அல்லாஹ்வின் பெயர்களை மனிதர்களுக்கு வைக்கலாமா? இறைவனுக்கு மட்டும் உரிய தன்மைகளை அறிவிக்கும் பெயர்களை இறைவன் அல்லாத மற்றவர்களுக்குச் சூட்டக்கூடாது. எந்தத் தன்மைகள் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இருக்கின்றதோ அது போன்ற தன்மைகளைக் கொண்ட பெயர்களை மனிதர்களுக்கு சூட்டுவது தவறல்ல. சில தன்மைகள் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இருந்தாலும் இறைவன் அத்தன்மைகளைப் பெற்றிருப்பதற்கும் மனிதர்கள் அத்தன்மைகளைப் பெற்றிருப்பதற்கும் இடையே பல வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். ஹகம் என்ற பெயரைச் சூட்டவேண்டாமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் […]