அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும். அபுந் நுஅமான் (ரஹ்) அவர்களிடமி ருந்து முஹம்மத் பின் சலாம் (ரஹ்) அவர்கள் அதிகப்படியாக அறிவித்ததாவது: அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளன்று) நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் இறங்கிற்று. உடனே நபி (ஸல்) அவர்கள் […]