ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டம் புரூனேவில் நிறைவேறியது புருனேவில் ஒருபால் உறவுக்காரர்கள் உறவு […]
Author: Trichy Farook
இஸ்லாம் ஓர் அதிசயம்!
இஸ்லாம் ஓர் அதிசயம்! ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது. இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. […]
எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம்
எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம் எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம் : (அல் குர்ஆன்.15:74 ) (A meteor may have exploded in the air 3,700 years ago, obliterating communities near the Dead Sea) நமக்கு முன் சென்றவர்களான நூஹுடைய சமூகத்தினர், ஆத்,மற்றும் ஸமூத் கூட்டத்தினர், மத்யன்வாசிகள், மற்றும் தலை கீழாக புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் வரலாறு இவர்களுக்குக் கிடைக்கவில்லையா?” (அல் குர்ஆன். 9:70) முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு […]
ஜன் சேவா எனும் வட்டிக் கடை
ஜன் சேவா எனும் வட்டிக் கடை தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் ஜன் சேவா எனும் பெயரில் வட்டியில்லா வங்கி நடைபெற்று வருவதாகவும், அவர்கள் சட்டதிட்டங்கள் உண்மையில் மார்க்க அடிப்படையில் சரியானது தானா? அந்த வங்கியில் பங்குதாரராக இணையலாமா? அதில் கடன் பெறுவது கூடுமா? எனப் பலர் விளக்கம் கேட்டு வருகின்றனர். இவர்கள் வட்டி இல்லா வங்கி முறையை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்காக அந்தச் சகோதரர்கள் நமக்கு அனுப்பித் தந்த வங்கியின் சார்பாக […]
ஈர்ப்பு அலைகளின் விண்வெளி இரைச்சல்
ஈர்ப்பு அலைகளின் விண்வெளி இரைச்சல் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 100 ஆண்டுகளுக்கு முன், 1915ம் ஆண்டு ஈர்ப்பு விசை (Gravitational force) குறித்த தனது பொது சார்பியல் தத்துவத்தை (General Theory of Relativity) வெளியிட்டார். அண்டத்தின் கண்களுக்குப் புலப்படாத, இன்னொரு இருண்ட பக்கம் குறித்த தத்துவம் அது. விண்வெளியில் சூரியன் போன்றுள்ள நட்சத்திரங்கள், தங்கள் வாழ்வின் இறுதியில் கருந்துளைகளாக மாறும், இதையடுத்து உருவாகும் மாபெரும் வெடிப்பின்போது (Big bang) வலுவான ஈர்ப்பு விசை […]
விரைவாக விரியும் விண்வெளி பிரபஞ்சம்
விரைவாக விரியும் விண்வெளி பிரபஞ்சம் (THE UNIVERSE IS EXPANDING FASTER) நமது பிரபஞ்ச விண்வெளி விரிந்து சென்று கொண்டிருக்கிறது,எப்படியென்றால் ஒரு பலூனை ஊதினால் அது எல்லாப்புறமும் விரிந்து உப்புவதுபோல் விண்வெளிப் பெருவெளி விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பேருண்மையை அல்லாஹ் அல் குர்ஆனில் அன்றே கூறினாலும்,அறிவியல் ஆய்வுகள் தற்போதுதான் இதை மெய்பித்து வருகின்றன. “ மேலும் நாம் வானத்தை நம் சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையராவோம். (அல் குர்ஆன்.51:47.) பெரு வெடிப்பு (Big Bang) கொள்கையின்படி விரிய ஆரம்பித்த பிரபஞ்சம் இன்றுவரை விரிந்து கொண்டேயிருக்கிறது.இவ்வுண்மையை முதலில் ரஷியா அறிஞர் அலெக்ஸ்சாண்டர் பிரைட்மன் […]
ஜப்பானில் தலை விரித்தாடும் மூடநம்பிக்கை!
ஜப்பானில் தலை விரித்தாடும் மூடநம்பிக்கை! ஜப்பான் நாடு பல புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு என்று சொல்லப்படுவதுண்டு; அங்குள்ள மக்கள் அவ்வளவு திறமைசாலிகளா? என்று பலரும் வியந்து போய் கேட்பர்; ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா? என்னதான் அதி அற்புத சிந்தனை சக்தி இருந்தாலும் தன்னைப் படைத்த கடவுளைப்பற்றியான சிந்தனையில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்; அத்தகைய தெளிவு இல்லாவிட்டால் அவர் எப்படிப்பட்ட அதிபுத்திசாலியாக இருந்தாலும் அவரது மூளை வேலை செய்யாது; இதற்கு நிதர்சனமான […]
இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் “சாதி”
இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சாதி சாதி அமைப்பை ஒழிக்காமல் இந்தியா முழுமையாக முன்னேற முடியாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதி பெரும் தடைக் கல்லாக இருக்கிறது என திபெத் பவுத்த மதத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். இந்திய மண்ணில் இன்னும் சாதி கொடுமை நிலவுவது மிகப் பெரிய அவமானமாகும். சாதியின் பெயரால் ஒருவருக்கொருவர் பாகுபாடு பார்ப்பது துயரமானது. சாதி பாகுபாட்டின் காரணமாக தனி மனிதர்கள் மட்டுமல்லாமல் சமூகத்தியே சீரழித்து விடும். ஒரே மாதிரியான ரத்தம், சதை, மூளை, […]
அல்லாஹ் ஆதியில் படைத்து ….பூமிக்கு இறக்கிய நீரின் அதிசயமும்… அதன் அவசியமும்…!
அல்லாஹ் ஆதியில் படைத்து ….பூமிக்கு இறக்கிய நீரின் அதிசயமும்… அதன் அவசியமும்…! The Earth´s oceans were formed by water from comets அல்லாஹ் படைத்த இம்மாபெரும் பிரபஞ்சத்தில் வானம், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள் போன்ற பெரும்படைப்புகள் உள்ளன. அவனது எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமாக அவன் முதலில் படைத்தது ‘தண்ணீர்”. இன்று நாம் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் நீரானது… அல்லாஹ்வின் தலையாய படைப்பு என்று எண்ணும்போதே அந்த நீரின் மகத்துவமும், கண்ணியமும் அதன் மதிப்பும் நமக்கு […]
வரதட்சணை வாங்கிட்டு வா… இளம்பெண்ணை கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்
வரதட்சணை வாங்கிட்டு வா… இளம்பெண்ணை கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் லக்னொ: உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து பல கொலைகள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் புதுப்புடவை கேட்ட இளம் பெண் கணவர் வாங்கித்தர மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். இரு தினங்களுக்கு முன்பு இளம் பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தகவலறிந்த போலீஸார் கணவன் மற்றும் மாமனார் மாமியாரை கைது […]
வந்தே மாதரத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்?
வந்தே மாதரத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்? அனைத்து கல்வி நிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அடாவடித் தீர்ப்பு எவ்வளவு அபத்தமானது என்பதை தனிக்கட்டுரையில் விளக்கியுள்ளோம். இருந்த போதிலும் இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னதாக நாடு முழுதும் சர்ச்சை எழுந்தது; பாரளுமன்றத்தில் வந்தேமாதரம் பாடும்போது அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்றபோது, பகுஜன் சமாஜ் எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் வெளி நடப்பு செய்துள்ளார். தேசிய கீதத்தை […]
“அஸ்ல்” என்னும் கர்ப்பத்தடை: அல்லாஹ் விதித்ததை எவராலும் தடுக்கமுடியாது.
“அஸ்ல்” என்னும் கர்ப்பத்தடை: அல்லாஹ் விதித்ததை எவராலும் தடுக்கமுடியாது. (Can You Prevent Pregnancy with the Pullout Method?) குழந்தை பிறப்பை தடுப்பதற்கும், தள்ளிப்போடவும் பல்வேறு கர்ப்பத்தடை வழிமுறைகள், உலகெங்கும் மக்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.அவற்றில் மிகப் பழமையான வழிமுறை,”அஸ்ல் செய்தல்” என்பது. புணர்ச்சியின் போது ஆணின் விந்து வெளிவரும் தருணத்தில், பெண்ணுறுப்பிலிருந்து ஆணுறுப்பை வெளியே எடுத்து விடுவதற்குப் பெயர் “அஸ்ல்’. (Coitus interruptus) ஆணின் விந்தானது பெண்ணின் உறுப்பில் சென்று விடாமல் தடுப்பதன் மூலம் கர்ப்பம் உண்டாகாமல் […]
நாய்களால் ஏற்படும் நோய்கள்
நாய்களால் ஏற்படும் நோய்கள் மனிதன் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் நாய்க்கு ஒரு முக்கிய இடமுண்டு. நாய்களுக்கு அழகழகான செல்லப்பெயர்கள் சூட்டி தன் படுக்கையறைக்குப் பக்கத்திலேயே இடமும் அளித்து அவ்வப்போது கட்டியணைத்து கொஞ்சி குழாவும் நடைமுறை ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரிடத்திலும் அதிகரித்துள்ளது. தான் வாக்கிங் செல்கிறாரோ இல்லையோ தன் செல்ல நாய்க்குட்டியை ஜாக்கிங் அழைத்து செல்வோரை சென்னை போன்ற பெருநகரங்களில் கணிசமாக பார்க்க முடிகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று நண்பரின் திருமண அன்பளிப்பாக கூட […]
டி.வி சீரியல் விபரீதம்: சிறுமி பலி!
டி.வி சீரியல் விபரீதம்: சிறுமி பலி! கி.ஹாஜா மைதீன் தொலைக்காட்சி சீரியல்கள் மனிதர்களின் மூளையை மழுங்கடித்து வருகிறது. அதில் இடம்பெறும் கற்பனைக் காட்சிகளை உண்மை என நம்புகின்ற மக்களைப் பார்க்கிறோம். பெரியவர்களே தொலைக் காட்சியில் மூழ்கியிருக்கும் போது சிறார்களைச் சொல்லவா வேண்டும்? சமீபத்தில் சீரியலினால் நடந்த விபரீதத்தினைப் பாருங்கள்: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரார்த்தனா என்ற சிறுமி நந்தினி என்ற கன்னடத் தொடரை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார். அதில் ஒரு காட்சியில் கதாநாயகி தன்னைச் சுற்றி […]
நபிகள் நாயகத்தின் முடிக்கு(?) தர்கா!
நபிகள் நாயகத்தின் முடிக்கு(?) தர்கா! காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ஹஸ்ரத் பால் தர்கா இருக்கிறது. இது தர்கா என்று சொல்லப்பட்டாலும் இங்கு சமாதி எதுவும் கிடையாது. பால் என்ற பாரசீகச் சொல்லிக்கு முடி என்று பொருள். ஹஸ்ரத் பால் என்றால் புனித முடி என்று பொருள். இந்த தர்காவில் ஒரு முடி காட்சிப் படுத்தப்பட்டு, அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முடி என்று சொல்லப்படுகிறது. இதற்கு ஒரு கதையையும் கட்டியுள்ளனர். நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல் […]
மாட்டிறைச்சியின் பெயரால் தொடரும் தாக்குதல்கள்
மாட்டிறைச்சியின் பெயரால் தொடரும் தாக்குதல்கள் மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் பல இன மத மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்திய ஜனநாயகம் ஒவ்வொரு மத இன மக்களுக்கும் ஒவ்வொரு வகையான உரிமைகளை வழங்கியுள்ளது. பேச்சுரிமை எழுத்துரிமை மத வழிபாட்டு உரிமை என ஒவ்வொரு மத மக்களுக்கும் பலவிதமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமைகளின் பட்டியலில் உணவிற்கான தனிநபர் உரிமையும் அடக்கம். இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இந்திய தேசத்தில் ஒருநபர் என்ன உணவை உட்கொள்ளலாம் […]
மீட்புப் பணியில் மரணித்த முஸ்லிம்
மீட்புப் பணியில் மரணித்த முஸ்லிம் காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியிலுள்ள லிட்டர் ஆற்றில் படகு பயணம் செய்வதற்கு கடந்த 31-06-2019 வெள்ளிக் கிழமை அன்று ஐந்து சுற்றுலாப் பயணிகள் சென்றிருந்தனர். அப்போது அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக ரூஃப் அகமது தார் எனும் முஸ்லிம் இளைஞர் சென்றுள்ளார். காஷ்மீரின் குல்காம் பகுதியைச் சேர்ந்த இவர், அரசு பதிவு பெற்ற தொழில்முறை வழிகாட்டியாக இருப்பவர். ஸ்ரீநகரில் இருந்து 96 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆற்றுப் பகுதியில் படகு […]
மீண்டும் தலைதூக்கும் மதவாதம்
மீண்டும் தலைதூக்கும் மதவாதம் பீஹார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட முஹம்மது பர்கர் ஆலம் (வயது 25) எனும் முஸ்லிம் இளைஞர், ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் ஜேக்கப் புரா பகுதியில் வசித்து வருகிறார். அந்தப் பகுதியிலுள்ள சர்தார் பஜாரில் தையல் கடையில் வேலை செய்யும் இவர், கடந்த மே மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு அருகில் இருந்த பள்ளிவாசலில் தொழுது விட்டு கடைக்குத் திரும்பும் போது அவரை அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்துள்ளனர். […]
ஒரே நாளில் 37 பேருக்கு தண்டனை வழங்கிய சவூதி அரேபியா.!
ஒரே நாளில் 37 பேருக்கு தண்டனை வழங்கிய சவூதி அரேபியா கடமையைச் செய்யாத சட்டம் பெண்களை மிரட்டும் பாலியல் கும்பல்! இஸ்லாமிய சட்டத்தைக் கடைபிடித்து வரும் சவூதி அரேபியாவில் குற்றம் நிறுபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம். தண்டனை என்று சொன்னால் நான்கு சுவற்றுக்குள் யாருக்குமே தெரியாமல் தண்டனையை நிறைவேற்றுவது அல்ல! மாறாக அனைவரின் முன்னிலையிலும் அனைவரும் பார்க்கும் வகையிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படும். இவ்வாறு நிறைவேற்றப்படும் தண்டனைகளின் காரணமாகவே சவூதி அரேபியாவில் குற்றங்கள் மிகவும் குறைந்து காணப்படுகின்றது. […]
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் இஸ்லாமிய அமைப்பா?
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் இஸ்லாமிய அமைப்பா? இலங்கையில் 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் மற்றும் தற்கொலைப் படைத்தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்தார்கள். ஐநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் நிரந்தர ஊனம் ஆகியுள்ளனர் என்கின்ற தகவல் உள்ளத்தை உருக்கி கண்களில் நீரைக் கசிய வைக்கின்றது.. இலங்கையில் நடைபெற்ற இந்த கொடூர குண்டுவெடிப்பிற்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் 50 மணி நேரங்கள் கழித்து ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. […]
பப்ஜி கேம் தடைசெய்யப்படுமா?
பப்ஜி கேம் தடைசெய்யப்படுமா? இண்டர்நெட் பயன்படுத்தும் பழக்கம் மக்களிடம் பெருகிய பிறகு பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களின் வரத்து அதிகமாகி விட்டது. அந்த ஃபோன்களில் பயன்படுத்தும் வகையில் ஏராளமான அப்ளிகேசன்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. அதுவும் பொழுது போக்குவதற்கு என்று நிறைய கேம்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதில் சில கேம்கள் சில நாட்களிலேயே பெரும்பாலான மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவிடுகின்றன. அதற்கு அவர்கள் அடிமையாக மாறிவிடுகிறார்கள். இந்த வகையில் புளூவேல் எனும் கேம் உலக […]
ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
ஜனநாயகமா? சர்வாதிகாரமா? இந்தியா ஜனநாயக நாடு, குடியரசு நாடு, மதச்சார்பற்ற நாடு என்று பெயரெடுத்த காலமெல்லாம் போய் இப்போது இந்தியா சர்வாதிகார நாடு என்று சொல்லும் காலம் வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கின்றது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்ற இலக்கியச் சொல்லாடெல்லாம் மறந்து போய் இநதியா குழப்பத்தின் பொன்னாடே என்று நவீன கவிஞர்கள் எழுதும் நிலை வந்து விடும் போலிருக்கின்றது. மக்களாட்சிக்கும் மன்னராட்சிக்கும் உள்ள ஒரே வேறுபாடு தேர்தல் முறையாகும். குடியரசு […]
ஆண்களுக்கும் பாதுகாப்பளிக்கும் புர்கா
ஆண்களுக்கும் பாதுகாப்பளிக்கும் புர்கா கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் எம்.இ.எஸ். முஸ்லிம் கல்விக் குழுமம் உள்ளது. இந்த கல்விக் குழுமத்தின் சார்பில் 35 கல்லூரிகள், 72 பள்ளிகள் நடத்தப் படுகின்றன. இந்த கல்விக் கூடங்களில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் புர்கா உடை அணிந்து வர தடை விதிக்க வேண்டும் என குழுமத்தின் சார்பில் கல்லூரி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. இதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியவுடன் மாணவ, மாணவிகளின் சீருடையை முடிவு செய்வது கல்வி நிறுவனர்களின் தனிப்பட்ட உரிமை. […]
நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டதால் தலித் இளைஞர் படுகொலை!
நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டதால் தலித் இளைஞர் படுகொலை! கடந்த ஐந்து வருட கால பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மற்றும் தலித் இனத்தைச் சார்ந்த மக்களுக்கு எதிராக கடுமையான அராஜகப் போக்கையும், படுகொலைகளையும் பாஜக அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காலகட்டத்தில் அரங்கேறியது. எத்தனையோ படுகொலைகள் ஆட்சிக் காலத்தில் தான் அரங்கேற்றப்பட்டது. இப்போது ஆட்சிக் கட்டிலில் இல்லையே அநியாயங்கள் அரங்கேறுவதற்கு வாய்ப்பில்லை என்று மக்களெல்லாம் எண்ணி விடக் கூடாது என்பதற்காக மிகப்பெரும் ஒரு அநியாயத்தை மதவெறி பிடித்த, ஜாதி […]
மத சுதந்திர பட்டியலில் ஆபத்தான இடத்தில் இந்தியா….!
மத சுதந்திர பட்டியலில் ஆபத்தான இடத்தில் இந்தியா….! சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையத்தின் 20- வது ஆண்டறிக்கையில் 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனம் தேவைப்படும் இரண்டாம் அடுக்கு பட்டியலில் ஆப்கானிஸ்தான், எகிப்து, இந்தோனேஷியா, இராக், கஜகஸ்தான், மலேசியா, துருக்கி உள்ளிட்ட 11 நாடுகளோடு 12வது நாடாக இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம்கள் ஒடுக்கப் படுவதாலேயே இந்தப் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது என்பதை எண்ணிப் […]
குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்?
குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்? கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா என்பதற்கு விளக்கம் தரவும்! மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையைக் கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்த. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் அதைப் பற்றி கேட்டார்கள். அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இந்த வாசனை ‘மாஷித்தா’வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை” என்று கூறினார்கள். தொடர்ந்து […]
நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி?
நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி? நஜ்ஜாஷி மன்னர் குறித்து அஹ்மத் என்ற ஹதீஸ் நூலில் இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான செய்தி அவர் எவ்வாறு இஸ்லாத்தை மறைமுகமாக ஏற்றார் என்று தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ்வுடைய வேத வசனங்களை ஓதக்கேட்டதும் அவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அபீசீனியா ஹிஜ்ரத் சம்பந்தமாக விரிவான செய்தி (அஹ்மத்: 1740) (1649) இல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது ஒரு நீண்ட சம்பவம். அதில் முக்கிய நிகழ்வுகளை எடுத்து வைக்கிறோம். அபீசீனியாவிற்கு நபித்தோழர்கள் அடைக்கலம் […]
போர்களால் ஆண்டுக்கு இலட்சம் குழந்தைகள் பலி
போர்களால் ஆண்டுக்கு இலட்சம் குழந்தைகள் பலி போர் மூலமாக பொதுமக்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்கு தான் சர்வதேச அளவில் நாடுகளுக்கு மத்தியில் போர் தடுப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. எல்லைப் பிரச்சனை கொண்ட நாடுகள் தங்களுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வைத்துள்ளன. ஆனால் அதையும் மீறி தார்மீக நெறிகளுக்கு எதிராக பல நாடுகள் இடையே வெளிப்படையாகவும் மறைவாகவும் போர் நடக்கின்றன. இதனால் மக்கள் கொன்று அழிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஏதும் அறியாத குழந்தைகளும் சிறுவர்களும் கொலை செய்யப்படுகிறார்கள். அமெரிக்க, […]
மதவெறியை வென்ற மனிதநேயம்
மதவெறியை வென்ற மனிதநேயம் இந்தியாவில் மனிதநேயம் மரணித்து விட்டதை கடந்த 5 ஆண்டுகளில் பார்த்திருப்போம். வீட்டில் ஆட்டிறைச்சி வைத்திருந்த ராணுவ வீரரின் தந்தை அஹ்லாக் என்ற அப்பாவி முதியவரை பயங்கரவாதிகள் அடித்தே கொலை செய்தனர். ராஜஸ்தானில் ஒரு அப்பாவி முஸ்லிம் முதியவரை தன் தோட்ட வேலைக்கு அழைத்துச் சென்ற பயங்கரவாதி ஒருவன், அவரை லவ் ஜிகாத் செய்து விட்டார் என்று பொய் கூறி கோடாரியால் வெட்டி பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திய நிகழ்வு நெஞ்சை பதற வைத்தது. நாட்டில் […]
காவி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தப்ரேஸ் அன்சாரி.!
காவி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தப்ரேஸ் அன்சாரி.! ஜாம்ஷெட்பூர்: ஊருக்குள் இருசக்கர வாகனத்தை திருட வந்ததாக கூறி 24 வயது முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் இரவு முழுவதும் அடித்து உதைத்து துன்புறுத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொல்லப்பட்டவருக்கு திருமணம் நடந்து ஒன்றறை மாதமே ஆகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சரைக்கெலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாம்ஸ் தப்ரேஸ் அன்சாரி என்ற 24 வயது இஸ்லாமிய இளைஞர், இவர் அந்த பகுதியில் உள்ள செரைகெலா என்ற […]
ஜெய் ஸ்ரீராம் முழக்கம் சொல்லாத முஸ்லிம் சிறுவன் மீது கொடூர தாக்குதல்!
ஜெய் ஸ்ரீராம் முழக்கம் சொல்லாத முஸ்லிம் சிறுவன் மீது கொடூர தாக்குதல்! கான்பூர்: இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்தியபடி ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை சொல்ல மறுத்த 16 வயது முஸ்லிம் சிறுவன் மிக கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் கான்பூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய் ஸ்ரீராம் முழக்கமானது வட இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு ஆயுதமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஜார்க்கண்ட்டில் இந்த முழக்கத்தை சொல்ல மறுத்த முஸ்லிம் இளைஞர் விடிய விடிய தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் இம்முழக்கத்தை சொல்ல […]
காவி வெறியர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சனாவுல்லாஹ் ஷேக்!
காவி வெறியர்களால் பிறப்புறுப்பிலேயே அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சனாவுல்லாஹ் ஷேக்! மேற்கு வங்கத்தில் காவி மிருகங்களின் அடுத்த அட்டூழியம்! ஜார்க்கண்டில் தப்ரேஸ் அன்சாரி கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு சில நாட்களே ஆன நிலையில், மேற்கு வங்கத்தில் சனாவுல்லாஹ் ஷேக் என்ற 24 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவரை காவிபயங்கரவாதிகள் அடித்தே கொலை செய்துள்ளனர். கல்கத்தாவிலிருந்து 326 கி.மீ தூரத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் தான் காவி வெறிப்பிடித்த கும்பல் ஒன்று இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது. சனாவுல்லாஹ் […]
பாலியல் குற்றங்களும் பல்வேறு தண்டனைகளும்.?
பாலியல் குற்றங்களும் பல்வேறு தண்டனைகளும் சமீபத்தில் கோவை துடியலூரில் சிறுமி ரிதன்யஸ்ரீ பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களிடத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண் பிள்ளைகளை யாரை நம்பித்தான் வெளியே அனுப்புவது? பெண் பிள்ளைகளுக்கு பள்ளிப் படிப்பு தேவைதானா? கல்லூரிகளுக்கு பெண் பிள்ளைகளை ஏன் அனுப்ப வேண்டும்? என்பன போன்ற ஏராளமான கேள்விக்கணைகள் பெற்றோர்களுக்கும், ஒட்டு மொத்த மக்களுக்கும் எழுந்து கொண்டிருக்கின்றது. மொபைல் ஃபோன்களின் வாயிலாக பெண்கள் ஏமாற்றப்பட்டு மான, மரியாதையையும், […]
பெண்களுக்கு கல்வி வேண்டாம்!
‘பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்! எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள்! கைத்தறியையும் அந்நூர் அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: ஹாகிம் (3494) இதே கருத்து தப்ரானியின் முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற பழமொழியை நபி (ஸல்) அவர்கள் தான் சொல்லித் தந்திருப்பார்களோ என்று நாம் எண்ணும் வண்ணம் […]
திருமணமான இரண்டே மாதங்களில் மணப்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.!
திருமணமான இரண்டே மாதங்களில் மணப்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.! திருமணமான இரண்டே மாதங்களில் மணப்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் அடித்துத் துன்புறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த பெண்ணை அவரது கணவர் குடும்பத்தார் சரமாரியாக தாக்கும் காட்சி வைரலானதையடுத்து போலீஸார் வழக்கை தாமாகவே முன்வந்து கையிலெடுத்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “என்னை எனது கணவரும், மாமனார் மாமியாரும் அடித்தனர். என்னிடம் அவர்கள் வரதட்சனை கேட்கின்றனர். […]
அல்லாஹ்வின் பார்வையில் சூனியம்
சூனியம் ஒரு தந்திரமே! சூனியம், சூனியம் செய்பவர், சூனியம் செய்யப்பட்டவர் ஆகிய சொற்கள் (அல்குர்ஆன்: 5:110, 7:109, 7:116 , 7:118 , 7:119 , 7:120 , 10:2 , 10:76,77 , 11:7 , 20:57 , 20:63 , 20:66 , 20:69 , 20:71 , 21:3 , 26:35 , 26:153 , 26:185 ,27:13 , 28:36 , 28:48 , 34:43 , 37:15 , 38:4 , 40:24 , 43:30 , 46:7 , 51:39 , 51:52 , 52:15 , 54:2 , 61:6 , 74:25) ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தில் […]
பேஸ்புக் அறிமுகத்தால் சீரழிந்த பெண்கள்
பேஸ்புக் அறிமுகத்தால் சீரழிந்த பெண்கள் ஆண்ட்ராய்டு போன்களும் சமூக வலைதளங்களும் வந்தாலும் வந்தது, அதன்மூலம் அதிகமதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகத்தான் இருக்கின்றார்கள். சமூக வலைதளங்களின் பெருக்கத்தாலும் இணையப் பயன்பாடு அதிகரித்த காரணத்தாலும் ஒரு பக்கம் உலகம் மிக வேகமாகப் பயணம் செய்து வந்தாலும் மற்றொரு புறத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களால் அப்பாவி பெண்களுக்கு ஆசையைக் காட்டி அவர்களை தங்களின் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசப் […]
கலவரங்கள் + கொலைகள் = பாஜக
கலவரங்கள் + கொலைகள் = பாஜக பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை அமைதிப் பூங்காவான இந்தியாவில் ஏராளமான தாக்குதல்களும், கலவரங்களும், அத்துமீறல்களும் நடந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மதத்தின் பெயராலும், பசு பாதுகாப்பின் பெயராலும் ஏராளமான அத்துமீறல்கள், கலவரங்கள், படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் புள்ளி விவரத்துடன் அதிர்ச்சியான தகவல்களை தெரிவிக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்வதாக ஹேட் கிரைம் வாட்ச் (பிகிஜிணி சிஸிமிவிணி கீகிஜிசிபி) என்ற அமைப்பு ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. 2018 […]
இஸ்லாம் என்றாலே அமைதிதான்: சுஷ்மா பேச்சு
இஸ்லாம் என்றாலே அமைதிதான்: சுஷ்மா பேச்சு இஸ்லாம் குறித்து முஸ்லிம்கள் கூறுவதை விட முஸ்லிம் அல்லாதவர்கள் சொன்னால் அந்தக் கருத்து நல்ல முறையில் ரீச் ஆகும். அதுவும் இஸ்லாத்தினையும் இஸ்லாமியர்களையும் அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் குறித்து சிலாகித்துச் சொன்னால் அந்தக் கருத்து இன்னும் மக்கள் மத்தியில் மேலோங்கும். இந்தியாவில் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்று முழு மூச்சாய் பணியாற்றும் சங் பரிவார சக்திகள்., அரபு நாடுகளுக்குச் செல்லும் போது அப்படியே […]
ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் 120
ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் 120 புளும்பெரிக் என்ற அமைப்பு ஆரோக்கிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் ஸ்பெயினும், இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்தும், நான்காவது இடத்தில் ஜப்பானும், ஐந்தாவது இடத்தில் ஸ்விட்சர்லாந்த்தும் இடம் பிடித்துள்ளன. இந்தியாவின் அண்டை நாடான சீனா, 52-வது இடத்திலும் இலங்கை 66-வது இடத்திலும், வங்கதேசம் 91-வது இடத்திலும், நேபாளம் 110-வது இடத்திலும் வந்துள்ளன. இதில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? 120-வது இடமாகும். மோடி தூய்மை […]
ஜியாரத் என்றால் என்ன?
ஜியாரத் என்றால் என்ன? ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளைச் சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும்; மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச் சென்றுவர வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கப்ருகளை ஸியாரத் செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன. முதல்வகை: முஸ்லிம்களின் கப்ருகளை ஸியாரத் செய்வது முதல் வகை. மண்ணறைகளுக்குச் சென்று அங்கு அடக்கம் […]
புதுமனைப் புகுவிழா நடத்தலாமா?
புதுமனைப் புகுவிழா நடத்தலாமா? புதுமனைப் புகுவிழா கொண்டாடலாமா? கடன் வாங்கிக் கட்டியிருக்கும் வீட்டிற்கும் இது பொருந்துமா? விருந்தும் வைக்க வேண்டுமா? பதில் : புதுமனைப் புகுவிழா என்று மார்க்கத்தில் இல்லை. புதுமனைப் புகுவிழா என்ற பெயரில் பால் காய்ச்சுதல், மவ்லிது பாத்திஹா ஓதுதல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறுகின்றன. சில இடங்களில் சுப்ஹ் தொழுகையைப் புது வீட்டில் ஜமாஅத்தாக நிறைவேற்றும் வழக்கமும் உள்ளது. இவை பித்அத்களாகும். கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவர் புது வீடு கட்டி, […]
துன்பங்கள் நீங்க அனைவரும் நோன்பு நோற்கலாமா?
துன்பங்கள் நீங்க அனைவரும் நோன்பு நோற்கலாமா? எதிரிகளால், கொடியவர்களால் முஸ்லிம்கள் இன்னல்களை அனுபவிக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித்தந்துள்ளார்கள். அது தான் குனூத் நாஸிலா ஓதுதல் இது பற்றிய விபரத்தைக் கீழே உள்ள ஆக்கத்தில் காணலாம். குனூத் நாஸிலா தற்போது சிலர், சிரியா மக்களுக்காக நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தேதியில் நோன்பு வைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்துவருகின்றனர். நஃபிலான (உபரியான) வணக்க வழிபாடுகள் புரிந்து […]
ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்
ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல் எம்.ஐ. சுலைமான் ஹஜ் கடமையை தூய்மையான உள்ளத்துடன் நபிகளார் காட்டித்தந்த முறைப்படி நிறைவேற்றிவிட்டால் அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புவார் என்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. தூய்மையான இந்த வணக்கத்தை பலர் விளம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும் செய்வதை பார்க்க முடிகிறது. ஹஜ் பயணத்திற்கு முன்னால் விருந்தளித்தல், மாலை அணிதல், சுவரொட்டிகளில் விளம்பரம் செய்தல் என்று பல வகைகளில் விளம்பரம் செய்கின்றனர். இதன் மூலம் நன்மைகளை இழக்கிறார்கள். இன்னும் பல நூதனங்களையும் செய்கிறார்கள். […]
துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது.
மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனித வாழ்கையில் ஏற்படும் துன்பங்களை மனிதன் எவ்வாறு அணுக வேண்டும் என்று இஸ்லாம் மனிதனுக்கு ஏராளாமான போதனைகள் கூறுகிறது. அவற்றை இந்த உரையில் காண்போம். துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது இவ்வசனங்களில் (அல்குர்ஆன்: 2:124 , 2:155, 2:249, 3:152, 3:154, 3:186, 5:41, 5:48, 5:94, 6:53, 6:165, 7:163, […]
குலத்தால் பெருமையில்லை
குலத்தால் பெருமையில்லை يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க […]
மலட்டுக் காற்று
மலட்டுக் காற்று وَفِىْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيْحَ الْعَقِيْمَۚ مَا تَذَرُ مِنْ شَىْءٍ اَتَتْ عَلَيْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيْمِؕ இன்னும், “ஆது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக்காற்றை அனுப்பிய போது;அ(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை. (அல்குர்ஆன்: 51:41,42) இவ்விரண்டு (51:41,42) வசனத்தில் மலட்டுக் காற்றின் மூலம் ஒரு சமுதாயத்தை அழித்ததாகக் கூறப்பட்டுள்ளது. காற்றில் எப்படி மலட்டுத் தன்மை […]
நோன்பு நோற்பது நல்லது
நோன்பு நோற்பது நல்லது நோன்பு நோற்பது இஸ்லாமியக் கடமைகளில் ஒன்று என்று அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். இவ்வசனத்தில் (2:184) நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. நோன்பு நோற்பது மார்க்கக் கடமை மட்டுமல்ல. அது நல்லது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று இவ்வசனத்தில் கூறப்படுவதை இன்றைய மருத்துவ உலகம் மெய்ப்படுத்துகின்றது. பசி எடுக்கும் போது சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. பட்டிணி கிடப்பது உடலைப் பலவீனப்படுத்தி விடும் என்று தான் அதிகமான மக்கள் கருதுகிறார்கள். பொதுவாக […]
பிக் பாஸ் குடி கெடுக்கும் விஜய் தொ(ல்)லைக்க்காட்சி
பிக் பாஸ் குடி கெடுக்கும் விஜய் தொ(ல்)லைக்க்காட்சி விதவிதமாக நிகழ்ச்சிகளை நடத்தி நாட்டு மக்களை ஒழுக்கக்கேட்டின் உச்சிக்கு கொண்டு செல்வதையே தங்களது குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தனியார் தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடிப்பது விஜய் டிவிதான். ஒழுக்கம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் வகையில் சின்னஞ்சிறு பிஞ்சுகள் முதல் கிழவிகள் வரைக்கும் ஆபாசத்தில் மூழ்க வித்திடும் அசிங்கங்களை விதைப்பதுதான் விஜய் டிவியின் பிரதான நோக்கம். அந்த வகையில் ஜூனியர் சிங்கர் என்ற அசிங்க நிகழ்ச்சியின் மூலம் சிறுகுழந்தைகளை […]
உயிரைப் பணயம் வைத்து யாத்ரீகர்களைக் காப்பாற்றிய முஸ்லிம் ஓட்டுநர்
உயிரைப் பணயம் வைத்து யாத்ரீகர்களைக் காப்பாற்றிய முஸ்லிம் ஓட்டுநர் கடந்த வாரம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான அமர்நாத் யாத்ரீகர்களை தனி ஒரு நபராக இருந்து தனது உயிரைப் பணயம் வைத்து பாதுகாத்துள்ளார் சலீம் என்ற முஸ்லிம் பேருந்து ஓட்டுநர். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் 3,388 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. இந்த குகைக்கோவிலில் உள்ள பனி லிங்கத்தை வணங்குவதற்காக ஆண்டு தோறும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான […]