Tamil Bayan Points

நாள் வாடகை வட்டியாகுமா?

கேள்வி-பதில்: வியாபாரம்

Last Updated on November 23, 2020 by Trichy Farook

நாள் வாடகை வட்டியாகுமா?

வட்டி என்பது என்ன? இதைச் சரியாக விளங்கிக் கொண்டால் குழப்பம் வராது

நம்முடைய பணம் ஒருவரிடம் இருப்பதற்காக எவ்வளவு காலம் அவரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப ஆதாயம் பெறுவது தான் வட்டி என்பது.

நம்முடைய பொருள் ஒருவரிடம் இருப்பதற்காக எவ்வளவு கால, அவரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப ஆதாயம் அடைவது வாடகை எனப்படும்.

இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும். நமது பணத்தை ஒருவன் பயன்படுத்தினால் அதனால் பணத்தின் மதிப்பு குறையப் போகிறது. நோட்டு பழையதாக ஆனாலும் பணத்தின் மதிப்பு குறையாது. பழைய நோட்டுகளுக்கும் புதிய நோட்டுகளுக்கும் மதிப்பு ஒன்று தான்.

ஆனால் ஒருவனது வீட்டை வாகனத்தைப் பயன்படுத்தினால் அதனால் தேய்மானம் ஏற்படுகிறது. இந்த வகையில் வாடகையும் வட்டியும் வேறுபடுகிறது.

ஒருவனது பணத்தை நாம் ஏதோ ஒரு துறையில் பயன்படுத்தினால் அதில் லாபமும் நட்டமும் ஏற்படலாம். நிச்சயமான ஆதாயம் இல்லை. ஆனால் ஒரு பொருளை வாடகைக்கு எடுத்தால் அதை நாம் அனுபவித்து விடுவது நிச்சயமானது.

எனவே வாடகையை வட்டி என்று கூறுவது ஏற்புடையது அல்ல. இஸ்லாம் கூறும் பொருளியல் என்ற தொடர் உறையில் இது பற்றி விரிவான விளக்கம் காணலாம்.