […]

வேண்டாம் தீனத்துல் கபால்!

மதுவை ஒழிப்போம்! இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் நோய்களில் மதுவும் ஒன்று. மது அருந்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது என்பதை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக இளைஞர்களிடம் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. விழாக்காலங்களிலும் விஷேச நிகழ்ச்சிகளிலும் மது முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்றது. தற்போது முடிந்த தீபாவளி வியாபரம் நம்மை அதிர வைக்கிறது. 220 கோடி ரூபாய்க்கு இந்த வருட தீபாவளியில் மது விற்பனையாகியுள்ளது. போன வருடம் 100 கோடிக்கு விற்ற மதுக்கள், இந்த வருடம் 100 […]

கற்பொழுக்கம் பெண்ணுக்கு மட்டுமா?

முன்னுரை நவீன உலகில் இன்று விபச்சாரங்கள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் சில முஸ்லிம்களும் ஈடுபடுகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாகும். ஆணுக்கும் வேண்டும் ஒழுக்கம் விபச்சாரத்தில் ஆண்களும் பெண்களும் ஈடுபடுகிறார்கள். ஆனால் பெண்கள் மட்டும் தான் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்; ஒழுக்கம் பேண வேண்டும்; ஆடைகளில் ஆபாசம் இருக்கக் கூடாது என்று கண்டிக்கப்படுகிறார்கள். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று இந்தச் சமூகம் எண்ணுகிறது. பாதையில் அரைகுறை ஆடையுடன் நடமாடும் பெண்களைப் பார்த்து […]

தரமான கல்வி ஓர் இஸ்லாமிய பார்வை

முன்னுரை இஸ்லாத்தின் பார்வையில், உயர்வு தாழ்வு இல்லை. எனினும், கல்வி கற்றோர் உயர்ந்தோர் என குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‌ؕ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ (நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக்குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.” (அல்குர்ஆன்: 39:9) يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ […]

உண்மையாகும் நபிமொழி

அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் […]

மவ்லிதும் ஷஃபாஅத்தும்

முன்னுரை மவ்லிது ஒரு வணக்கம்! அதை ஓதினால் ஷஃபாஅத் (நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இந்த மவ்லிது ஓதுவதற்காக காசு பணத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்தின் முக்கியக் கடமையான ஜகாத்தை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய பொருளாதாரம் என்ற நீர்வளத்தை மவ்லிது என்ற வயல்களை நோக்கிப் பாய்ச்சுகின்றனர். இதற்கென்று தனி மரியாதைகளையும் மதிப்புகளையும் வழங்கி வருகின்றனர். இத்தகைய மவ்லிது என்பது ஓர் இபாதத் கிடையாது. கடைந்தெடுக்கப்பட்ட பித்அத் ஆகும். இன்று […]

ரபீயுல் அவ்வல் மாதத்தின் சிறப்பு பஜனைகள்!

பஜனை மவ்லிதுகள் பகிரப்படும் நேர்ச்சைகள் மார்கழிப் பனி மச்சைத் துளைக்கும்; தைப் பனி தரையைத் துளைக்கும் என்பார்கள். மார்கழி, தை மாதங்களின் பனி மச்சைத் துளைக்கிறதோ இல்லையோ காதைத் துளைத்து விடுகின்றது. காரணம் இம்மாதங்களில் சந்திக்குச் சந்தி, சன்னதிக்குச் சன்னதிகளில் கட்டப்பட்டிருக்கும் கூம்பு வடிவக் குழாய்கள் பல்வேறு கடவுள்களின் பெயரால் கொட்டுகின்ற பஜனைப் பாடல்கள் நம்முடைய செவிப்பறைகளைக் கிழித்து விடுகின்றன. இதய நோயாளிகளை இம்சைப்படுத்தி விடுகின்றன. இவ்வாறு செய்வதற்குக் காரணம், படுத்துக் கிடக்கும் கடவுள்களை இந்தப் பாடல்கள் […]

ஸலவாத்துன்னாரிய்யா நரகத்து ஸலவாத்து

முன்னுரை ஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்விதச் சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள் தான். இதனை 4444 […]

சாலை ஆக்கிரமிப்பும் ஷரீஅத் ஆக்கிரமிப்பும்

முன்னுரை போக்குவரத்து சாலைகளிலும், பொது இடங்களிலும், அரசுக்குச் சொந்தமான இடங்களிலும் தனியார்களால் நடத்தப்பட்டிருக்கும் ஆக்கிரப்புகளைத் தயவு தாட்சண்யமின்றி அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை சமீபத்தில் ஆணை பிறப்பித்ததை யடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். வானளாவிய வணிகக் கூடங்களாக இருந்தாலும், வழிபாட்டுத் தலங்களாக இருந்தாலும் அவை ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்தால் இராட்சதக் கருவிகள் மூலம் உடைக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பிறகு தான் அந்த இடங்களின் உண்மையான தோற்றம் […]

கப்ரை வணங்கும் பரேலவி மதத்தினர் (தர்ஹா கூட்டம்)

முன்னுரை وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏ ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன்: 51:56) அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனிதர்களாகிய நம்மைப் படைத்திருக்கிறான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம். உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு மத்தியில் ஷைத்தானிய அடிச்சுவடுகளைச் சிறிதும் பிசகாமல் பின்பற்றுகின்ற பரேலவி மதத்தினரால் சமாதி வழிபாடு, தாயத்து, தகடுகள் போன்ற எண்ணற்ற இணை கற்பிக்கின்ற […]

பொதி சுமக்கும் கழுதைகள்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மறுமையில் நமது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் பல விஷயங்களில் திருமறை குர்ஆனும் ஒன்று. திருமறைக் குர்ஆன் மறுமையில் அதனை ஓதியவர்களுக்காக சாட்சி சொல்லும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருமறை குர்ஆன் என்றும், நபியவர்கள் கூறியுள்ளார்கள். அத்தகைய திருமறைக்குர்ஆனுடைய சட்டங்களை […]

பயணிகளின் கவனத்திற்கு!

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம் ஒரு நிறைவான, முழுமையான மார்க்கம். இது ஏதோ பூமிக்கு கீழே உள்ளதைப்பற்றியும், வானத்திற்கு மேலே உள்ளதைப்பற்றியும் மட்டுமே பேசக் கூடிய மார்க்கம் என்று இஸ்லாமியர்களில் பலர் தவறாக நினைக்கின்றார்கள். மாறாக நமது வாழ்க்கை முறையைப்பற்றி வேறெந்த மார்க்கமோ, மதமோ, சொல்லாத அளவிற்கு முழுமையான […]

வியாழக்கிழமையில் தான் பயணம் செய்யவேண்டுமா?

வியாழக்கிழமை பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு செய்தி தப்ரானியில் இடம் பெற்றுள்ளது. ”என்னுடைய சமுதாயம் அருள்வளம் வழங்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதுதான் வியாழக்கிழமை. அதில் பயணம் செய்யுங்கள்“ நூல் – தப்ரானி இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை.

செவியேற்போம்! கட்டுப்படுவோம்!

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். காலத்தால் முரண்படவில்லை. கருத்து மோதல் இல்லை. கற்பனைக் கலவை இல்லை. பொய்யின் சாயல் இல்லை. ஆபாசத்தின் அடையாளம் இல்லை. அறிவியலுக்கு அப்பாற்படவில்லை. மிகையான வர்ணனைகள் இல்லை. இதுமட்டுமின்றி இறைவேதமாக இருப்பதற்கு அவசியமான அனைத்து தகுதிகளையும் பொதிந்துள்ள வேதம், திருக்குர்ஆன் மட்டுமே. மிக உயர்ந்த தரம், இனிய […]

Next Page » « Previous Page