நம்மில் சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவரிடம் உதவி கேட்பதும்,ஒரு தேவை என்றால் மாற்று வழியை யோசிக்காமல் உடனடியாக அடுத்தவரிடம் யாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. முகீரா இப்னு ஷுஅபா(ரலி)யின் எழுத்தர் (வர்ராது) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள்” என முஆவியா(ரலி) முகீரா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு முகீரா(ரலி) ‘நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது). பொருள்களை வீணாக்குவதும் அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும்!” […]