திருடிய மக்ஸூமிய்யப் பெண்ணும் நபியின் நீதியும்
ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரின் கையையும் துண்டித்திருப்பேன்
أَنَّ قُرَيْشًا أَهَمَّهُمْ شَأْنُ المَرْأَةِ المَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ، فَقَالُوا: وَمَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالُوا: وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ، حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمَهُ أُسَامَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ، ثُمَّ قَامَ فَاخْتَطَبَ، ثُمَّ قَالَ: إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الحَدَّ، وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا
மக்கா வெற்றியின்போது மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர்.
“அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். அவர்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?” என்று கூறினர்.
அவ்வாறே உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அவள் விஷயமாகப் பேசினார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா நீ பரிந்துரை செய்கிறாய்?” என்று கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள்.
அந்த உரையில், “உங்களுக்கு முன்னிருந்தவர்கள் அழிக்கப்பட்டதெல்லாம், அவர்களில் உயர்குலத்தவன் திருடிவிட்டால் அவனைத் தண்டிக்காமல் விட்டுவிட்டு, பலவீனமானவன் திருடிவிட்டால் அவனுக்குத் தண்டனை அளித்து வந்தார்கள் என்பதால்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் – (புகாரி: 3475) ➚
நீதி என்பது வசதி பார்த்து வளையக் கூடியது அல்ல. ஒரு சமூகம் அழிவதற்கான காரணத்தையே நபி (ஸல்) அவர்கள் இங்கே சுட்டிக் காட்டினார்கள் — பெரியவனுக்கு ஒரு நீதி, சிறியவனுக்கு வேறு நீதி.