
அனுமதிக்கப்பட்ட பொய்கள் நபியவர்கள் இரவுத் தொழுகைக்காக எழுந்திருக்கும் போது, ஆயிஷா (ரலி) அவர்கள் கண்விழித்தால் அவருடன் பேசிக் கொண்டிருப்பார்கள் என ஹதீஸ்களில் நாம் காண முடிகிறது. எனவே இது போன்று பரஸ்பரம் பேசிக் கொண்டிருப்பதும் கணவன் மனைவிக்குள்ள கடமை என்று விளங்குகிறது. வெறுமனே தாம்பத்யம் மட்டுமே இல்லறக் கடமை கிடையாது. மற்ற விஷயங்களிலும் மனைவிக்கு மகிழ்ச்சி அளிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்த பின்) […]