Tamil Bayan Points

மற்றவை அனைத்தும்

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

 

அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ஒரு குகையிலிருந்தோம். அப்போது ‘வல்முர்ஸலாத்’ எனும் அத்தியாயம் அவர்களுக்கு இறங்கியது. அவர்கள் அதை ஓதிக் காட்டினார்கள். நான் அவர்களின் திருவாயிலிருந்து (கேட்டு) அதை மனனம் செய்து கொண்டிருந்தேன். அதை ஓதியதால் அவர்களின் வாய் ஈரமாக இருந்தது.

அப்போது ஒரு பாம்பு எங்களை நோக்கிச் சீறியது. உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அதைக் கொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள் அதைக் கொல்ல விரைந்தபோது அது சென்றுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அதன் தீங்கிலிருந்து நீங்கள் தப்பித்ததுபோல் உங்கள் தீங்கிலிருந்து அது தப்பித்தது!’ என்று கூறினார்கள்.

(புகாரி 1830)

 

 

 


 

4542

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அவற்றை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்து (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.

 


 

4606

தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம், நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள், அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்என்று கூறினர். உமர் (ரலி) அவர்கள், அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (ஃதுல்ஹஜ்-9ஆம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்.

 


 

நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்கு வதில்லை எனும் (5:89ஆவது) வசனத் தொடர்.

4613 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை எனும் (5:89ஆவது) இறை வசனம் லா வல்லாஹி (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும், பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும் (பொருள் கொள்ளாமல் பழக்கத்தின் காரணமாக சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுகின்றவரின் விஷயத்தில் அருளப்பெற்றது.