Tamil Bayan Points

மத சுதந்திர பட்டியலில் ஆபத்தான இடத்தில் இந்தியா….!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 13, 2019 by

மத சுதந்திர பட்டியலில் ஆபத்தான இடத்தில் இந்தியா….!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையத்தின் 20- வது ஆண்டறிக்கையில் 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனம் தேவைப்படும் இரண்டாம் அடுக்கு பட்டியலில் ஆப்கானிஸ்தான், எகிப்து, இந்தோனேஷியா, இராக், கஜகஸ்தான், மலேசியா, துருக்கி உள்ளிட்ட 11 நாடுகளோடு 12வது நாடாக இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம்கள் ஒடுக்கப் படுவதாலேயே இந்தப் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பாவி முஸ்லிம்களை 3 ஆண்டுகள் சிறையில் தள்ளி கொடுமைப் படுத்துவதற்காகவே முத்தலாக் தடைச் சட்டம் என்ற பெயரில் மோடி அரசு சட்டம் கொண்டு வந்தது. முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறக் கூடாது என்பதற்காகவே மோடி அரசு குடியேற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களை தடுத்தது.

அசாமில் வாழும் இந்திய முஸ்லிம்களை வங்க தேசத்தவர் என்று கூறி, அவர்களை தடுப்புக் காவலில் சிறையில் அடைத்து, நாட்டை விட்டு வெளியேற்றத் துடிக்கிறது. இதே வகையில் இந்தியா முழுவதும் வாழும் முஸ்லிம்களை கொடுமைப் படுத்தும் நோக்கில் அசாமில் கொண்டு வரப்பட்டது போன்ற தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்தியா முழுவதும் கொண்டு வர துடிக்கிறது. என்.ஐ.ஏ. சி.பி.ஐ போன்ற புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி, அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியான பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரை சட்டத்தின் பிடியில் இருந்து விடுவித்து, அவரை போபால் மக்களவை தொகுதியில் வேட்பாளராகவும் பா.ஜ.க. நிறுத்தியுள்ளது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில்கள் குண்டுகளை வெடிக்கச் செய்தவர்களை காப்பாற்றி, பாகிஸ்தானில் உள்ள சாட்சிகளுக்கு மோடி அரசு விசா வழங்க மறுத்தது. கல்லூரி மாணவி இஸ்ரத்ஜஹான் உள்ளிட்டவர்களை போலி என்கவுண்டரில் சுட்டு கொலை செய்த காவல்துறை உயர்அதிகாரிகளை சி.பி.ஐ. விசாரிக்க கூட விடாமல் தடுத்தது ஆகியவை மோடி அரசின் முஸ்லிம் விரோதப் போக்குகளுக்கு சான்றாக உள்ளன.

முஸ்லிம் மக்கள் சிற்றிதழ்களை நடத்தக் கூடாது என்பதற்காக தபால் சலுகையை ரத்து செய்து, முழு அளவிலான ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும் என்று உத்தரவிட்டதும், முஸ்லிம் மக்களை ஒடுக்கும் நடவடிக்கையாகும். இப்படி முஸ்லிம்களுக்கு எதிரான அடுத்தடுத்த தாக்குதல்களின் காரணமாகவே உள்நாட்டு யுத்தம் நடக்கும் நாடுகளில் மதச் சுதந்திரம் பாதிக்கப் பட்ட அளவுக்கு இந்தியாவில் மதச் சுதந்திரம் பாதிக்கப் பட்டுள்ளது என அமெரிக்க ஆணையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Source:unarvu (17/05/2019)