Category: குடும்ப வழக்குகள்

a110

அனைத்து வகையான இத்தாக்கள்

அனைத்து வகையான இத்தாக்களின் கால அளவு. கணவனை இழந்த பெண்களின் இத்தா. (4 மாதம் 10 நாள். கற்பிணி பெண்கள் தவிர வேறு யாருக்கும் இதில் விதிவிலக்கு இல்லை) ————————- உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் […]

கணவன் இறந்த பிறகு உள்ள இத்தாவின் சட்டங்கள் என்ன?

இத்தா என்பது என்ன? இறந்தவர் ஆணாக இருந்தால் அவரது மனைவி கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சில உள்ளன. இந்த ஒழுங்குகளைச் சரியாக அறியாத காரணத்தால் பெண்களுக்குப் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதை நாம் காண்கிறோம். கணவனை இழந்த பெண்கள் கணவன் இறந்த உடனேயே மறுமணம் செய்து விடாமல் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக் கெடு முடிந்த பின்னர் தான் மறுமணம் செய்து கொள்ள வேண்டும். மறுமணம் செய்வதைத் தள்ளிப் போடும் இந்தக் கால கட்டம் […]

குர்ஆன் கூறும் விவாகரத்துச் சட்டம்

குர்ஆன் கூறும் விவாகரத்துச் சட்டம் திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம் என்ன? என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தால் முத்தலாக் என்ற மூடத்தனத்திற்கு முட்டுக்கொடுத்திருக்க வேண்டியதில்லை. ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் கூற முடியாது. பல கட்டங்களைக் கடந்து தான் தலாக் எனும் முடிவுக்கு வர வேண்டும். பிடிக்கவில்லை என்றவுடன் தலாக் கூறாமல் அறிவுரைகள் சொல்ல வேண்டும். விவாகரத்து முடிவை எடுத்தால் அதனால் ஏற்படும் பாதகங்களை மனைவிக்குப் புரியவைக்கும் வகையில் அறிவுரை கூற […]

கள்ளத் தொடர்பு மனைவியுடன் சேர்ந்து வாழலாமா?

கணவனின் புகார்: கணவருக்குத் தெரியாமல் திருமணத்திற்கு முன்பிலிருந்து இப்போது வரையிலும், என் மனைவி இன்னொரு ஆணிடம் தொடர்பு வைத்திருக்கிறாள். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நான் அவளுடன் சேர்ந்து வாழ்வதா? தீர்வு: திருமணம் மூலம் அல்லாமல் கள்ளத் தொடர்பு வைக்கும் ஆண்களாயினும், பெண்களாயினும் இஸ்லாமிய ஆட்சியில் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். திருமணம் செய்யாத நிலையில் இது போல் விபச்சரம் செய்பவருக்கு நூறு கசையடிகளும் திருமணத்துக்குப் பின் விபச்சாரம் செய்பவருக்கு மரண தண்டனையும் இஸ்லாமிய ஆட்சியில் வழங்கப்படும். […]

என் குழந்தையை யாருக்குரியது?

மனைவியின் புகார்: என் கணவரோடு எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. இப்போது எங்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை யாருக்குச் சொந்தம்?   தீர்வு: கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டுப் பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது.   குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால் 1. குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால் தாய் தான் அக்குழந்தைக்கு மிகவும் உரிமை படைத்தவளாவாள். ஏனெனில் குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும் […]

சித்தப்பா விவாகரத்து செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?

ஆணின் புகார்: நான், எனது சித்தப்பா விவாகரத்து செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். செய்யலாமா?   தீர்வு: திருமறைக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் யார் யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் […]

உறவுக்கு முன்பாக கணவன் பிரிந்து விட்டால் இத்தா அவசியமா?

மனைவியின் புகார் எனக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நிக்காஹ் முடிந்து சிறிது நேரத்தில் வெளியில் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு வரதட்சணையாக கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்றவர் பிறகு வரவே இல்லை. பிறகு விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் ஒரு வோறொரு பெண்ணோடு ஒரு ஊரில் வசித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. ஒரு நாள் கூட அவரோடு சேர்ந்து வாழவில்லை. அன்றிலிருந்து நான் தனியாகத்தான் வசித்து […]

விபச்சாரம் செய்த கணவருடன், சேர்ந்து வாழலாமா?

மனைவியின் புகார் எனது கணவர் விபச்சார குற்றம் செய்துவிட்டார். இப்போது அது தவறு என்று வருந்துகிறார். நான் அவருடன் சேர்ந்து வாழலாமா?   தீர்வு விபச்சாரக் குற்றம் என்பது தண்டனைக்குரிய மாபெரும் குற்றமாகும். இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் போது சாட்சிகளின் அடிப்படையில் விபச்சாரக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் திருமணம் செய்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு கல்லெறிதல் மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்படும். நீங்கள் விரும்பினாலும் சேர்ந்து வாழ இயலாது. திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு கசையடி தண்டனை வழங்கப்படும். அதே நேரத்தில் […]

விவாகரத்துக்குப் பின் ஜீவனாம்சம் உண்டா?

”பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் – அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்.” (அல்குர்ஆன்: 2:236) ➚  2:236, 2:241, 33:49, 65:6,7 வசனங்களில் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு அழகிய முறையில் வாழ்க்கை […]

மாற்றுமத ஆணை திருமணம் செய்யலாமா?

ஆணின் கேள்வி நான் ஒரு முஸ்லிம் பெண். நான் விரும்பும் ஒரு இந்து ஆணை திருமணம் செய்யலாமா? பதில் இந்துக்கள் இணைவைப்பவர்கள் என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. இணைவைப்பவர்களை திருமணம் செய்து கொள்ள முஸ்லிமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை. அதற்கு கீழ்காணும் வசனம் சான்றாக உள்ளது. ‘(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட முஃமினான ஓர் […]

பெற்றோருக்கு பிடிக்காத மனைவியை தலாக் கூறலாமா?

ஆணின் புகார்: என்னிடம் நல்ல விதமாக நடக்கும் எந்த குறையும் சொல்ல முடியாத என் மனைவியை, எனது பெற்றோர் தலாக் செய்துவிடு என்று சொல்கிறார்கள். நான் தலாக் சொல்ல வேண்டுமா?   பதில்: நியாயமான காரணம் இல்லாமல் கணவன் மனைவியைப் பிரிப்பது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இது ஷைத்தானுடைய செயல் என்றும் இறை மறுப்பாளர்களின் குணம் என்றும் மார்க்கம் கூறுகின்றது. وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ […]

மாப்பிள்ளை, பெண் வீடு இணைந்து விருந்து தரலாமா?

மாப்பிள்ளை வீட்டாரின் புகார்/கேள்வி: எனது மகனுக்கு திருமணம் செய்ய உள்ளேன். வரதட்சனை, பித்அத் எதுவும் இல்லை. மாப்பிள்ளை வீடாகிய நாங்களும், பெண் வீட்டாரும் இணைந்து திருமண விருந்து செலவை பங்கிட்டு செய்யலாமா? பெண் வீட்டார் நாங்களும் செலவு செய்ய விரும்புகிறோம். இது தவறில்லையே என்கிறன்றனர். என்ன செய்வது?   பதில்: வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் மார்க்கத்திற்கு முரணாண காரியமாகும். ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் […]

நான் காதலிக்கும் பெண்ணை, பெற்றோர் மறுக்கின்றனர்

மகனின் புகார் நான் காதலிக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணை, எனக்கு திருமணம் செய்து வைக்க, எனது பெற்றோர் மறுக்கின்றனர். நான் என்ன செய்வது?   தீர்வு உங்களது விருப்பத்தை பெற்றோர்களுக்கு முடிந்த வரை புரிய வையுங்கள். அதைத் தாண்டி, நீங்கள் விரும்பக் கூடியவர் மார்க்க அடிப்படையில் தகுதி இல்லாதவர் என்று அவர்கள் மறுத்தால் அதை மீறுவது, உங்கள் மீது குற்றமாகி விடும். அவ்வாறு இல்லாமல் இன வெறி, குல வெறி  போன்ற காரணத்துக்காகவோ, பெண்வீட்டார் பொருளாதாரத்தில் ஏழை […]

எனது மகன் இந்து பெண்ணை விரும்புகிறான்

தந்தையின் புகார் எனது மகன் இந்து பெண்ணை விரும்புகிறான். அந்த பெண்ணை மணம் முடித்துத் தரலாமா? தீர்வு அவள் இஸ்லாத்தை ஏற்றால், அந்த பெண்ணையே மணம்  தரலாம். கணவனை இழந்திருந்த அனஸ் ரலி அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் அவர்களை அபூதல்ஹா விரும்பினார். ஆனால் அவர் அப்போது முஸ்லிமாக இருக்கவில்லை. ஆனால் உம்மு ஸுலைம் அவர்கள் இஸ்லாத்தை நீர் ஏற்றுக் கொண்டால் அதையே மஹராகக் கருதி உம்மைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உம்மு ஸுலைம் ரலி […]

என்னை பார்க்கமலேயே தலாக் சொல்லிவிட்டார்!

மனைவியின் புகார் எனது கணவர் என்னை பார்க்கமலேயே தலாக் சொல்லிவிட்டார்! (அல்லது) வெளிநாட்டில் வேலை செய்யும் எனது கணவர், என்னை அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பும், இரு நபர்களை சாட்சியாக வைத்து அவ்விருவரும் ஊர் ஜமாத்தில் சாட்சி சொல்லும் பட்சத்தில் விவாகரத்து செய்துவிட்டார். இது செல்லுமா?   தீர்வு  இந்த தலாக்  செல்லாது. ஏனெனில், கணவன் மனைவியை விவாகரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு சாட்சியாளர்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். நபியே! பெண்களை நீங்கள் விவாக […]

குலா மற்றும் தலாக் வேறுபாடு

  தலாக் மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும். குலா கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும். விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.   ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் […]

09) குலாவின் தெளிவான சட்டங்கள்

குலஃ உடைய சட்டங்களின் சுருக்கம் ஒரு பெண்ணிற்குத் தன் கணவனைப் பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும். அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாளோ அதைக் கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும். அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளை விட்டுப் பிரிந்துவிடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படாவிட்டாலும் கூட தலைவர் அந்தத் திருமண உறவை இரத்துச் செய்ய வேண்டும். […]

தலாக் விட்டு 7 மாதம் ஆகிவிட்டது. மீண்டும் சேரலாமா?

மனைவியின் புகார் ? எனக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்களில் எனக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனையில் பிரிந்தோம். பெரியவர்களின் பிரச்சனையால் என் கணவர் திடீரென்று முத்தலாக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி விட்டார். என் கணவர் தலாக் விட்டு ஏழு மாதங்கள் ஆகின்றது. என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் முத்தலாக் விட்டுவிட்டால் ஒரு தலாக்காவே கருதப்படும் என்றும் அவரே உம் கணவர் என்றும் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். […]

மனைவியின் சொத்தை கணவன் விற்கலாமா?

மனைவியின் புகார்: எனது கணவர் எனது சொத்தை பயன்படுத்துகிறார். தேவைக்கு எடுத்து விற்கவும் செய்கிறார். இது சரியா?   பதில்: மனைவியின் சொத்துக்கள் அனைத்தும் கணவனுக்குத் தான் சொந்தம் என்ற எழுதப்படாத சட்டம் நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது தான் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம். கணவனுக்கென்று சொத்துக்கள் இருப்பது போலவே மனைவிக்கும் தனியாக சொத்துக்கள் இருக்கலாம். அவள் விரும்பினால் கணவனுக்குத் தனது சொத்திலிருந்து தர்மம் கூட செய்யலாம். அது அவளுடைய சொத்தாக ஆகுமே தவிர […]

நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா?

ஒரு ஆணின் புகார்/கேள்வி (அல்குர்ஆன்: 5:5) ➚வசனம்,  வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது. எனவே, கிறித்தவப் பெண்களை அவர்கள் கிறித்தவர்களாக இருக்கும் நிலையில் திருமணம் செய்யலாமா?   பதில் الْيَوْمَ أُحِلَّ لَكُمْ الطَّيِّبَاتُ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَهُمْ وَالْمُحْصَنَاتُ مِنْ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنْ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ وَمَنْ […]

பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?

பெண்கள் வேலைக்குச் செல்லலாமா? என்னுடைய தாயார் மிளகாய் விற்றுத்தான் என்னை படிக்க வைத்தார்கள். இது மார்க்க அடிப்படையில் ஹராமா? நான் திருமணம் முடிக்கப்போகும் பெண் யுனிவர்சிடியில் டாக்டர் ஆவதற்கு படிக்கிறார். பெண்கள் வேலைக்கு செல்வது பற்றி தெளிவான விளக்கம் தேவை. பதில் : சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக […]

என் கணவன், என் தாய் வீட்டில் தான் வாழ்கிறார்!

மனைவியின் புகார்: எனது கணவர், எங்களது திருமணத்திற்குப் பிறகு எனது தாய் வீட்டில் என்னுடன் வாழ்ந்து வருகிறார். பெண், கணவன் வீட்டில் போய் வாழ வேண்டுமா?அல்லது கணவன், மனைவியின் வீட்டில் போய் வாழ வேண்டுமா?    மனைவி வீட்டில் கணவன் வாழக்கூடாது. சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். (அல்குர்ஆன்: 4:34) ➚ ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் என்றும், ஆண்களே பெண்களுக்காக […]

எனது விருப்பமின்றி, மாப்பிள்ளையை பார்க்கின்றனர்!

பெண்ணின் புகார் எனது விருப்பம் இல்லாத மாப்பிள்ளையை எனக்கு திருமணம் செய்வதற்காக எனது பெற்றோர் நிச்சயித்துள்ளனர். நான் என்ன செய்வது? அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று மறுக்கலாமா?   மறுக்கலாம். தனக்குப் பிடித்தவரைக் கணவனாக தேர்வு செய்ய பெண்ணிற்கு இஸ்லாத்தில் உரிமைவழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம்செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “கன்னி கழிந்த பெண்ணை, அவளது(வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப்பெண்ணிடம் (ஏதேனும் ஒரு […]