Tamil Bayan Points

வானவர்களை – மலக்குகளை நம்புதல்

நூல்கள்: திருக்குர்ஆன் பொருள் அட்டவணை

Last Updated on December 8, 2019 by

வானவர்களை – மலக்குகளை நம்புதல்

வானவர்களின் பல்வேறு பணிகள் இறைவனை வணங்குவார்கள் – 2:30, 7:206, 16:49, 21:19, 21:20, 21:26, 37:165,166, 39:75, 41:38, 42:5

உயிரைக் கைப்பற்றும் வானவர்கள் 4:97, 6:61, 6:93, 7:37, 8:50, 16:28, 16:32, 32:11, 47:27

மனிதர்களைக் கண்காணித்து அவர்களது செயல்களைப் பதிவு செய்யும் வானவர்கள் 10:21, 43:80, 50:18, 82:10,11, 86:4

மனிதர்களைப் பாதுகாக்கும் வானவர்கள் – 6:61, 9:40, 13:11, 82:10, 86:4

வானவர்கள் மறுமையில் நல்லோர்க்குப் பரிந்துரை செய்வார்கள். – 21:28, 53:26

வானவர்கள் மனிதர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள்; பிரார்த்தனை செய்வார்கள் 

11:73, 33:43, 40:7, 42:5

இறைத்தூதர்களுக்கும், இறைவன் தேர்ந்தெடுத்த அடியார்களுக்கும் வானவர்கள் நற்செய்தி கூறுவார்கள் – 3:39, 3:42, 3:45, 11:69, 15:53, 19:19, 29:31, 41:30, 51:28, 54:55

வானவர்கள் போர்க்களங்களில் நல்லோர்க்கு உதவுவார்கள் 

3:124, 3:125, 8:9, 8:12, 9:26, 9:40, 33:9

வானவர்கள் இறைவனின் தண்டனையைக் கொண்டு வருவார்கள்

 6:158, 11:77-81, 15:58, 15:63, 16:33, 29:31, 51:32, 53:33

வானவர்கள் இறைச்செய்தியை, இறைத்தூதர்களுக்கு கொண்டு வருவார்கள்

2:97, 16:2, 16:102, 22:75, 26:193, 41:51, 53:5

இறைவனின் அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் 40:7, 69:17

வானவர்கள் நரகின் காவலர்கள் – 39:71,73, 40:49, 43:77, 44:47,48, 50:21, 50:23,24, 66:6, 67:8, 74:30,31, 96:18

வானவர்கள் சொர்க்கவாசிகளுக்குப் பணிவிடை செய்வார்கள் – 13:23, 15:46, 21:103, 41:31

பிரச்சினைகளைத் தீர்க்கவும் அனுப்பப்படுவார்கள் – 2:248

இறைத்தூதர்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள் – 2:253

சொர்க்கவாசிகளுக்கு வாழ்த்து கூறுவார்கள் – 7:43, 13:23,24, 15:46, 21:103

வானவர்களின் பண்புகள் வானவர்களில் ஆண், பெண் என்ற பால்வேற்றுமை இல்லை 

17:40, 37:150, 43:19, 53:27

இறைவனுக்கு அஞ்சி நடுங்குவார்கள் – 13:13, 16:50, 21:28, 78:38

வானவர்கள் சாப்பிட மாட்டார்கள் – 11:70, 51:24 50

ஆயிரம் ஆண்டுக்கு நிகரான ஒருநாள் வேகத்தில் பயணம் செய்வார்கள் – 70:4

இறைவனின் கட்டளையில்லாமல் பூமிக்கு வரமாட்டார்கள் – 19:64

வானவர்கள் இறைக்கட்டளையை எதிர்க்கேள்வியின்றி ஏற்றுச் செயல்படுவார்கள் –

7:206, 16:50, 21:19, 21:27, 66:6

வானவர்களுக்கு இறக்கைகள் இருக்கும் – 35:1

வானவர்கள் மனித வடிவம் எடுப்பார்கள் – 19:17

வானவர்கள் சோர்வடைய மாட்டார்கள் – 21:20, 41:38

வானவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 2:,30,31,32, 16:77

வானவர்கள் தூதர்கள் என்றும் கூறப்பட்டுள்ளனர்

 6:61, 7:38, 10:21, 11:69, 11:77, 11:81, 22:75, 29:31, 29:33, 35:1, 43:80

பெயர் குறிப்பிடப்பட்ட வானவர்கள் திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கொண்டு வந்த வானவரின் பெயர் ஜிப்ரீல் – 2:97, 16:102, 81:19, 26:193

ரூஹுல் குதூஸ் (தூய உயிர்) என்பது ஜிப்ரீலின் மற்றொரு பெயர் – 2:87, 2:253, 5:110, 16:102

ரூஹ் (உயிர்) என்பது ஜிப்ரீலின் இன்னொரு பெயர் – 19:17, 21:91, 78:38, 70:4, 97:4

ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர்) என்பது ஜிப்ரீலின் வேறொரு பெயர் – 26:193

மீகாயில் எனும் வானவர் – 2:98

மாலிக் எனும் வானவர் – 43:77

ஆண்டுதோறும் ஜிப்ரீலின் வருகை – 97:4