கணவனின் குடும்பத்தாருக்குப் பணிவிடை செய்தல் வீட்டைப் பொறுத்த வரை மொத்த வீட்டுக்கும் பெண்தான் பொறுப்பாளியாவாள். ஒரு மனைவி தன் கணவருக்கும் தன் பிள்ளைகளுக்கு மட்டும் தான் பொறுப்பாளி என்று நினைக்கக் கூடாது. கணவரின் தாய், தந்தையரையோ, உடன்பிறந்த சகோதரிகளையோ நாம் கவனிக்க வேண்டியதில்லை என்றும் சிலர் தவறாக விளங்கி வைத்து உள்ளனர். ஆனால் நபியவர்கள் காட்டித் தந்த மார்க்கத்தில் அப்படி இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் […]