Category: கொள்கை

b106

இஜ்மா மார்க்க ஆதாரமா?

“முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்பது போல குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்க ஆதாரம் எனும் பாதையை விட்டு ‘ஸஹாபாக்களும் மார்க்கத்தின் ஆதாரமே’ என்று தங்கள் கொள்கையில் சமரசம் செய்தவர்கள், இன்று இஜ்மாவும் மார்க்கத்தின் ஆதாரம் தான் என்று கூறி, தங்களை கொள்கை படிநிலையில் ஒவ்வொரு படியாக இறங்கிக் கொண்டிருக்கின்றனர் சில அமைப்பினர். ஸலஃபிய்யாக்கள் என்றும் மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜாக் அமைப்பினர், ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் – குர்ஆன் […]

ஷாகுல்ஹமீது மவ்லிது ஓர் ஆய்வு

தமிழக முஸ்லிம்களிலுள்ள மவ்லிது அபிமானிகளின் இதயத்தில் மூன்றாவது இடம் ஷாகுல் ஹமீது மவ்லிதுக்கு உள்ளது. நாகூரிலும் இலங்கையிலும் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகின்ற அப்துல் காதிர் எனும் ஷாகுல் ஹமீதைப் புகழ்ந்து எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்த மவ்லிதிலும் ஏராளமான அபத்தங்கள் உள்ளன. சுப்ஹான மவ்லிது, முஹ்யித்தீன் மவ்லிது போலவே இஸ்லாத்திற்கு முரணான ஏராளமான கருத்துக்கள் இந்த மவ்லிதிலும் காணப்படுகின்றன. இதிலுள்ள அபத்தங்களை அறியாமல் அப்பாவி முஸ்லிம்கள் இதை பக்திப் பரவசத்துடன் ஓதி வருகின்றனர். எனவே இந்த மவ்லிதையும் குர்ஆன், […]

பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாது என்று குர்ஆன் கூறுகிறதா?

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும், அவர்களைக் கண்ட இடத்தில் கொலை செய்ய இஸ்லாம் கட்டளையிட்டதாகவும் முஸ்லிமல்லாதவர்களில் சிலர் தவறாக நம்புகிறார்கள். திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட சில வசனங்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். இவர்கள் கருதுவது போல் திருக்குர்ஆன் கூறுகிறதா என்பதை […]

மவ்லித் ஓத ஆதாரம் உள்ளதா?

இப்னு ஹஜர் அல்ஹைதமியின் புனைசுருட்டுகள்! ரபியுல் அவ்வல்மாதம் வந்துவிட்டாலே நபிப் புகழ் பாடுகிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் ஒரே துலாத்தட்டில் நிகர்செய்யும் இழிவணக்கங்கள் முஸ்லிம்கள் சிலரால் வழிபடப்பட்டு வருவதை நாம் அறிவோம். குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இந்த மவ்லித் பாடல்களுக்கு மார்க்க சாயம் பூச முடியவில்லை என்றதும் இப்னு ஹஜர் அல்ஹைதமி என்பவர் எழுதிய “அந்நிஃமதுல் குப்ரா அலல் ஆலம்” எனும் நூலிலிருந்து நபித்தோழர்கள் பெயரிலும், ஏனைய இமாம்களின் பெயரிலும் […]

இறுதி மூச்சுவரை ஏகத்துவம்

அல்குர்ஆனில் இறைவன், முன்னர் வாழ்ந்த பல்வேறு நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளையும், அவர்கள் சந்தித்த பிரச்சனைகளையும், அவர்கள் அதனை எப்படி எதிர்கொண்டார்கள் என்ற விஷயங்களையும் சொல்லிக் காட்டுகிறான். இவ்வாறு முந்தைய நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளை அல்லாஹ் கூறுவதன் நோக்கம் அதிலருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்; நம்முடைய செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் அவர்களைப் போன்று ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாற்று நிகழ்ச்சியை குர்ஆனில் யூசுப் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் விரிவாக சொல்லிக் காட்டி […]

அடையாளம் காணப்பட்ட அசத்தியவாதிகள்

கொள்கை வேடமிட்டுக் கொண்டு கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய இயக்கங்கள் பல உண்டு. அத்தகைய நிலையில் தான் இன்றைய ஜாக் அமைப்பின் செயல்பாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் கொள்கைப் பிரச்சாரத்திற்காக சத்தியப் பிரச்சாரகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து பாடுபட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இன்று சறுகல் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஜாக் என்ற அமைப்பு! இந்த இயக்க நிர்வாகிகளால் சத்தியப் பிரச்சாரத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! வெளியில் நல்லவர்களைப் போன்றும் அப்பாவிகளைப் போன்றும் காட்சி தரும் இவர்களின் பின்புற […]

ஆட்சியை முன்னிலைப்படுத்தும் இயக்கங்கள் ஒர் பார்வை

ஜமாஅதே இஸ்லாமி பற்றி தங்கள் கருத்து என்ன? தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு இயக்கத்தினரும் தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாகத் தான் சொல்வார்கள். அப்படிச் சொல்லாவிட்டால் அந்த இயக்கம் செத்து விடும். ஆனால் நேர்வழியில் இருப்பதாக ஒரு இயக்கம் சொல்லிக் கொள்வதால் மட்டும் அது நேர்வழியில் இருப்பதாக ஆகாது. குர்ஆனுக்கும் நபிவழிக்கும் உட்பட்டும் குர்ஆன் ஹதீஸுடன் மோதாமலும் அதன் கொள்கை கோட்பாடுகள் அமைந்திருந்தால் மட்டுமே அது நேர்வழியில் இருப்பதாக ஆகும். அபுல் அஃலா மவ்தூதி என்பவர் ஜமாஅத்தே இஸ்லாமீ இயக்கத்தை நிறுவினார். இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதே இந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு இந்தக் கொள்கை இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களால் […]

ஏன் என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை

நம் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் துவங்கிய காலம் முதல் இன்று வரை ஆல விருட்சமாக வேர் விட்டு வானோங்கி வளர்ந்து வருகிறது. அது போல் ஏகத்துவத்திற்கு எதிரான சக்திகளும் அவ்வப்போது உதயமாகி, வளர்ந்து, வாடிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஏகத்துவக் கொள்கை மிக வீரியமாக மக்கள் மத்தியில் வேரூன்றியதற்குக் காரணம் இறையுதவிக்கு அடுத்தபடியாக இஸ்லாம் தொடர்பாக மக்களின் சிந்தனை தூண்டப்பட்டது தான். மார்க்கத்தின் ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும் இறையச்சம் உடையவர்கள் இறைவழி நடப்பதற்காகக் கேட்ட கேள்விகளும், […]

வல்லவன் வானத்தில் இருக்கிறான்

இப்படி ஓர் அழகிய உருவமிக்க அல்லாஹ் எங்கே இருக்கிறான்? வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதைப் அறிந்து கொள்வீர்கள். (அல்குர்ஆன்: 67:16-17) ➚ (முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் […]

ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு – 2

ஹதீஸ் என்ற பெயரில் யாரும் எதையும் சொல்லி விட்டுப் போய்க் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய், இந்தச் செய்தி எந்த நூலில் வருகின்றது? எந்த பாகத்தில் வருகின்றது? ஹதீஸ் எண் என்ன? அறிவிப்பாளர் யார்? என்றெல்லாம் மக்கள் கேள்வி கேக்கும் நிலை தவ்ஹீத் புரட்சியினால் உருவானது. இந்த ஹதீஸ் புரட்சிக்கு வித்திட்டது தவ்ஹீது ஜமாஅத் தான் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதை தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். அமலுக்கு வந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்! தவ்ஹீத் […]

ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு-1

ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு-1 எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான். அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியே தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 53:3-4) ➚ குர்ஆனும் வஹ்யிதான்! ஹதீசும் வஹ்யிதான்! ஒரு சில ஹதீஸ்களை, ஹதீஸ் குதுஸீ என்று ஹதீஸ் கலையில் வகைப்படுத்துகின்றனர். இவ்வாறு வகைப்படுத்தப்படுவதற்குக் காரணம், இந்த வகை ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் சொன்னதாகச் சொல்வார்கள். இதை வைத்து ஹதீஸ் குதுஸீ – புனித ஹதீஸ் என்று குறிப்பிடுவார்கள். […]

இணைவைப்பிற்கு மன்னிப்பு உண்டா? – ஆய்வுக் கட்டுரை

இணைவைப்பிற்கு மன்னிப்பு உண்டா? அல்லாஹ்வுக்கு இணைவைப்பது மாபெரும் குற்றம் என்பதிலும் இணைவைத்த நிலையில் மரணித்தோருக்கு அவர்கள் தவ்பா செய்யாமல் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பதிலும் முஸ்லிம்கள் மத்தியில் எந்த வித கருத்து வேறுபாடுமில்லை. தர்கா வழிபாடு செய்பவர்கள் கூட இதில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்கின்ற காரியங்கள் இணைவைப்பு என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்களே தவிர இணைவைப்பிற்கு மன்னிப்பில்லை என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டே உள்ளார்கள். ஆனால் ஒருசிலர் இணைவைப்பையும் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்கிறார்கள். […]

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று இறைச்செய்தி மட்டுமே இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரம். அதன் இரு பகுதிகளாக இருக்கும் குர்ஆனையும் நபிமொழி களையும் முறையாக முழுமையாகப் பின்பற்றும் போதுதான், ஈருலகிலும் வெற்றி பெற முடியும். இதன்படி நாம் வாழும்போது, நமக்கு பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகள் வரும். இதை ஏற்றுக் கொள்ளாத நபர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும். நம்மை எதிர்த்து நிற்பவர்களின் பட்டியலில் பெற்றோர், நண்பர்கள், சொந்தபந்தங்கள், அண்டை வீட்டார் என்பதற்கும் மேலாக, சில நேரங்களில் ஒட்டுமொத்த ஊரே […]

படைத்தவன் ஏற்படுத்தும் பாதிப்பும் படைப்பினங்களால் ஏற்படும் பாதிப்பும்

படைத்தவன் ஏற்படுத்தும் பாதிப்பும் படைப்பினங்களால் ஏற்படும் பாதிப்பும் அல்லாஹ் ஒருவன்தான் உண்மை யான கடவுள். அல்லாஹ்வைத் தவிர உண்மையான கடவுள் வேறு யாரும் கிடையாது என்பதற்குத் திருமறைக் குர்ஆன் எடுத்து வைக்கும் முதன்மையான ஆதாரங்களில் ஒன்று “அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் கற்பனைக் கடவுள்களால் நன்மையும் செய்ய முடியாது, தீமையும் செய்ய முடியாது” என்பதாகும். இதனை திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் எடுத்துரைக்கிறது. “அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?” என்று கேட் பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன் (அல்குர்ஆன்: […]

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம்

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம் இறைவனால் மன்னிப்பு வழங்கப் படாத குற்றம் உலகில் உண்டென்றால் அது இணைவைப்பாகும். அல்லாஹ்வுடைய இடத்தில் வேறு யாரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அதை அல்லாஹ் அறவே வெறுக்கின்றான். மனிதர்கள் இறைவனுக்குச் சமமாக யாரையும் கருதுவதை அல்லாஹ் விரும்பவில்லை. மாறாகக் கடும் கோபம் கொள்கின்றான். ஆகையால் தான் இணை வைப்பிலேயே மரணித்தவர்களுக்கு இறைவன் நிரந்தர நரகைப் பரிசாக அளிக்கின்றான். இணைவைப்பை இல்லாதாக்கு வோம் என முழக்கத்துடன் தனது பயணத்தைத் துவக்கிய ஏகத்துவம் […]

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

அறிந்து கொள்வதன் அவசியம் இன்றைக்கு இஸ்லாமியர்கள் பல அமைப்பினராகவும், பல்வேறு கொள்கையினராகவும் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும், கொள்கையினரும் தாங்கள் செல்லும் வழியே மேலானது எனவும் போதிக்கின்றனர். ஆனால் குர்ஆனும், நபி வழியும் எதனை மேலானது என்றும், எது இம்மையிலும், மறுமையிலும் நமக்குப் பலன் தரக்கூடியது என்றும் வலியுறுத்துகிறதோ அதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் எதனை முதன் முதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் மூலம் நாம் காண்போம். இதோ அல்லாஹ் கூறுகிறான். […]

இணைவைப்பே தீமைகளின் தாய்!

இணைவைப்பே தீமைகளின் தாய்! ஒரே ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான். அவன் எந்தவொரு தேவையும் அற்றவன்; எந்தப் பலவீனமும் இல்லாதவன். அவனே அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன். அவனுக்கு ஒப்பாகவோ, இணையாகவோ எதுவுமில்லை; எவருமில்லை. இவை கடவுளுக்குரிய முக்கிய இலக்கணமாக இஸ்லாம் கூறுகிறது. இத்தகைய ஏக இறைவனிடமிருந்து மனிதகுலத்திற்கு வழங்கப்பட்டதே இஸ்லாம் மார்க்கம். இதன் கொள்கை கோட்பாடுகளும், சட்ட திட்டங்களுமே மனித சமுதாயத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உகந்தவை. இதற்கு மாறாக, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக நம்பும் […]

ஸலபுகளை குறைகூறுவோரிடம் கல்வி கற்கக் கூடாதா?

ஸலபுகளை குறைகூறுவோரிடம் கல்வி கற்கக் கூடாதா? ஸலபுகளை யார் திட்டுகிறானோ அவனிடமிருந்து கல்வியைக் கற்காதீர்கள் என்று முஸ்லிம் இமாம் கூறியதாக ஒரு செய்தியைப் பரப்புகிறார்கள். இதன் உண்மைத் தன்மை என்ன? ஸலபுகள் எனும் வழிகேடர்கள் இது போன்ற செய்திகளைப் பரப்பி மக்களைத் தக்க வைக்க முயல்கிறார்கள். குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாகவும்,  குர்ஆன் ஹதீஸில் இல்லாதவைகளையும் மார்க்கம் என்றும் சலபுகள் பத்வா கொடுத்து வந்தார்கள். அவர்கள் சொல்வதை அப்பாவிகள் நம்பி வந்தனர். அவர்களின் பத்வாக்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரமில்லை […]

கேரளாவில் இருக்கும் முஜாஹிதீன்கள் யார்?

கேரளாவில் உள்ள முஜாஹித் என்ற ஜமாஅத்தைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? கேரளாவில் முஜாஹிதீன்கள் என்ற பெயரில் ஒரு ஜமாஅத்தினர் இயங்கி வருகிறார்கள். இவர்கள் தர்ஹா, மவ்லூத் போன்ற இணை வைப்புக்காரியங்களையும் கத்தம் பாத்திஹா போன்ற சில பித்அத்களையும் நம்மைப் போன்று எதிர்க்கின்றனர். இதனால் இவர்கள் கொள்கை விஷயங்கள் அனைத்திலும் நம்மைப் போன்றவர்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இவர்கள் ஷிர்க் பித்அத் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட சில அனாச்சாரங்களை எதிர்த்தாலும் அதே அடிப்படையிலான வேறு பல […]

பணம் கொட்டும் கடவுள் தொழில்

பணம் கொட்டும் கடவுள் தொழில் பொருள் முதலீடு இல்லாமல் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டுமா? அதுவும் கொள்ளை லாபம் தருகின்ற, கோடிக்கணக்கில் பணம் கொட்டுகின்ற தொழில் வேண்டுமா? அது மூடத்தனத்தை மூலதனமாகக் கொண்ட கடவுள் தொழில் தான். பொதுவாக முதலீடு செய்து நடத்தப்படும் தொழில்களில் லாபமும் ஏற்படும்; நஷ்டமும் ஏற்படும். சாய்பாபா செய்த இந்தக் கடவுள் தொழிலில் கிடைத்த லாபம் 40,000 கோடி (நாற்பதாயிரம் கோடி) ரூபாய். உலகெங்கும் உள்ள மூன்று கோடி “பக்தர்கள்’ இந்த […]

சாகாதவனே சத்தியக் கடவுள்

கடவுள் என்றால் யார்? இறை வேதமான திருக்குர்ஆன் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ (2) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ (4) “அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112வது அத்தியாயம்) இந்த அத்தியாயத்தின்படி கடவுள் என்பவன் யாருடைய பெற்றோராகவோ அல்லது யாருக்கும் பிறந்த பிள்ளையாகவோ இருக்கக் […]

தப்லீக் ஜமாஅத் ஒரு பார்வை

தப்லீக் ஜமாஅத்தினர் சில நன்மையான காரியங்களை சிறப்பான முறையில் செய்து வருவதை யாரும் மறுக்க இயலாது. மக்களை தொழுகைக்கு அழைப்பது, அதிகமான வணக்கங்கள் புரிவது, பாவம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது, சில மார்க்க விஷயங்களில் பிடிப்பாகவும் பேணுதலாகவும் இருப்பது இது போன்ற நல்ல விஷயங்களை இவர்களிடம் காண முடிகிறது. இவ்விஷயத்தில் இவர்களை நாம் பாராட்டவே செய்கிறோம். இவர்கள் புரியும் இந்த நன்மையான காரியங்களை மட்டும் சிலர் கவனத்தில் கொண்டு […]

இஸ்லாத்தின் பார்வையில் மத குருமார்கள்

இஸ்லாத்தின் பார்வையில் மத குருமார்கள் மனிதன், மனிதனை அடிமைப்படுத்தும் அநியாயத்திற்கு எதிராகப் பூத்த மார்க்கம் தான் இஸ்லாம். மனிதன், தன்னைப் போன்ற இன்னொரு மனிதனைக் கடவுளாக நினைக்கும் அறியாமையை ஒழிக்கப் புறப்பட்ட ஒரு வாழ்க்கை நெறி தான் இஸ்லாம். உலகில் ஒரு மனிதன், சக மனிதனை அடிமைப்படுத்துவதற்கான பல்வேறு காரணங்களை நாம் காணலாம். ஆட்சி அதிகாரம் தலைமுறை தலைமுறையாகவோ அல்லது தேர்தல் முறை மூலமாகவோ ஒருவனுக்கு ஆட்சியதிகாரம் கிடைக்கின்றது. அவ்வாறு அவன் ஆளத் துவங்குகின்ற போது மக்கள் […]

ஸலபிகளிடம் சில கேள்விகள்

வழிகெட்ட ஸலபிக் கொள்கை குழப்பவாதிகளிடம் சில கேள்விகள் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்கள் பாடுபட்டு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய இஸ்லாத்தை மக்களுக்கு வாழ்க்கை நெறியாக விட்டுச் சென்றுள்ளார்கள். இறைவனுடைய இந்த மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் அருமைத் தோழர்களும் பெரும்பெரும் தியாகங்களைச் செய்தார்கள். குர்ஆனும் நபிமொழிகளும் மட்டுமே மார்க்கம். இந்த இரண்டும் அல்லாத வேறெதுவும் மார்க்கமில்லை என்று குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன. எனவே மனிதர்களின் சுய […]

கல்விக் கடலா கஸ்ஸாலி?

“வானத்தின் ரட்சகா! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்தப் புதியவனின் உள்ளத்தை ஒளிரச் செய்!” காலை மாலையில் நடைபெறும் மக்தபுகள் முதல், பட்டமளிப்பு விழா நடக்கும் பெரிய மதரஸாக்களின் மாணவர்கள் வரை ஒரு பிரார்த்தனையாகப் பாடுகின்ற பாடல் வரிகள் தான் இவை. அறிவுக் கடல், கல்விக் கடல் என்று இந்த ஆலிம்களால் மெச்சப்படுகின்றவர் கஸ்ஸாலி!  இவர் கல்விக் கடலா? என்பதைக் கீழ்க்காணும் அவரது நூற்களில் இடம் பெறும் பதிவுகளைப் பார்த்து முடிவு செய்வோம். […]

பரேலவிசத்தின் பயங்கரவாதம்

பரேலவிசத்தின் பயங்கரவாதம் இறைத்தூதர் இறக்கவில்லையாம் அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் ஒரு பரேலவியாவார். மக்கள் பரேலவிசத்திலிருந்து படிப்படியாக விலகி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சரியான பாதைக்கு, சத்திய வழிக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை சமாதி வழிபாட்டிலும் அசத்திய வழிகேட்டிலும் கொண்டு போய் தள்ளி விடுவதற்கு சகலவிதமான தகிடுதத்தங்களை, தப்பர்த்தங்களைச் செய்து கொண்டிருப்பவர் தான் இந்த அப்துல்லாஹ் ஜமாலி. அவர் பரேலவிச பரிவாரத்தின் பல கடவுள் கொள்கை கொண்ட ஒரு பத்திரிகையில், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை; உயிருடன் […]

பெரும்பான்மையை பின்பற்றும் ஜாக்

உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் வந்தாலும் அதை ஏற்க வேண்டும் என்று கூறும் இவர்கள் இக்கருத்தினை நிலைநாட்ட தகுந்த ஆதாரங்களை முன் வைக்கவில்லை. ஆதாரம் என்ற பெயரில் அவர்கள் முன்வைத்தவற்றைப் பார்வையிடும் யாரும் ஜாக் அமைப்பு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் அமைப்பு அல்ல. மாறாக மனோ இச்சைகளைப் பின்பற்றும் அமைப்பு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்வர். ஆதாரம்: 1 உலகத்தில் எந்தப் பகுதியில் பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்பது உலக அளவில் பரவலாக முஸ்லிம்களிடம் […]

சிலை வழிபாடு! சீரழிக்கும் வழிகேடு!

உலகம் முழுவதிலும் இருந்து மக்காவை நோக்கி ஹஜ் செய்வதற்காக மக்கள் சென்று கொண்டிருக்கின்ற ஹஜ் காலம்! இந்த ஹஜ் காலம், உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுடைய, குறிப்பாக ஹஜ் செய்கின்ற முஸ்லிம்களுடைய மனக்கண் முன்னால் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது. சிலை வணக்கத்திற்கு எதிராக அந்தச் சிந்தனைவாதி நடத்திய யுத்தம், அதற்காக அவர்கள் சந்தித்த தீக்குண்டம், அதற்காக அவர்கள் செய்த ஹிஜ்ரத் எனும் நாடு துறத்தல் போன்ற அவர்களின் தியாகங்கள் மனக்குதிரைகளில் திரும்பத் […]

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்-2

மார்க்கச் சட்டங்களை எடுத்துக் கூறும் பல குர்ஆன் வசனங்களை சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் மறுக்கின்றார்கள், மக்களிடம் அவற்றை எடுத்துச் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்பதை கடந்த தொகுப்பில் பார்த்தோம்.  இஸ்லாமியக் கொள்கை  மற்றும் இறைவனின் பண்பு குறித்து இன்னும் பல குர்ஆன் வசனங்களை நேரடியாக இந்த ஆலிம்கள் கூட்டம் மறுக்கின்றது. அத்தகைய குர்ஆன் வசனங்கள் என்ன கொள்கையை, நிலைப்பாட்டை போதிக்கின்றதோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுகளை எடுத்து அதனையே மக்களிடையே பிரச்சாரம் செய்கிறது இந்த உலமா (?) கூட்டம். […]

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்-1

அருள்மிகு ரமலான் மாதம் , அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்பதன் மூலம் மக்கள் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர்.  இது உலகம் முழுவதும் இறைவன் செய்திருக்கின்ற சிறந்த ஏற்பாடாகும். இன்னும் சொல்லப்போனால் ஒரு மாத காலம் அல்லாஹ் நடத்துகின்ற அகில உலக திருக்குர்ஆன் மாநாடாகும். அப்படிப்பட்ட திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் மார்க்கத்தின் காவலர்கள், மாநபியின் வாரிசுகள், அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் என்று பறை சாற்றுகின்ற, ஆலிம்கள் என்று மார்தட்டுகின்ற இந்த மவ்லானா மவ்லவிகள் குர்ஆனுக்கு நேர் […]

வஹீ மட்டுமே வழிபாடு! வஹீ அல்லாதது வழிகேடு!

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தப் பூமிக்கு அனுப்பியதும் அவர்களுடன் மொத்த மனித சமுதாயமும் சேர்ந்தே பூமியில் இறங்கியது. அப்போது அவர்களுக்கு அருளிய கட்டளை இதோ: “இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்று வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்” என்று கூறினோம். (அல்குர்ஆன்: 2:38) ➚ இதை அல்லாஹ் இன்னும் தெளிவுபடுத்தும் விதமாகப் பின்வரும் வசனத்தில் தெரிவிக்கின்றான். ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் […]

அல்ஹதீஸும் அல்லாஹ்வின் வஹீயே!

இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாகத் திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன. இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை நாம் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம். “திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல ஆதாரமே போதும்;  நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் தேவையில்லை’ என்று கூறுவோர் வழிகேடர்கள் என்பதே இஸ்லாம் கூறும் நெறிமுறை.  குர்ஆன் மட்டுமே இறைவனுடைய புறத்திலிருந்து வழங்கப்பட்ட வஹி – இறைச் செய்தி.  ஹதீஸ்கள் என்பது […]

ஹதீஸ்களை மறுப்பது மத்ஹபுவாதிகளே!

குர்ஆன், ஹதீஸ் தான் இஸ்லாத்தின் அடிப்படை! இரண்டில் எந்த ஒன்றை ஏற்று, மற்றொன்றை மறுத்தாலும் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறிவிடுவான். இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன்: 59:7) ➚ நபிகள் நாயகம் ஒன்றைச் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதே ஒரு முஸ்லிமின் கடமை. நபிகள் நாயகம் சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று […]

அல்லாஹ்வின் தூதரே  அழகிய முன்மாதிரி

“எனது நாற்பதாண்டு கால வாழ்க்கையைப் பார்த்து விட்டு என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை எவரும் கூறவே முடியாது. இப்போது நான் சொல்வதை மட்டும் பாருங்கள்! கடந்த காலத்தைப் பார்க்காதீர்கள் என்று தான் எந்தத் தலைவரும் சொல்வார்கள். இவர் நிச்சயம் பொய் சொல்ல மாட்டார் என்றும், இவருக்கு இதைச் சொல்வதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்க முடியாது என்றும் நம்பியதால் தான் அம்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பின்பற்றும் மக்களாக ஆனார்கள். […]

காதியானிகள் வரலாறு-5

யூசுஃப் நபிக்குப் பிறகு இறைத்தூதர்கள் இல்லையா? காதியானிகளின் வாதம் முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்’’ எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித்தான் வழிகெடுக்கிறான். (அல்குர்ஆன்: 40:34) ➚ இவ்வசனத்தில் யூஸுஃப் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்’’ […]

காதியானிகள் வரலாறு- 4

மிர்ஸா குலாம் நபியா? திருக்குர்ஆனில் இறைத்தூதர்களைக் குறிக்க இரண்டு விதமான சொற்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று நபி, இரண்டு ரசூல். இந்த இரண்டு சொற்களுக்கும் இருவேறு கருத்துக்களைக் கொடுத்து, தான் நபி என்று மிர்சா குலாம் வாதிடுகின்றான். இது எந்த வகையில் தவறானது என்று கடந்த இதழில் தெளிவுபடுத்தி இருந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் நபிமார்கள் வரலாம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் முக்கியமான வாதம் இதுதான், “உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் […]

காதியானிகள் யார் – 3

மிர்சா குலாம் நபியா? மிர்சா குலாமின் முக்கியமான வாதம், தன்னை இறைத்தூதர் என்று வாதிட்டது! தான் இறைத்தூதர் என்பதற்குச் சில முறையற்ற வாதங்களை அவன் எடுத்து வைக்கின்றான். அவற்றின் உண்மை நிலை என்ன? என்பதை இந்தத் தொடரில் நாம் அறிந்து கொள்வோம். திருக்குர்ஆனில் இறைத்தூதர்களைக் குறிக்க இரண்டுவிதமான சொற் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று நபி, இரண்டு ரசூல். இந்த இரண்டு சொற்களுக்கும் இருவேறு கருத்துக்களைக் கொடுத்து, தான் நபி என்று மிர்சா குலாம் வாதிடுகின்றான். நபி என்பதற்கு […]

காதியானிகள் யார்?-2

காதியானிகள் யார்? முஹம்மது நபி (ஸல்) அவர்களே இறைத்தூதர்களில் இறுதியானவர் என்பது பற்றித் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறும் செய்திகளைக் கடந்த தொடரில் பார்த்தோம்.  இனி போலி இறைத்தூதர்கள் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ள முன்னறிவிப்புக்கள் சிலவற்றைப் பார்ப்போம். பொய்யான இறைத் தூதர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னுடைய உம்மத்திலிருந்து சில கோத்திரங்கள் இணை வைப்பாளர்களோடு இணைந்து சிலைகளை வணங்கும் வரை கியாமத் நாள் ஏற்படாது. என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் […]

காதியானிகள் யார்?1

காதியானிகள் யார்? நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு ஏராளமான பொய்யர்கள் உருவானார்கள். அவர்கள் இஸ்லாத்தையும் அதன் கொள்கைகளையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் வந்தவர்கள் தான் காதியானிகள். நபிகளாருக்குப் பிறகு நானும் நபியே என்று வாதிட்ட பொய்யன் மிர்சா குலாம் அஹ்மத் என்பவனை நபியாக ஏற்றவர்கள் காதியானிகள். காதியானி என்பது பஞ்சாபில் உள்ள ஒரு ஊரின் பெயராகும். மிர்சா என்ற இவன் இந்த ஊரைச் சார்ந்தவன் என்பதால் இவனுடைய கொள்கை காதியானி (காதியான் என்ற […]

கப்ருகளின் மேல் கட்டப்பட்டுள்ளதா கஃபா ஆலயம்? 

கப்ருகளின் மேல் கட்டப்பட்டுள்ளதா கஃபா ஆலயம்?  கப்ரு வணங்கிகளின் கயமைத்தனம் தர்கா வழிபாட்டை ஆதரிக்கும் வழிகெட்ட கூட்டத்தினருக்குக் குர்ஆன் என்றாலே ஆகாது. ஹதீஸ் என்றால் என்னவென்றே தெரியாது. இவர்களின் சன்மார்க்க (?) பிரச்சார ஏடுகளில் குர்ஆனையோ, ஹதீஸ் களையோ அதிகம் குறிப்பிட மாட்டார்கள். தங்களது மனோ இச்சையை நியாயப்படுத்தும் படி யாரேனும் சில கருத்துக்களைக் கூறியிருந்தால் அதைத் தேடி எடுத்து பக்கங்களை நிரப்பி விடுவார்கள். இக்குறைமதியாளர்கள் எதை ஹதீஸ் என்று கருதுகிறார்களோ அதை நபியின் பெயரால் எடுத்தெழுதி […]

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

இறந்தவர்கள் செவியேற்பார்களா? மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது; அவர்கள் எதையும் அறிய மாட்டார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கின்றோம். முஸ்லிம்களின் நம்பிக்கைப் பிரகாரம் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை. இறைவனால் வானத்தின் பால் உயர்த்தப்பட்டார்கள் என்று அறிந்து வைத்திருக்கின்றோம். கடைசிக் காலத்தில் இந்தப் பூமிக்குத் திரும்பவும் வந்து சில காலம் வாழ்ந்து தான் மரணிப்பார்கள். அப்படிப்பட்ட, தற்போது வரை உயிரோடு இருக்கின்ற ஈஸா நபியவர்கள், தற்போது நாம் செய்யக்கூடியதை அறிகிறார் என்று […]

தூதரின் பக்கம் திரும்புவோம்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். எந்தவொரு செய்தியாக இருந்தாலும் எல்லோரும் அதை ஒரே விதமாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். சிலர் விளங்கிக் கொள்வதில் கூடுதல் குறைவு இருக்கும். சிலர் சரியாகப் புரிந்து கொள்வார்கள்; சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். இதனால்தான், எது குறித்துக் கேட்டாலும், பார்த்தாலும் மக்களிடையே பல்வேறு விதமான கருத்துகள் […]

இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம்

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். வஹீ எனும் அரபிச் சொல்லுக்கு இறைச்செய்தி எனும் பொருள். அதாவது இறைவனிடமிருந்து இறைத்தூதருக்கு அறிவிக்கப்படுவதே வஹீ ஆகும். வஹியை மட்டும் தான் இறைத்தூதர் மக்களுக்கு போதிக்க வேண்டும், வஹீ மட்டும் தான் மார்க்கமாகும். வஹீ அல்லாதது வழிகேடு ஆகும். இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம் எனும் தலைப்பின் கீழாக சில செய்திகளை […]

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவனால் மன்னிப்பு வழங்கப்படாத குற்றம் உலகில் உண்டென்றால் அது இணைவைப்பாகும். அல்லாஹ்வுடைய இடத்தில் வேறு யாரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அதை அல்லாஹ் அறவே வெறுக்கின்றான். மனிதர்கள் இறைவனுக்குச் சமமாக யாரையும் கருதுவதை அல்லாஹ் விரும்பவில்லை. மாறாகக் கடும் கோபம் கொள்கின்றான். ஆகையால் தான் இணை வைப்பிலேயே மரணித்தவர்களுக்கு […]

மகான்களின் பொருட்டால் வஸீலா தேடுவது இணைவைப்பே!

மகான்களின் பொருட்டால் வஸீலா தேடுவது இணைவைப்பே! வஸீலா என்றால் என்ன? எதன் மூலம் மற்றொன்றின் பக்கம் நெருக்கமாக்கிக் கொள்ளப்படுமோ அதற்கு அரபியில் வஸீலா என்று கூறப்படும். அதாவது தமிழில் “துணைச் சாதனம்” என்று கூறலாம். கடலில் பயணம் செய்வதற்கு கப்பல் வஸீலாவாக அதாவது துணைச் சாதனமாக உள்ளது என்று கூறுவர். நல்லமல்களே இறைநெருக்கம் தரும் வஸீலா நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! […]

மக்கா காஃபிர்களும் தமிழக முஸ்லிம்களும் – ஒரு கொள்கை ஒப்பீடு

மக்கா காஃபிர்களும் தமிழக முஸ்லிம்களும் – ஒரு கொள்கை ஒப்பீடு லா இலாஹ இல்லல்லாஹ் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை இதுதான் இஸ்லாத்தின் கொள்கை முழக்க மந்திரமாகும். இதை சமரசமின்றி ஏற்றுக் கொள்பவர்களும், அதன்படி செயலாற்றுபவர்களுமே முஸ்லிம்கள் எனப்படுவர். குர்ஆன் எந்த மக்களை காஃபிர்கள் என்று அழைக்கின்றதோ அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள முக்கியக் கொள்கை வேறுபாடே இதை ஏற்றுக் கொள்வதில் தான் உள்ளது. “அல்லாஹ்வும் ஒரு இறைவன்’ எனும் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் முஸ்லிம்களாகி விட முடியாது. […]

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம் இன்றைக்கு இஸ்லாமியர்கள் பல அமைப்பினராகவும், பல்வேறு கொள்கையினராகவும் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும், கொள்கையினரும் தாங்கள் செல்லும் வழியே மேலானது எனவும் போதிக்கின்றனர். ஆனால் குர்ஆனும், நபி வழியும் எதனை மேலானது என்றும், எது இம்மையிலும், மறுமையிலும் நமக்குப் பலன் தரக்கூடியது என்றும் வலியுறுத்துகிறதோ அதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் எதனை முதன் முதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் மூலம் நாம் […]

நபித்தோழர்களும் மனிதர்களே!

நபித்தோழர்களும் மனிதர்களே! ஆன்மீகத்தின் பெயரால் மக்கள் வழிதவறிவிடக் கூடாது என்பதற்காக ‘நபிமார்களும் மனிதர்களே!’ என்பதை மக்களுக்கு மத்தியில் எடுத்துரைத்து மாற்றம் கண்டு கொண்டிருக்கின்ற வேளையில் ‘ஸஹாபாக்களும் மனிதர்களே!’ என்பதை விளக்க வேண்டிய நிலை. மக்களைத் திருத்துவதற்கும் மார்க்கத்தை அவர்கள் முழுமையாக விளங்குவதற்கும் கடும் முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் அறியாமையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இன்னும் அதளபாதாளத்தில் அவர்களைத் தள்ளும்  கொடுமையை எங்கு போய் சொல்வது? மக்கள் எந்த இடத்தில் நின்றார்களோ அதை விட […]

அல்லாஹ்வின் பண்புகளை  நாம் மறுக்கிறோமா?

அல்லாஹ்வின் பண்புகளை  நாம் மறுக்கிறோமா? அனைத்தையும் படைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அல்லாஹ்வின் குறிப்பிட்ட சில பண்புகளை நாம் மறுப்பதாக சமூக வலைத்தளங்களில் கள்ள ஸலஃபிக் கூட்டத்தினரால்  நமது கொள்கை பற்றி தவறான விமர்சனம் செய்யப்படுகிறது. அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறானா? அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இரவின் மூன்றில் இறுதி  ஒரு பங்கு இருக்கும் போது  பாக்கியம் பெற்ற உயர்ந்துவிட்ட  நமது இறைவன் உலக வானத்திற்கு வந்து என்னை அழைப்பவர் யார்? அவருக்கு நான் பதிலளிப்பேன். என்னிடத்தில் […]

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் ‘‘உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’’ (அல்குர்ஆன்: 49:7) ➚.) ‘உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்’ என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்ற வாக்கியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்று வரை உயிருடன் உள்ளனர் என்பதற்கு ஆதாரமாகும் என்று சமாதி வழிபாட்டுக்காரர்கள் வாதிடுகின்றனர். இவ்வசனம் அருளப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மக்களுடன் இருந்தனர் என்பதைத் தான் இவ்வசனம் சொல்கிறது. மரணிக்காமல் இப்போதும் உயிருடன் உள்ளனர் என்ற […]

Next Page »