(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், (அன்னை ஆயிஷா அவர்களை பற்றிய அவதூறு சம்பவந்தில் பெரும் பங்கு வகித்த) மிஸ்தஹுக்கு எந்தப் பயன்தரும் உதவியும் இனி ஒரு போதும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்க மாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்க ளுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழை […]
Category: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்
a120
அன்னை ஆயிஷா பற்றிய அவதூறு சம்பந்தமாக
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு செல்வார்கள். இவ்வாறே அவர்கள் தாம் மேற் கொண்ட (பனூ முஸ்த-க் என்ற) ஒரு போரின் போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட் டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் […]
மனைவி விபச்சாரத்தில் ஈடுபட்டால்? – ஹிலால் பின் உமய்யா
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் (கர்ப்பவதியான) தம் மனைவியை ஷரீக் பின் சஹ்மா என்பவருடன் இணைத்து (இருவருக் குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி வழங்கப்படும் என்று சொன்னார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தம் மனைவியுடன் ஓர் அன்னிய ஆடவன் இருப்பதைக் கண்டாலுமா ஆதாரம் தேடிக் […]
விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகின்றனர் என்ற வசனம்
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகின்ற சிலரும் மக்களிடையே உள்ளனர் எனும் (22:11 ஆவது) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், சிலர் மதீனாவுக்கு வருவர். (இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்வர்.) அவர்கள் தம் மனைவியர் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால், அவர் களின் குதிரைகள் குட்டி ஈன்றால் அப்போது, இது (-இஸ்லாம்-) நல்ல மார்க்கம் என்று கூறுவார்கள். அவர்களுடைய மனைவியர் ஆண் குழந்தைகள் பெறவில்லையென்றால், அவர்களின் குதிரைகள் […]
மறுமையிலும் தனக்கே செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறிய போது
கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறயதாவது : நான் (அறியாமைக் காலத்தில்) கொல்லனாக (தொழில் செய்து கொண்டு) இருந்தேன். ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. ஆகவே, அதைத் திருப்பித் தரும்படி கேட்டு நான் அவரிடம் சென்றேன். அவர் என்னிடம் நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உனது கடனைச் செலுத்தமாட்டேன் என்று சொன்னார். நான், நீர் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் அவரை ஒரு போதும் நிராகரிக்க மாட்டேன் என்று சொன்னேன். […]
ஜிப்ரீலிடம் நபியவர்கள் கேட்ட போது…
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்: நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன? என்று கேட்டார்கள்.2 அப்போது தான் (நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன் எனும் (19:64ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. (புகாரி: 4731)
ரூஹ் பற்றிய இறைவசனம் இறங்குதல்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண்பூமியில் (பேரீச்சந் தோப்பில்) இருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் (அவ்வழியே) சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள் என்றார். மற்றவர், உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது? என்று அவரிடம் கேட்டார். இன்னொருவர் நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக் கூடாது. (எனவே, அவரிடம் நீங்கள் […]
உண்மைக்குப் பரிசாக இறைவசனங்கள்
4678 அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் பாட்டனார்) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் (இறுதிக் காலத்தில் கண் பார்வையற்ற அவர்களுக்கு) வழிகாட்டியாக இருந்த (என் தந்தை) அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தாம் தபூக் போரில் கலந்து கொள்ளாமலிருந்து விட்ட செய்தியை அறிவித்த போது நான் அவர்களிடமிருந்து (பின்வருமாறு) செவியுற்றேன்: அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை […]
நயவஞ்சகர்கள் தபூக்கில் கலந்து கொள்ளாத போது
4677 அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தையும் (தபூக் போரில் கலந்து கொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப் பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்உஸ்ரா (எனும் தபூக்) போர், பத்ருப் போர் ஆகிய இரு போர்களைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட எந்த அறப்போரிலும் ஒரு போதும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. மேலும் (தபூக் போரில் கலந்து கொள்ளாதது […]
முனாஃபிக்கிற்கு நபி தொழ வைக்க முயன்ற போது
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்து விட்ட போது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடு வதற்காக நபி (ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தமது சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர் […]
முனாஃபிக்குகள் முஸ்லிம்களை குறைகூறிய போது
(புகாரி: 4668)அபூ மஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது நாங்கள் கூலிவேலை செய்யலானோம். அபூஅகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டுவந்தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், (அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக் கொண்டு வந்திருக்கிறார் என்று […]
குகையில் அமைதி இறங்கியது குறித்து
அவர்கள் இருவரும் குகையில் இருந்த போது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கிக் கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிட மிருந்து மன அமைதியை அருளினான் எனும் (9:40ஆவது) வசனத் தொடர். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) சகீனா (மனஅமைதி) எனும் சொல் சுகூன் எனும் வேர்ச் சொல்லிலிருந்து ஃபஈலா எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும். 4663 அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹிஜ்ரத் பயணத்தின் போது) […]
நபியை கேலி செய்த முஸ்லிம்களை கண்டித்து
4621 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒரு போதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள் என்று குறிப்பிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் தம் முகங்களை மூடிக் கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒரு மனிதர், என் தந்தை யார்? […]
மது மற்றும் அது சம்பந்தப்பட்ட வசனங்கள்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும். அபுந் நுஅமான் (ரஹ்) அவர்களிடமி ருந்து முஹம்மத் பின் சலாம் (ரஹ்) அவர்கள் அதிகப்படியாக அறிவித்ததாவது: அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளன்று) நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் இறங்கிற்று. உடனே நபி (ஸல்) அவர்கள் பொது […]
போருக்கு செல்லவேண்டுமே என கண் தெரியாதவர் வருத்தப்பட்ட போது
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: இறை நம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் எனும் (4:95ஆவது) இறை வசனம் இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள், இன்னாரைக் கூப்பிடுங்கள் என்று சொன்னார்கள். (ஸைத் பின் ஸாபித்) அவர்கள், மைக்கூட்டையும் பலகையையும் அல்லது அகலமான எலும்பையும் தம்முடன் கொண்டுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்த (4:95ஆவது) வசனத்தை எழுதிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். […]
முஸ்லிம்களில் சிலர் ஒரு முஸ்லிமை கொன்ற போது…
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 4:94ஆவது வசனம் குறித்துக் கூறியதாவது: ஒரு மனிதர் தனது சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப் பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். (தப்பிப்பதற்காக வேண்டுமென்றே சலாம் கூறத் தெரியாமல் கூறுகிறார் என்று எண்ணி) அவர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். அவரது ஆட்டுமந்தையையும் எடுத்துக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை […]
தயம்மும் சட்டம் இறக்கப்படல்
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணமாகப் புறப்பட்டோம். ‘பைதா’ என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து மாலை அறுந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினார்கள். அவர்களின் அருகில் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை. மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘(உங்கள் மகள்) ஆயிஷா செய்ததைப் பார்த்தீர்களா? நபிகள் நாயகத்தையும் மக்களையும் தங்க வைத்து விட்டார். அவர்கள் அருகில் தண்ணீர் இல்லை. […]
விதவை பெண்கள் சம்பந்தமாக
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒரு மனிதர் இறந்து விட்டால் அவருடைய வாரிசுகளே அவருடைய மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக் கொள்ளவும் செய்வார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்து விடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்காது அப்படியே விட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க) மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாரிசு களான) அவர்கள்தாம் அவள் மீது அதிக உரிமையுடையவர்களாக […]
அநாதை பெண்ணை மணந்த போது
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணம் முடித்துக் கொண்டார். அவளுக்குப் பேரீச்ச மரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் பேரீச்ச மரத்திற்காகவே அந்தப் பெண்ணை அவர் தம்மிடம் வைத்திருந்தார். மற்றபடி அவளுக்கு அவரது உள்ளத்தில் (இடம்) ஏதுமிருக்கவில்லை. ஆகவே அவர் விஷயத்தில்தான் அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, […]
மற்றவை அனைத்தும்
அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ஒரு குகையிலிருந்தோம். அப்போது ‘வல்முர்ஸலாத்’ எனும் அத்தியாயம் அவர்களுக்கு இறங்கியது. அவர்கள் அதை ஓதிக் காட்டினார்கள். நான் அவர்களின் திருவாயிலிருந்து (கேட்டு) அதை மனனம் செய்து கொண்டிருந்தேன். அதை ஓதியதால் அவர்களின் வாய் ஈரமாக இருந்தது. அப்போது ஒரு பாம்பு எங்களை நோக்கிச் சீறியது. உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அதைக் கொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள் அதைக் கொல்ல விரைந்தபோது அது சென்றுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அதன் […]
விற்பதற்காக பொய் சத்தியம் செய்த போது
அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடை வீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர், தான் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்த போது) கொடுக்காத(விலை) ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக (அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்தார். (வாங்க வந்த) முஸ்லிம்களில் ஒருவரைக் கவர்(ந்து அவரிடம் தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது, அல்லாஹ்வின் உடன்படிக் கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த […]
நபியின் தண்ணீர் பங்கீடு தீர்ப்பை ஏற்க மறுத்த போது…
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓட விடு’ என்று கூறினார். ஸுபைர்(ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறையையொட்டி) நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது, நபி(ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு […]
சஹர் நேரத்தை தவறாக கணக்கிட்டபோது
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். ‘கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!’ என்ற (அல்குர்ஆன்: 02:187) ➚ இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் ‘மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)’ என்னும் வாசகம் இருக்கவில்லை! அப்போதெல்லாம் மக்கள் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டு கொண்டே இருப்பார்கள்! பிறகுதான் ‘மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)’ என்னும் வாசகம் (அவ்வசனத்துடன்) இறங்கியது. […]
முன் வாசல் வழியாக நுழைந்தவரை கண்டித்த போது
அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது ‘உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று; மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். எனவே, வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!’ (அல்குர்ஆன்: 02:189) ➚ என்ற […]
அரஃபாவிலிருந்து புறப்படுங்கள் என்ற வசனம்
மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவை) வலம் வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர! ஹும்ஸ் என்றால் குறைஷியர்களும் அவர்களின் சந்ததியர்களுமாவர். இந்த ஹும்ஸ் கிளையார்கள் மக்களுக்கு நற்பணி புரிபவர்களாவர். அவர்களில் ஒர் ஆண் இன்னொரு பெண்ணுக்கு, தவாஃபு செய்வதற்காக ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்க வில்லையோ அவர் நிர்வாணமாக வலம்வருவார். மேலும், மக்கள் அரஃபாவிலிருந்து திரும்பி விடுவார்கள். ஆனால், குறைஷிகளோ எல்லாம் முடிந்த பின்பு முஸ்தலிஃபாவிலிருந்துதான் திரும்புவார்கள். ‘மேலும் மற்றவர்கள் திரும்புகிற […]
ஸஃபா மர்வா இடையே ஓடுவது அவசியமா?
(புகாரி: 1643) உர்வா அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘நிச்சயமாக ஸஃபா மர்வா (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. எனவே, (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ராச் செய்பவர்கள் அவ்விரண்டையும் வலம் வருவது குற்றமில்லை’ என்ற (அல்குர்ஆன்: 02:158) ➚ இறைவசனப்படி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஸஃபா மர்வாவுக்கிடையே வலம் வராவிட்டாலும் குற்றமில்லை என்பது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), ‘என்னுடைய சகோதரியின் மகனே! நீர் சொன்னது தவறு. […]
காலையிலும், மாலையிலும் பிரார்த்திப்போரை விரட்டாதீர்!
தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப் படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல்குர்ஆன்: 18:28) ➚ காலையிலும் மாலையிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் கூட்டத்தாருடன் இருக்குமாறும், […]