இப்னு மஸ்ஊத் (ரலி) ஓதிய குர்ஆனில் நபி (ஸல்) கண்ணீர் வடித்த வசனம்

ஹதீஸ் சம்பவங்கள்

“நிறுத்துங்கள்” என்றார் நபி (ஸல்); அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீர் சொரிந்தன

«اقْرَأْ عَلَيَّ» قُلْتُ: آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ؟ قَالَ: «فَإِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي» فَقَرَأْتُ عَلَيْهِ سُورَةَ النِّسَاءِ، حَتَّى بَلَغْتُ: {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا} [النساء: 41] قَالَ: «أَمْسِكْ» فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘எனக்கு (குர்ஆனை) ஓதிக்காட்டுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்கு ‘அந்நிஸா’ அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். ‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!)

உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’ எனும் (அல்குர்ஆன்: 04:41)➚வது) வசனத்தை நான் அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘நிறுத்துங்கள்’ என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்கு ‘அந்நிஸா’ அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். ‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’

எனும் (அல்குர்ஆன்: 04:41)➚வது) வசனத்தை நான் அடைந்போது நபி(ஸல்) அவர்கள், ‘நிறுத்துங்கள்’ என்று கூறினார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)

நூல் – (புகாரி: 4582)

குர்ஆன் யாருக்கு அருளப்பட்டதோ, அவரே அதை மற்றொருவரிடமிருந்து கேட்க விரும்பினார்கள் — தாம் அருளப்பெற்றவர் என்ற நிலையிலும் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்த பணிவு இதில் தெரிகிறது. இப்னு மஸ்ஊத் (ரலி) ஓதிக்கொண்டே சென்று, ஒவ்வொரு சமுதாயத்தின் மீதும் சாட்சி நிறுத்தப்படும் வசனத்தை எட்டியதும், நபி (ஸல்) அவர்களால் மேலும் கேட்க முடியவில்லை; நிறுத்திவிடுமாறு சொல்லிவிட்டு கண்ணீர் விட்டார்கள்.

தம் சமுதாயத்திற்கு சாட்சியாக நிற்க வேண்டிய பொறுப்பு எத்தனை பாரமானது என்பதை நினைத்தே அந்தக் கண்ணீர் வந்திருக்க வேண்டும். சொர்க்கம் உறுதி செய்யப்பட்ட நபியே இப்படி கலங்கியிருக்கும்போது, நம் நிலை என்னவாக இருக்கும் என்று நாம் சிந்திக்க வேண்டும். குர்ஆனை அன்றாடம் ஓதுகிறோம் என்பதால் அதன் வார்த்தைகள் நம் உள்ளத்தைத் தொடாமல் போய்விடக் கூடாது.