Tamil Bayan Points

வெற்றியாளர்கள் யார் – 1

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on January 21, 2017 by Trichy Farook

முன்னுரை

திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் (மறுமையில்) வெற்றியாளர்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளதை இந்த தொடர் உரையில் வரிசையாக காண இருக்கிறோம்!

பிறர் நலம் நாடுவோர்

நீ மட்டும் சொகுசாக வாழ்கிறாயா? என்று கேள்வி கேட்டுவிட்டு நாங்கள் ஜிகாத் செய்யப் போறோம் என்று வெற்று வீரவசனம் பேசியவர்கள் எங்கும் சென்று ஜிஹாதும் செய்யவில்லை.

பிறகு எதற்கு இந்த வெற்று வீராப்பு வசனம் என்றால் ஜிகாதைப் பற்றி உசுப்பேற்றி விட்டால் இளைஞர்களை நம்பக்கம் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். ஜிகாத் செய்வதற்குரிய விதிமுறைகளே தெரியாமல் ஜிகாத் என்றார்கள். ஜனநாயம் என்றால் என்ன வென்றே தெரியாமல் ஜனநாயகம் μர்க் என்றவர்கள், அல்லாஹ்விற்கே ஆட்சி அதிகாரம் அனைத்தும் மனிதர்களுக்கு இல்லை,ஆகையால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ பாடுபடுவோம் என்றெல்லாம் ஆதங்கப்பட்டவர்கள், வீரவசனம் பேசியவர்கள். இன்று டயலாக்கை அப்படியே தலைகீழாக மாற்றிக் கொண்ட மர்மமென்ன? மக்களுக்கே அதிகாரம் என்று இறைவனுக்கு இணைவைக்கவும் துணிந்த வெற்றுத் துணிச்சனால் என்ன பயன்? ஆனால் ஸஹாபாக்கள் எங்காவது சென்று வீராப்பு பேசி வசூல் செய்து விட்டு ஏப்பம் விட்டார்களா? இல்லையே. மாறாக சிறுவர்களாக இருந்த ஸஹாபாக்கள் பென்னம் பெரிய இஸ்லாமிய எதிரையை வேறோடு சாய்த்த செய்தியை பத்ருக்களம் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. இனி வருங்காலத்திலாவது எந்தத் தலைவனுக்குப் பின்னாலும் தனிமனித வழிபாடில்லாமல் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து, குர்ஆன் மற்றும் நபிவழிப்படி ஒழுங்காக இஸ்லாத்தை விளங்கி செயல்படுவார்களா? நீ மட்டும் சொகுசாக வாழ்கிறாயா? என்று கேள்வி கேட்டுவிட்டு நாங்கள் ஜிகாத் செய்யப் போறோம் என்று வெற்று வீரவசனம் பேசியவர்கள் எங்கும் சென்று ஜிஹாதும் செய்யவில்லை.

 

وَمَاۤ اٰتَيْتُمْ مِّنْ رِّبًا لِّيَرْبُوَا۟ فِىْۤ اَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُوْا عِنْدَ اللّٰهِ‌ۚ وَمَاۤ اٰتَيْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ‏

மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்கு கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.

அல்குர்ஆன் 30:39

அல்லாஹ்வின் திருப்பதியை நாடுவோர்

பணம் கையில் அதிகமாக இருந்தால் அதனை தேவையில்லாத முறையில் செலவழிக்கின்றவர்களை பார்க்கின்றோம். எம்முறையில் பயன்படுத்தினால் இறைவன் திருப்தியை பெறமுடியும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

 

فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَ الْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ‌ؕ ذٰلِكَ خَيْرٌ لِّلَّذِيْنَ يُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது.

அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 30:38

 

وَعَدَ اللّٰهُ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَمَسٰكِنَ طَيِّبَةً فِىْ جَنّٰتِ عَدْنٍ‌ ؕ وَرِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ‌ ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ

அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.

அல்குர்ஆன் 9:72

 

தேவையுள்ள நிலையில் உதவிசெய்வோர்

செல்வந்தனாக இருப்பவன் தன் பணத்தை மற்றவர்களுக்கு செலவழிப்பது பெரிய விஷயமல்ல, ஏழையாக இருந்து தனக்கே தேவைகளை வைத்துக் கொண்டு பிறருக்காக செலவழிப்பதே பெரிய விஷயமாகும். தன்னிறைவு பெற்ற நிலையில் (செல்வந்தவர்களாக இருக்கும் நிலையில்) தன்னை ஏழை என்று நினைப்பவர்கள் ஏராளம். இதனாலே மற்றவர்களுக்கு கொடுக்கும் எண்ணம் குறைந்து விடுகின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?” எனக் கேட்டார். “நீர்,ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவரா கவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத் வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!”” என நபி (ஸல்) அவர்கள்

கூறினார்கள். நூல் : புகாரி 1419

கொடுத்தால் குறைந்து விடுமா?

நாம் மற்றவர்களுக்கு செலவழித்தால் நம்மிடத்தில இருக்கும் பணம் குறைந்து விடும் என்ற கஞ்சத்தனத்தை ஷைத்தான் நமக்கு ஏவுகின்றான். இது பெண்களிடம் பெரிதும் காணப்படுகின்றது. தம் கணவர் அவரின் பெற்றோர் களுக்கு, சகோதர, சகோதரிகளுக்கு கொடுப்பதை கூட அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஷைத்தான் எந்தெந்த வழிகளிலெல்லாம் வருவானே அந்த அனைத்து வாசல்களையும் நாம் அடைக்க வேண்டும். இறைவனோ மற்றவர்களுக்காக நீ செலவழித்தால் உனக்கு நான் தருகிறான் என்று கூறுகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ், “ஆதமின் மகனே (மனிதா)! நீ (பிறருக்கு) ஈந்திடு. உனக்கு நான் ஈவேன்” என்று சொ ன்னான்.மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பியுள்ளது; இரவிலும் பகலிலும் அது வாரி வழங்குகிறது. அதை எதுவும் குறைத்துவிடாது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 1815

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 5447

நீ இப்போது கொடு பிறகு உனக்கு நான் தருகிறேன் என்று கூறக்கூடியவர்களை நம்பும் மனிதன் அனைத்து செல்வங்களையும் தன் கையில் வைத்து வானங் களையும் பூமியையும் படைத்திருந்து மக்களுக்கு வாரி வழங்குகின்ற இறைவன் நமக்கு தருவான் நாம் பிறருக்கு கொடுப்போம் இறைவனின் வாக்கு பொய் யாகாது என்று நினைப்பதில்லை. கொடுத்தால் குறைந்து விடும் என்று நினைத்து விட்டால் ஷைத்தானின் வலையில் விழுந்து நஷ்டவாளிகளாக ஆகிவிடுவோம்.

கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?

அதிகமான தீமைகளுக்கு காரணமாக இந்தக் கஞ்சத்தனம் இருக்கின்ற காரணத்தினால் தான் ஒவ்வொரு நாளும் அதிகமாக கஞ்சத்தனத்தை விட்டும் நாம் இறைவனிடம் பாதுகாப்பு தேடவேண்டும்.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எந்த வார்த்தைகளால் பாதுகாப்புக் கோரிவந்தார்களோ அவற்றைக் கூறி நீங்களும் பாதுகாப்புக் கோருங்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மின் அன் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அதாபில் கப்ற்.

பொருள்: இறைவா! கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். கஞ்சத்தனத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நான் தள்ளாத வயதுக்குத் தள்ளப்படுவதிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும்,இம்மையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.

நூல் : புகாரி 6374

நாமும் கஞ்த்தனத்திலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு தேடி வெற்றியாளர்களாக ஆகுவோம்.

இன்னும் ஏராளமான பண்புகளை வெற்றியாளர்களின் பண்புகளாக இஸ்லாத்தை சொல்லித் தருகிறது. வெற்றியாளர்களின் மற்ற பண்புகளை அடுத்தடுத்த உரைகளில் காண்போம், இன்ஷா அல்லாஹ்!

எம்.என்.ஜீனத் நிஸா