கட்டளையிடும் திறன் ஒரு நிர்வாகத்தில் ஒரு தலைவரை விட அல்லது வேறொரு முன்னிலை நிர்வாகியை விட செல்வத்தில், பலத்தில், அறிவில், அனுபவத்தில் சிறந்தவர்கள் இருப்பார்கள். இவர்களது சிந்தனை ஓட்டமும் நடவடிக்கைகளும் அவர்களது சிறப்புத் தகுதிகளை, சிறப்பு அம்சங்களைப் பிரதிபலிக்கும். இது நிர்வாகத்தில் ஒரு சாராரை உயர்வு மனப்பான்மையுடனும் இத்தகுதிகள் இல்லாதவர்களை தாழ்வு மனப்பான்மையுடனும் செயல்பட வைக்கும். இது நிர்வாகத்தின் அங்கத்தினர்களிடமும் மற்ற உறுப்பினர்களிடமும் ஒரு பிளவை ஏற்படுத்தி, நாளடைவில் பிரிவினை எற்படவும் வழிவகுக்கும். ஆகையால் ஒரு தலைவர், […]