Tamil Bayan Points

சொர்க்கத்திற்குத் தவழ்ந்து செல்லும் நபித்தோழர்?

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on February 6, 2020 by

சொர்க்கத்திற்குத் தவழ்ந்து செல்லும் நபித்தோழர்?

مسند أحمد موافقا لثلاث طبعات – (6 / 115)

23698- حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ حَسَّانَ ، قَالَ : أَخْبَرَنَا عُمَارَةُ ، عَنْ ثَابِتٍ ، عَنْ أَنَسٍ ، قَالَ : بَيْنَمَا عَائِشَةُ فِي بَيْتِهَا إِذْ سَمِعَتْ صَوْتًا فِي الْمَدِينَةِ ، فَقَالَتْ : مَا هَذَا ؟ قَالُوا : عِيرٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَدِمَتْ مِنَ الشَّامِ تَحْمِلُ مِنْ كُلِّ شَيْءٍ ، قَالَ : فَكَانَتْ سَبْعَ مِئَةِ بَعِيرٍ ، قَالَ : فَارْتَجَّتِ الْمَدِينَةُ مِنَ الصَّوْتِ ، فَقَالَتْ عَائِشَةُ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : قَدْ رَأَيْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ يَدْخُلُ الْجَنَّةَ حَبْوًا ، فَبَلَغَ ذَلِكَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ ، فَقَالَ : إِنْ اسْتَطَعْتُ لأَدْخُلَنَّهَا قَائِمًا ، فَجَعَلَهَا بِأَقْتَابِهَا ، وَأَحْمَالِهَا فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ.

நாங்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருந்த போது மதீனாவில் (பெரும்) சப்தத்தைக் கேட்டோம். ‘இது என்ன சப்தம்?’ என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். ‘இது அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் ஒட்டங்களின் சப்தம், அனைத்து விதமான பொருட்களையும் ஏற்றிக் கொண்டு வந்துள்ளது’ என்று சொன்னார்கள். அவர்களுக்கு (அப்போது) எழுநூறு ஒட்டகங்கள் இருந்தன. அவற்றின் சப்தத்தால் மதீனா அதிர்ந்தது.

அப்போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், “நான் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்களை சொர்க்கத்தில் தவழ்ந்து செல்வதைப் பார்த்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்கள்.

இந்த செய்தி அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு எட்டிய போது, ‘நான் நின்றவாறு சொர்க்கத்தில் செல்வேன்’ என்று சொல்லிவிட்டு ஒட்டகச் சேணங்களையும் அவை சுமந்து வந்த பொருட்களையும் அல்லாஹ்வின் பாதையில் வழங்கிவிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: அஹ்மத் (23698), பஸ்ஸார் (6899), தப்ரானீ-கபீர் (267,5269)

பெரும் பணக்காரர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், அவரது செல்வத்தின் காரணத்தால் மறுமையில் தவழ்ந்து சொர்க்கம் செல்லும் நிலை ஏற்படும் என்று இச்செய்தி குறிப்பிடுகிறது.

இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசையில் குறையுள்ளது.

இந்தச் செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் உமாரா பின் ஸாதான் என்பவர் பலவீனமானவராவார்.

ميزان الاعتدال – (3 / 176)

قال البخاري: ربما يضطرب في حديثه.

சில நேரங்களில் இவர் குளறுபடியாக அறிவிப்பார் என்று புகாரி குறிப்பிடுகிறார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 3, பக்கம்:176

وقال أحمد: له مناكير.

இவரிடம் மறுக்கப்படவேண்டிய செய்திகள் உள்ளன என்று அஹ்மத் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 3, பக்கம்:176

وقال أبو حاتم: يكتب حديثه ولا يحتج به.

இவரது செய்திகளைப் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று அபூஹாத்திம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 3, பக்கம்:176

وقال الدارقطني: ضعيف.

இவர் பலவீனமானவர் என்று தாரகுத்னீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 3, பக்கம்:176

وقال أبو داود: ليس بذاك.

இவர் வலிமையானவர் இல்லை என்று அபூதாவுத் குறிப்பிடுகிறார்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 3, பக்கம்:176

எனவே இந்தச் செய்தி பலவீனமானதாக உள்ளது.

சொர்க்கத்தில் ஏழைகளுக்குப் பிறகே செல்வந்தவர்கள் செல்வார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன. தவழ்ந்து செல்வார்கள் என்பதற்குத்தான் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை.

“ஏழை முஹாஜிர்கள் மறுமை நாளில் செல்வந்தர்களை விட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்’

நூல்:  முஸ்லிம் 5699