Tamil Bayan Points

வெற்றியாளர்கள் யார் – 8

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on January 21, 2017 by Trichy Farook

வெற்றியாளர்களின் இன்னும் பல பண்புகளை இந்த வார உரையில் காண்போம்.

 

இறைவனை நினைப்பவர்கள் வெற்றியாளர்கள் என்று இறைவன் கூறுவதை பார்த்து வருகிறோம்..

அனைத்து சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூறுவோம்

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரையிலும் ஒருவன் வீட்டிலிருந்து வெளியேறியது முதல் கழிவறைக்குள் நுழையும் வரையிலும் அவனுக்கு ஏற்படக்கூடிய இன்ப துன்பங்கள் என்று அனைத்து விஷயத்திலும் இஸ்லாம் அல்லாஹ்வை நினைவு கூற கற்றுக் கொடுக்கின்றது.

فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

”தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.”

(அல்குர்ஆன் 62 :10)

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِيْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏

நம்பிக்கை கொண்டோரே! (களத்தில்) ஓர் அணியைச் சந்தித்தால் உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன் 8 : 45)

காலையிலும் மாலையிலும் :

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை நேரத்தை அடையும்போது, “அம்சைனா வ அம்சல் முல்க்கு லில்லாஹ்; வல்ஹம்து லில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு” என்று கூறுவார்கள்.

(பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மாலைப் பொழுதின் ஆட்சி அல்லாஹ் வுக்கே உரியது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை.)

லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம! அஸ்அலுக்க கைர ஹாதி ஹில் லைலா. வ அஊது பிக்க மின் ஷர்ரி ஹாதிஹில் லைலா. வ ஷர்ரி மா பஅதஹா. அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் கசலி, வ சூயில் கிபர். அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் அதாபின் ஃபிந்நாரி, வ அதாபின் ஃபில்கப்ர்.

(பொருள்: ஆட்சி அவனுக்கே உரியது. புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். இறைவா! உன்னிடம் நான் இந்த இரவின் நன்மையை வேண்டுகிறேன். மேலும், உன்னிடம் நான் இந்த இரவின் தீங்கிலிருந்தும் அதற்குப் பின்னுள்ள தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! சோம்பலிலிருந்தும் முதுமையின் கேட்டிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! நரக நெருப்பிலுள்ள வேதனையிலிருந்தும் மண்ணறையிலுள்ள வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)

நூல் : முஸ்லிம் ; 5267

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிலி) அவர்கள் கூறினார்கள் :

நபி (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடையும்போது “அம்சைனா வ அம்சல் முல்க்கு லில்லாஹ். வல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு” என்று கூறுவார்கள்.

(பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மாலைப் பொழுதின் ஆட்சி அல்லாஹ் வுக்கே உரியது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை.)

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹசன் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள், “லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” என்றும் இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன் என்று கூறுகிறார்கள்.

(பொருள்: அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்.)

மேலும், நபி (ஸல்) அவர்கள், “ரப்பி! அஸ்அலுக்க கைர மா ஃபீஹாதிஹில் லைலத்தி வ கைர மா பஅதஹா. வ அஊது பிக்க மின் ஷர்ரி மா ஃபீஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரி மா பஅதஹா. ரப்பி! அஊது பிக்க மினல் கசலி, வ சூயில் கிபர். ரப்பி! அஊது பிக்க மின் அதாபின் ஃபிந்நாரி, வ அதாபின் ஃபில்கப்ர்” என்றும் கூறுவார்கள்.

(பொருள்: என் இறைவா! இந்த இரவிலுள்ள நன்மையையும் அதற்குப் பின்னுள்ள நன்மையையும் உன்னிடம் நான் வேண்டுகி றேன். இந்த இரவிலுள்ள தீங்கிலிருந்தும் அதற்குப் பின்னுள்ள தீங்கிலிருந்தும் உன்னி டம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். என் இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும் முதுமையின் கேட்டிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். என் இறைவா! நரக நெருப்பிலுள்ள வேதனையிலிருந்தும் மண்ணறையி லுள்ள வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)

இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடையும்போது “அஸ்பஹ்னா. வ அஸ்பஹல் முல்க்கு லிலில்லாஹ்” (நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். காலைப் பொழுதின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது.) என்று கூறி (மற்றதையும் ஓதி)னார்கள்.

முஸ்லிம் : 5268

கழிவறைக்குச் செல்லும் போது :

அனஸ் பின் மா-க் (ர-) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி” என்று கூறுவார்கள்.

பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்கüன் தீங்கி-ருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். புகாரி : 6322

சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் :

அபூஉமாமா (ரலிலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமது உணவு விரிப்பை எடுக்கும்போது “அல்ஹம்து -ல்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” என்று பிரார்த்திப்பார்கள். பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.

புகாரி : 5458

உணவளித்தவருக்காக :

அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலிலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தை (புஸ்ர் பின் அபீபுஸ்ர்-ரலிலி) அவர்களிடம் (விருந்தாளியாகத்) தங்கினார்கள். அப்போது அவர்களுக்கு அருகே உணவும் (பேரீச்சம் பழம், பாலாடை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட “வத்பா’ எனும்) ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள்.

பிறகு பேரீச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவற்றின் கொட்டைகளை (பாத்திரத்தினுள்ளே போடாமல்) தம்மிரு விரல்களுக்கிடையே வைத்திருந்(துவிட்டு பிறகு வீசியெறிந்)தார்கள்.

பிறகு ஒரு பானம் கொண்டுவரப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதையும் அருந்தினார்கள். பிறகு மீதியிருந்ததைத் தமக்கு வலப் பக்கத்திலிருந்தவருக்குக் கொடுத்தார்கள். பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படத் தயாரானபோது) என் தந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, “எங்களுக்காகப் பிரார்த் தியுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!” (அல்லாஹும்ம, பாரிக் லஹும் ஃபீமா ரஸக்த்தஹும்,, வஃக்ஃபிர் லஹும், வர்ஹம்ஹும்) எனப் பிரார்த்தித்தார்கள்.

முஸ்லிம் : 4149

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெüயே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) உன் கதவை மூடிவிடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உனது விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உனது பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலா விட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்.

ஜாபிர் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்:புகாரி : 3280

ஷைத்தானின் அனைத்து தாக்கங்களின் போதும்

கோபம் ஏற்படும் போது :

சுலைமான் பின் சுரத் (ர-) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்கüல் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவருடைய தொண்டை நரம்பு புடைத்துக் கொண்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், “எனக்கு ஒரு (பிரார்த் தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும், “ஷைத்தானிட மிருந்து அல்லாஹ்விடம் நான் பாது காப்புக் கோருகிறேன்’ என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், “நபி (ஸல்) அவர்கள், “ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு’ என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள் அதற்கு அவர், “எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார்.

புகாரி : 3282

தீய எண்ணங்கள் மனக்குழப்பம் ஏற்படும் போது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கüல் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, “இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், “உன் இறைவனைப் படைத் தவர் யார்?” என்று கேட்கின்றான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையி-ருந்து) விலகிக்கொள் ளட்டும்.

இதை அபூஹுரைரா (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி :3276

 

கெட்ட கனவு ஏற்படும் போது :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, எவரேனும் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது.

அறிவிப்பவர் : அபூகத்தத்தா (ர-),நூல் : புகாரி (6995)

 

வெளியூரில் துன்பம் ஏற்படாதிருக்க

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கிவிட்டுப் பின்னர் “அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்’ என்று கூறிப் பிரார்த்தித்தால், அந்த இடத்திலிலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும்வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது.

(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)

அறிவிப்பவர் : கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுலமிய்யா (ரலிலி),நூல் :முஸ்லிம் : 5247

 

இன்னும் ஏராளமான பண்புகளை வெற்றியாளர்களின் பண்புகளாக இஸ்லாத்தை சொல்லித் தருகிறது. வெற்றியாளர்களின் மற்ற பண்புகளை அடுத்தடுத்த உரைகளில் காண்போம், இன்ஷா அல்லாஹ்!