Tamil Bayan Points

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் இஸ்லாமிய அமைப்பா?

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 13, 2019 by

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் இஸ்லாமிய அமைப்பா?

 இலங்கையில் 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் மற்றும் தற்கொலைப் படைத்தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்தார்கள். ஐநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் நிரந்தர ஊனம் ஆகியுள்ளனர் என்கின்ற தகவல் உள்ளத்தை உருக்கி கண்களில் நீரைக் கசிய வைக்கின்றது..

இலங்கையில் நடைபெற்ற இந்த கொடூர குண்டுவெடிப்பிற்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் 50 மணி நேரங்கள் கழித்து ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. நியூஸிலாந்தில் மசூதிக்குள் வெள்ளிக்கிழமை ஜூமுஆ தொழுகை நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதறகாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் அறிக்கை கொடுத்துள்ளது.

ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாத இயக்கம்தான் இந்த மாபாதக குண்டு வெடிப்புச் செயலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ள நிலையில் உலக அளவில் இஸ்லாமியர்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் ஒருவிதமான சந்தேகப் பார்வை எழுந்து வருவதையும், இத்தனை நாளும் உறங்கிக் கிடந்த “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்னும் சொல் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுப்பி வருவதையும் காணமுடிகின்றது.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்தும் ஒவ்வொரு தாக்குதல் நெஞ்சை உறைய வைக்கும் வண்ணம் கொடூரமாக இருப்பதை மறுக்க முடியாது. பல ஊடகவியலாளர்களை, நடுநிலை மக்களை கடத்திச் சென்று அவர்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்யும் கொடூர செயல்கள் உலக அளவில் இஸ்லாத்தின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்றால் யார்?

முதலில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்றால் யார்? அவர்கள் இஸ்லாத்தினை வளர்ப்பதற்காக இஸ்லாமிய மக்களை காப்பாற்றுவதற்காகத்தான் இத்தனையையும் செய்கிறார்களா? என்பதை ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.ISIS என்ற வார்த்தையின் விரிவாக்கம் என்னவெனில் “ “ islamic state of iraq and syria” என்பதே இதன் பொருளாகும். ஆனால் அதன் உண்மையான விரிவாக்கம் அதுவல்ல! “ Israel State of Iraq and Syria” என்று சொல்வதே சாலப் பொருந்தும்.

ஐஎஸ் இயக்கத்தின் செயல்பாட்டினை அறிந்து கொண்டாலே அதன் சூட்சுமக் கயிறு எங்கிருந்து சுழல்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும். ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது அபுபக்கர் அல் பக்தாதி என்பவன் தலைமையில் இராக் மற்றும் சிரியாவைத் தலைநகராகக் கொண்டு உருவான இயக்கம்தான் இந்த ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம்.

இந்த இயக்கத்தின் குறிக்கோள், இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதும், இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்துக் களமிறங்குவது என்றும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் அறிவித்தது. ஆனால் நடந்ததோ வேறு. பல இஸ்லாமிய நாடுகளில் உள்நாட்டுக் குழப்பங்களை ஏற்படுத்தியது இந்த ஐஎஸ் பயங்கரவாத இயக்கம்.

உண்மையான இஸ்லாமியன் யாரும் அப்பாவி மக்களை அநியாயமாக கொலை செய்ய மாட்டான். ஆனால் இந்த பயங்கரவாத அமைப்பில் இருக்கும் பயங்கரவாதிகள் ஊடகவியலாளர்களைக் கடத்துவதும் பொதுமக்களை, பெண்களை, குழந்தைகளை கொடூரமாக படுகொலை செய்யும் வேலையை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விசயம்.

அமைதி மார்க்கம் என்று சொல்லும் இஸ்லாத்தில் இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அது இஸ்லாத்திற்கு நன்மையை சேர்க்குமா? அல்லது தீமையைச் செய்யுமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். கழுத்தறுப்புகளையும் குண்டு வெடிப்புகளையும் செய்யும் இவர்களின் செயல் இஸ்லாத்திற்கு அவப்பெயரையே ஏற்படுத்துகின்றதே தவிர இஸ்லாமிய மார்க்கத்திற்கு எவ்வகையிலும் பெருமை சேர்க்கவில்லை.

அப்படியானால் இந்த ஐஎஸ். பயங்கரவாதிகள் என்பவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்பது தெளிவாகின்றது. இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்களை இஸ்லாமியர்கள் என்று காட்டிக் கொண்டு வன்முறை வெறியாட்டங்கள் நடத்தும் இவர்கள் யாரும் இஸ்லாமியர்கள் அல்ல! மாறாக இஸ்லாத்திற்கு களங்கம் உண்டாக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் உதவியுடன் களமிறக்கப்பட்டுள்ள கூலிப்படை பயங்கரவாதிகள். இஸ்லாத்திற்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் துளியும் தொடர்பு இல்லை.

காரணம் இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கவில்லை. சகோதரத்துவத்தை நிலைநாட்டும்படி இஸ்லாம் கட்டளையிடுகின்றது. ஆனால் இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்டே களங்கம் விளைவிக்கும் இந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி நடுநிலை மக்களும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இவர்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும். ஐஎஸ் பயங்கரவாதிகள் கூண்டோடு அழிக்கப்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் விருப்பமாகும்.

யார் இந்த அபூபக்ர் அல்பக்தாதி?

உலகையே அச்சுறுத்தும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனின் பெயர் அபூபக்ர் அல்பக்தாதி கலீபா. இவன் ஒரு இஸ்லாமியன் அல்ல! பிறப்பால் யூத வம்சத்தின் பிறந்தவன். இவனது உண்மையான பெயர் ஷைமோன் எலியூட். இவன் இஸ்ரேலிய மொசாத் உளவு அமைப்பினால் பயிற்சி பெற்றவன். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தோற்றுவிப்பதற்கு முன்புவரை இவன் இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பின் ஒற்றனாக பணியாற்றி வந்தான்.

அதன்பிறகு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தயாரிப்பில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இஸ்லாமிய இயக்கம் என்ற பெயருடன் இஸ்லாத்திற்கு எதிரான வேலைகளை செய்யத் துவங்கியது இந்த பயங்கரவாத இயக்கம். இந்த இயக்கத்தின் தலைவனாக அபூபக்ர் அல்பக்தாதி என்ற பெயருடன் மொசாத் உளவாளி ஷைமன் எலியூட் களமிறப்பட்டான்.

இஸ்ரேலைத் தாக்காத ஐ.எஸ்.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இஸ்லாமியர்களை அதிகம் துன்புறுத்தும் கொன்று குவிக்கும் இரண்டு நாடுகள் யாதெனில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகும். இந்த இரண்டு நாட்டு ராணுவத்தினர் உலகம் முழுவதும் உள்ள அப்பாவி இஸ்லாமியர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து வருகின்றனர். இஸ்லாமிய நாடுகளின் எதிர்களைத் தாக்க வேண்டும் என்று ஒரு இஸ்லாமியன் விரும்பினால் அவன் முதலில் தாக்க வேண்டிய நாடுகள் அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டும்தான்.

ஆனால் இஸ்லாமிய பாதுகாப்பு இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இதுவரைக்கும் அமெரிக்காவிலோ இஸ்ரேலிலோ ஒரு பொட்டு வெடியைக் கூட வெடித்தது இல்லை. இஸ்ரேலிலோ அமெரிக்காவிலோ எதையும் செய்யாமல் அப்பாவி மக்களைக் குறிவைத்து இவர்கள் செய்யும் பயங்கரவாதச் செயல்கள் முழுக்க முழுக்க இஸ்லாத்தின் மீது வெறுப்பை உண்டாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதுமட்டுமின்றி ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாயகம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பதும் இதன்மூலம் உறுதியாகின்றது.

அமெரிக்காவின் நிதி உதவி ஐ.எஸ்

பயங்கரவாத இயக்கத்தினை அழிக்கப் போகிறோம் ஒழிக்கப் போகிறோம் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொள்கிறது அமெரிக்கா. ஆனால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு அமெரிக்கா நிதியைக் கொட்டிக் கொடுத்துள்ள தகவல் அவர்களின் இரட்டை வேடத்தைக் வெளிக்காட்டுகின்றது.

2014 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அதிபராக இருந்த பராக் ஒமாபா ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் செய்தியை தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்டு ட்ரம்ப் ஒரு நிகழ்ச்சியின் போது ஒப்புக் கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடும் கில்லாடி அமெரிக்கா மற்றும் பயங்கரவாதத்தின் தந்தை தேசமாகத் திகழும் இஸ்ரேல் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்புத்தான் ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் என்பது தெளிவாகின்றது. அப்பாவி மக்களை படுகொலை செய்து விட்டு “லாயிலாஹா இல்லல்லாஹ்” என்று பொறிக்கப்பட்ட கருப்புக் கொடியைத் தூக்கிக் காட்டும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பதே உண்மை.

இஸ்லாம் கூறும் போர் முறைகள்

இஸ்லாமிய மார்க்கம் போர் செய்வதற்கென்று சில வரைமுறைகளை வகுத்து வைத்துள்ளது. இஸ்லாமிய அரசாங்கமாக இருந்து போர் செய்தாலுமே எதிரி நாடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள், முதியவர்களைத் தாக்கக் கூடாது. எதிரி நாட்டவர்கள் வழிபடும் ஆலையங்களைத் தாக்கக் கூடாது. மத குருமார்களைக் கொல்லக் கூடாது என பலவிதமான கட்டுப்பாடுகளை வைத்துள்ளது.

ஆனால் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் அனைத்திலும் பெண்கள், குழந்தைகள் என பாரபட்சம் இல்லாமல் படுகொலை செய்யப்படுகின்றனர். இஸ்லாமிய நடைமுறையில் தற்கொலை செய்வதும் ஒரு மனிதரை அநியாயமாக படுகொலை செய்வதும் நிரந்தர நரகத்தில் தள்ளும் என்று இஸ்லாம் மார்க்கம் சொல்லும் நிலையில் அதற்கு மாற்றமாக பல அப்பாவி மக்களை படுகொலை செய்தும் தற்கொலை தாக்குதல்கள் நடத்தியும் வரும்

ஐ.எஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் யாருமே முஸ்லிம்கள் அல்ல என்பதும், ஒருவேளை அந்த இயக்கத்தில் யாரேனும் இஸ்லாமியர்கள் இணைந்திருந்தால் அவர்கள் இஸ்லாத்தினை விட்டு வெளியே போய் விட்டார்கள் என்பதுமே சரியான பார்வையாகும்.

Source:unarvu(03/05/2019)