
கைரேகைப் பதிவு மூலம் குற்றவாளிகளைக் கைது செய்யும் நுட்பத்தை உருவாக்கியவர் எட்வர்ட் ஹென்றி. இவர் 1890 ஆம் ஆண்டு வாக்கில் வங்காளத்தில் காவல் துறைத் தலைவராக இருந்தவர். 1901 ஆம் ஆண்டில் ஸ்கொட்லாந்து யார்டில் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரியாக ஹென்றி நியமிக்கப்பட்டார். அங்கு அவர் முதல் முறையாக கைரேகைப் பிரிவைத் தொடங்கினார். பின்னாளில் காவல் துறை ஆணையரான அவர் 1918 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். காவல் துறையில் ஹென்றி ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு ‘சேர்’ […]